இந்தியாவில் எப்போதும் இல்லாமல் வகையில் பல வகையில் நிதி மோசடிகள் நடந்து வரும் வேளையில், இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து வங்கி மற்றும் என்பிஎஃப்சி-களின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்த கண்காணிப்பில் விதிமுறைகளை பின்பற்றாத 35 நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழை ஆர்பிஐ ரத்து செய்துள்ளது. இந்த ரத்துக்கள் அனைத்தும் டிசம்பர் 9 முதல் 31 வரையிலான காலக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வங்கி மற்றும் நிதி துறையில் வாராக் கடன், நிதி மோசடிகள், வங்கிகள் முறையாக தனது நிதி நிலையை ஆர்பிஐ-க்கு ஒப்படைக்காதது என பல விஷயங்களை முன்னிறுத்தி ஆர்பிஐ தொடர்ந்து அனைத்து வங்கிகள் மற்றும் NBFC-களையும் ஆய்வு செய்து வருகிறது.

இந்த சோதனையில் ஆர்பிஐ பல வங்கிகளுக்கு வார்னிங் கொடுத்துள்ளது, பல வங்கிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது வருடம் முழுக்க நடைபெறும் ஒரு செயல்முறை என்பதால் அவ்வபோது வங்கி உரிமம் தொடர்பான அறிவிப்புகள் வரும்.
தற்போது உரிமம் ரத்து செய்யப்பட்ட நடவடிக்கை மூலம், இந்த நிறுவனங்கள் இனி NBFC சேவைகளை வழங்க முடியாது. இது போன்ற நடவடிக்கைகள், நிதி துறையில் வெளிப்படைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்துவதற்காக ஆர்பிஐ எடுத்து வருகிறது. இதனால் சாமானிய மக்களின் முதலீடுகள் பாதுகாக்கப்படுகின்றன.
உரிமம் ரத்து செய்யப்பட்ட நிறுவனங்களின் விவரங்கள்:
இந்த ரத்து நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் பெரும்பாலும் டெல்லியை சேர்ந்தவை, சில மும்பை, ஜபல்பூர் போன்ற இடங்களைச் சேர்ந்தவை. உதாரணமாக, சத்திய பிரகாஷ் கேபிடல் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் (ஜபல்பூர்), ஏஜி செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் (டெல்லி), ஏஎல்பி லீசிங் அண்ட் ஃபைனான்ஸ் லிமிடெட் (நியூ டெல்லி) உள்ளிட்டவை இதில் அடங்கும்.
மேலும், ஏடிஎம் கிரெடிட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், கார்ப்பரேட் கேபிடல் சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், டெசிசிவ் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட், டிவைன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், லிபர்டி சேல்ஸ் பிரைவேட் லிமிடெட், பேர்ல்ஸ் ஹையர் பர்ச்சேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட், குவாசர் இந்தியா ஃபின்கேப் பிரைவேட் லிமிடெட், சன்லைஃப் சீக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட், சன்ரைஸ் மேனுஃபேக்ச்சரிங் கோ லிமிடெட், ஸ்விடோ ஃபைனான்ஸ் அண்ட் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட், டிரிவேனி வினிமே பிரைவேட் லிமிடெட், ட்வென்டி ஃபர்ஸ்ட் சென்ச்சூரி மார்க்கெட்டிங் லிமிடெட், யூனிட்ரான் ஃபின்லீஸ் லிமிடெட், வீரா சீக்யூரிட்டீஸ் அண்ட் ஃபின்லீஸ் பிரைவேட் லிமிடெட், வினி ஃபைனான்ஷியல் அண்ட் மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை டெல்லியைச் சேர்ந்தவை.
மும்பையைச் சேர்ந்த ஷிவோம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் கன்சல்டன்சி லிமிடெட் போன்றவையும் இதில் உள்ளன. இவை அனைத்தும் விதிமுறைகளை மீறியதால் இந்த நிலைக்கு ஆளாகியுள்ளன.
மேலும் ரத்து செய்யப்பட்ட NBFCகள் பட்டியலில் அதினாத் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், அக்ரோஹா சேவிங்ஸ் லிமிடெட், அஹுசன்ஸ் ஃபைனான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆல்டர் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட், அசோசியேட்டட் லீசிங் லிமிடெட், அட்லாண்டிக் லீசிங் லிமிடெட், பிஎச்எல் ஃபோரெக்ஸ் அண்ட் ஃபின்லீஸ் லிமிடெட், பாரத்பூரியா ஃபைனான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட், தாதா தேவ் ஃபைனான்ஸ் அண்ட் லீசிங் பிரைவேட் லிமிடெட், ஈஸ்ட் டெல்லி லீசிங் பிரைவேட் லிமிடெட், எக்னாமிக் கேபிடல் சர்வீஸஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், இஎஸ்என் ஃபைனான்ஸ் அண்ட் கேபிடல் சர்வீஸஸ் லிமிடெட், எஃப்எம்ஐ இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், கண்பதி ஃபின்கேப் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட், குட்வொர்த் சீக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட், கோபால் ஓவர்சீஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் இனி எந்தவித நிதி சேவைகளையும் வழங்க இயலாது, இது நிதி சந்தையின் ஒழுங்குமுறையை வலுப்படுத்தும்.
தானாக முன்வந்து பதிவு சான்றிதழை ஒப்படைத்த 16 NBFC நிறுவனங்கள் பட்டியல்:
இந்த 16 NBFC நிறுவனங்கள் தாங்களாகவே தங்கள் பதிவுச் சான்றிதழை ரிசர்வ் வங்கிக்கு சரணடைந்துள்ளன, இதனால் அவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவை மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
முதலாவதாக, NBFC தொழிலை விட்டு வெளியேறியவை: தர்மேஷ் ஸ்டாக் ப்ரோக்கிங் பிரைவேட் லிமிடெட் (மும்பை), மில்லெனியம் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் (கொல்கத்தா), செலஸ்டியல் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (கொல்கத்தா), தமயந்தி ஃபைனான்ஸ் அண்ட் ப்ராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட் (சென்னை), லிக்விட் பேப்பர் ஃபின்சர்வ் பிரைவேட் லிமிடெட் (டெல்லி), பீர்லெஸ் ஃபைனான்ஷியல் சர்வீஸஸ் லிமிடெட் (கொல்கத்தா), பார்க் அவென்யூ இஞ்சினியரிங் லிமிடெட் (மும்பை), அர்விந்த் ஓவர்சீஸ் ப்ராஜெக்ட் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட் (டெல்லி).
இரண்டாவதாக, பதிவு செய்யப்படாத கோர் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனிகளுக்கான (சிஐசி) அளவுகோல்களை பூர்த்தி செய்தவை. இதில் ஷ்யாம் பேசிக் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (ஜெய்ப்பூர்), ஷ்ருதி ஃபின்செக் பிரைவேட் லிமிடெட் (கான்பூர்), சீதா இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி லிமிடெட் (ராய்ப்பூர்).
மூன்றாவதாக வங்கி செயல்பாடுகளை இணைப்பு, கலப்பு, கலைப்பு அல்லது தானாக பெயரை நீக்குதல் போன்ற காரணங்களால் மூடப்படும் NBFC-க்கள்: எடெல்வைஸ் ரீடெயில் ஃபைனான்ஸ் லிமிடெட் (மும்பை), சூப்பர் கமாடிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் (கொல்கத்தா), சில்ஃபிக்ஸ் டிரேட்லிங்க் பிரைவேட் லிமிடெட் (கொல்கத்தா), சக்தி டிரேடர்ஸ் பிரைவேட் லிமிடெட் (கொல்கத்தா), யதுகா ஃபைனான்ஷியல் சர்வீஸஸ் லிமிடெட் (கொல்கத்தா).
இந்த உரிமம் ரத்துகள் மூலம் சாதாரண மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டியது, எப்போதும் பணத்தை முதலீடு செய்யும் போது, இது போன்ற நிறுவனங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டியது அவசியம்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications