சில காலமாகவே உலகளவில் மத்திய வங்கிகள் தங்க கையிருப்பை அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் 2025-ஆம் ஆண்டின் மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ரிசர்வ் வங்கியின் தங்கக் கையிருப்பு 57.12 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் ஆர்பிஐ-யின் மொத்த கையிருப்பு மதிப்பு ரூ.4,31,624.8 கோடியாக உயர்ந்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி ஆர்பிஐ-இன் மொத்த கையிருப்பு 54.13 மெட்ரிக் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வங்கித் துறையின் தங்க கையிருப்பு மார்ச் 31, 2024 நிலவரப்படி ரூ. 2,74,714.27 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் 31, 2025 நிலவரப்படி, மொத்தமாக 879.58 மெட்ரிக் டன் தங்க கையிருப்பு துறைகள் வாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில், 311.38 மெட்ரிக் டன் தங்கம் வெளியீட்டுத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

2025-ஆம் ஆண்டின் மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி வங்கித் துறையின் மொத்த தங்கக் கையிருப்பு 568.20 மெட்ரிக் டன்களாக அதிகரித்துள்ளது. இந்த அளவு 2024-ஆம் ஆண்டின் மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி 514.07 மெட்ரிக் டன்களாக இருந்தது.
தற்போது வங்கித் துறை வைத்திருக்கும் தங்கத்தின் மதிப்பு 2025-ஆம் ஆண்டின் மார்ச் மாத நிலவரப்படி ரூ. 4,31,624.80 கோடியாக உள்ளது. இந்தத் தொகை 2024-ஆம் ஆண்டின் மார்ச் 31-ஆம் தேதி அன்று ரூ. 2,74,714.27 கோடியாக இருந்தது. அதிலிருந்து பார்க்கும்போது இந்த 2025-ஆம் ஆண்டில் 57.12 சதவீதம் வரை தங்கத்தின் மதிப்பு அதிகரித்திருக்கிறது.
2025-ஆம் நிதியாண்டுக்கான வருடாந்திர அறிக்கையில் தங்க விலை உயர்ந்தது மற்றும் தங்கக் கையகப்படுத்தல் அதிகரித்ததன் காரணமாக ஆர்பிஐ-இன் மொத்த கையிருப்பு 54.13 மெட்ரிக் டன்களாக உயர்ந்துள்ளது தெரிய வருகிறது. அதோடு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததும் இதற்கு காரணங்களாக கூறப்படுகிறது. தற்போது உலக அளவில் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. சர்வதேச அளவில் ஏழாவது அதிகத் தங்கக் கையிருப்பை வைத்திருக்கும் நாடாகவும் உள்ளது.
வேர்ல்ட் கோல்ட் கவுன்சிலின் புள்ளி விவரங்களின் படி சமீப ஆண்டுகளாக தங்கத்தின் மொத்த இருப்பு அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது. அதாவது தங்க இருப்பு 2021-ஆம் ஆண்டில் இருந்த 6.86 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2024-ஆம் ஆண்டின் இறுதியில் 11.35 சதவீதத்தை எட்டியுள்ளது.
வெளிநாட்டு நாணய கையிருப்பு அதிகரிப்பது பொருளாதாரத்திற்கு ஒரு பாதுகாப்பாக செயல்படுகிறது. பணவீக்க விகிதங்களைக் கட்டுப்படுத்தவும், பொருளாதார சிக்கல்களைத் தீர்க்கவும் இவை மிகவும் முக்கியம். அமெரிக்க டாலர் உலகளவில் முதன்மையான நாணயமாக இருந்து வருகிறது. பெரும்பாலான நாடுகள் சர்வதேச வர்த்தகத்திற்கு வசதியாக தங்கள் அந்நிய செலவாணி கையிருப்பை டாலர்களில் தான் பராமரிக்கின்றன. இருப்பினும் டாலர் மதிப்பில் சரிவு ஏற்படும் போது மத்திய வங்கிகள் தங்கத்தை ஒரு மாற்றுச் சொத்தாக அதிகரிக்கத் தொடங்கும்.


Click it and Unblock the Notifications