சென்னை: அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நிலையில் பண பரிவர்த்தனை மற்றும் பண பரிமாற்றம் போன்றவற்றிற்காக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு ஆகியவற்றின் பயன்பாடும் அதிகமாகிவிட்டது. இதனால் அதில் தொடர்புடைய மோசடிகளும் அதிகரித்து விட்டன. இதனைத் தடுக்கும் விதமாக RBI சில புதிய விதிகளை அமல்படுத்த உள்ளது,
இந்த டிஜிட்டல் பண பரிமாற்றத்தினை சாதகமாக்கி பல மோசடிகளும் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இந்த மாதிரியான பிரச்சனைகளை சரி செய்வதற்காக இந்திய ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல முயற்சிகளையும் செய்து வருகிறது.

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு ஆகியவற்றின் தகவல்களை வைத்திருத்தல் தொடர்பான விதி 2025ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 1 முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பண பரிவர்த்தனையின் பொழுது வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பற்றிய தகவல்களை பணம் செலுத்தும் நிறுவனங்கள் சேமித்து வைக்காமல் இருக்க இந்திய ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பண பரிமாற்றம் செய்யும் போது ஏதுவான வகையில் செயல்முறைகளை எளிதாக்க உள்ளது.
நடைமுறைப்படுத்தப் போகும் புதிய விதிகளின்படி எந்த ஒரு பணம் செலுத்தும் நிறுவனமும் வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டின் தகவல்களை சேமித்து வைக்க முடியாது. அதற்கான அங்கீகரிக்கப்பட்ட அதிகாரமானது அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட மாட்டாது, என இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வருகின்ற 2025 ஆம் ஆண்டு அமல்படுத்தப்படும் விதியின்படி வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பற்றிய தகவல்கள் அந்தக் கார்டை வைத்திருப்பவர் மற்றும் நெட்வொர்க் ஆகியோரால் மட்டுமே அறிந்திருக்கப்படும்.
இந்த விதிமுறைகள் யாவும் நடைமுறைக்கு வரவில்லை என்றாலும் இதற்கான திட்டமிடல் நிறைவு செய்யப்பட்டு விட்டது. பொதுமக்களிடமிருந்து இதற்கான பரிந்துரைகளோ ஆட்சேபனைகளோ மாற்று கருத்துக்களோ ஏதேனும் இருப்பின் இந்திய ரிசர்வ் வங்கி அவற்றினை வரவேற்கிறது.
வரவேற்கப்பட்ட பரிந்துரைகள் யாவும் மறுபரிசீலனை செய்யப்பட்டு இதற்கான செயல் திட்டமானது நிறைவேற்றப்படும். ஏற்கனவே அறிவித்தபடி இந்திய ரிசர்வ் வங்கி அதன் கோட்பாடுகளை அமல்படுத்தி நடைமுறைக்கு கொண்டு வரும் என அறிவிப்பு வெளியான நிலையில், இந்திய வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் அவர்களது கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பற்றிய தகவல்களை யாரிடமும் பகிராமல் இருப்பது நல்லது.
பல்வேறு வகையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வந்தாலும் கூட இணையவழி பண பரிமாற்றம் மற்றும் பண பரிவர்த்தனையின் பொழுது சிக்கல்களும் பல மோசடிகளும் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இத்தகைய சிக்கலான சூழ்நிலை இருந்தாலும் நேரத்தை மிச்சப்படுத்தவும் நுகர்வோர் தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய காத்திருக்கும் அவசியம் ஏற்படாமல் இருக்கவும் இந்த இணையவழி பண பரிமாற்றத்தை விரும்புகின்றனர்.
அவசர தேவைகளுக்கு வங்கிகளில் வரிசையில் நிற்க முடியாத பலருக்கும் இந்த ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வழி எளிதாகவும் அவசியமாகவும் இருக்கிறது. எனினும் இதில் நிகழும் பல மோசடிகளால் பாதுகாப்பு இல்லாத தன்மையே நிலவுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் விதமாக மேற்கண்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் பல மோசடிகள் தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications