இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் தங்களுக்கு திடீரென ஒரு பணம் தேவைப்படுகிறது என்றால் உடனடியாக நாடுவது தங்க நகை கடன்களை தான். நம் கையில் இருக்கக்கூடிய தங்க நகையை கொண்டு சென்று வங்கிகளிலோ அல்லது நிதி நிறுவனங்களிலோ அடகு வைத்தால் அடுத்த 15லிருந்து 30 நிமிடங்களில் பணம் கைக்கு வந்து விடும்.
இந்தியாவில் வேறு எந்த ஒரு சொத்தையும் இவ்வளவு எளிதாக நம்மால் பணமாக மாற்ற முடியாது. அந்த வகையில் சாமானிய மக்கள் தொடங்கி பெரிய பெரிய தொழில் புரிபவர்கள் வரை தங்க நகை கடன்களை தான் அதிகமாக நம்பி இருக்கிறார்கள். வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை பொறுத்தவரையிலும் தங்க நகை கடன்களை வழங்குவதற்கு தான் அதிக முன்னுரிமை தருகின்றன. ஏனெனில் இது ஒரு பாதுகாப்பான கடன். பணம் வாங்கிய நபர் அதனை திரும்ப செலுத்தவில்லை என்றால் கூட வங்கிகள் இந்த நகைகளை ஏலம் விடுத்து தங்களுடைய கடன் தொகையை மீட்டுக் கொள்ளும்.

அதேவேளையில் தனிநபர் கடன்களோடு ஒப்பிடும்போது தங்க நகை கடன்களுக்கான வட்டி குறைவு. எனவே சாதாரண மக்களுக்கும் தங்க நகை கடன்கள் தான் சிறந்தவை. இந்நிலையில் தங்க நகை கடன்களில் இந்திய ரிசர்வ் வங்கி மேஜர் மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. இந்த மாற்றங்களை தங்க நகை கடன் வாங்கி இருப்பார் தெரிந்து வைத்துக் கொள்வது கட்டாயம்.
இதன்படி தங்க நகை கடன் தொகைக்கு புதிய வரம்புகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதாவது 2.5 லட்சம் ரூபாய் வரை கடன் பெறக் கூடியவர்களுக்கு, அவர்கள் அடகு வைக்கக்கூடிய தங்கத்தின் மதிப்பில் அதிகபட்சம் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி தந்திருக்கிறது. இதனை loan to value ratio என அழைக்கிறார்கள். இது தான் நாம் வாங்கும் தங்க நகை கடன் தொகை அளவை முடிவு செய்கிறது.
அப்படி பார்க்கும்போது குறைந்தபட்ச கடன் தொகை வாங்குவோருக்கு குறைந்த அளவு தங்கத்திலேயே அதிக அளவு தொகை கடனாக கிடைக்கும். அதுவே நீங்கள் 2.5 லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுகிறீர்கள் என்றால் நீங்கள் அடகு வைக்கக்கூடிய தங்கத்தின் மதிப்பில் 80 சதவீதம் வரை மட்டுமே கடன் கிடைக்கும். 5 லட்சம் ரூபாய்க்கு மேல் நீங்கள் கடன் வாங்குகிறீர்கள் என்றால் நீங்கள் அடகு வைக்கக்கூடிய தங்கத்தில் 75 சதவீதம் வரையிலான தொகை மட்டுமே கடனாக வழங்கப்படும். எனவே குறைந்த அளவு கடன் வாங்குவோருக்கு இந்த அறிவிப்பு சாதகமாக அமைந்துள்ளது.

கடனை முழுமையாக செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் அடமானமாக வைத்த நகையை பொதுவாக வங்கிகள் அன்றைய தினமே வழங்கி விடும். சில வங்கிகள் தாமதப்படுத்தலாம். அதற்கு இனி அபராதம் செலுத்த வேண்டும். நீங்கள் கடனை முழுமையாக செலுத்திய பிறகும் அடமானமாக வைத்த தங்கத்தை வங்கிகள் அதிகபட்சம் ஏழு நாட்களுக்குள் வாடிக்கையாளரிடம் திரும்ப வழங்கி விட வேண்டும். ஏழு நாட்கள் கழித்தும் உங்களுடைய நகை உங்கள் கைக்கு வந்து சேரவில்லை என்றால் தினசரி ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கியில் உங்களுக்கு அபராதமாக வழங்கும்.
இது ஒவ்வொரு நாளும் 5000 ரூபாய் என கணக்கிடப்பட்டு வாடிக்கையாளருக்கு வழங்கப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. எனவே ஒரு நாள் தாமதமானால் 5000 ரூபாய், 2 நாட்கள் என்றால் 10,000 ரூபாய், 7 நாட்கள் என்றால் 35000 ரூபாய் வங்கிகள் உங்களுக்கு அபராதமாக வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கடிவாளம் போட்டுள்ளது.
மேலும் தங்க நகை கடன் வாங்கும் போது வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் வழங்கக்கூடிய கடன் ஒப்பந்தம் உள்ளூர் மொழியில் தான் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடன் விதிமுறைகள் எளிய மக்களுக்கும் அவர்கள் புரிந்து கொள்ளும் மொழியில் விளக்கப்பட வேண்டும் என்பதே புதிய விதிமுறையின் சாராம்சம். எனவே நீங்கள் கடன் வாங்கும்போது அந்த ஒப்பந்தம் உள்ளூர் மொழியில் இல்லை ஆங்கிலத்தில் தருகிறார்கள் உங்களுக்கு புரியவில்லை என்றால் உள்ளூர் மொழியில் தரும்படி கேட்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!



Click it and Unblock the Notifications

