ஐஏஎஸ் வேலையை உதறிவிட்டு ரூ.2.9 கோடி நிறுவனத்தை உருவாக்கிய சாதனை மனிதர்

எப்படியாவது கஷ்டப்பட்டு நன்றாகப் படித்து ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கிறது. ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக ஆகி தனது சொந்த மாவட்டத்தில் கலெக்டராகப் பெருமையுடன் வேலை பார்க்க வேண்டும் என்ற நினைப்புடன் ஏராளமானவர்கள் உள்ளனர்.

UPSC தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு அவர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு படிக்க வேண்டும். அதில் வெற்றி பெற பிரிலிமினரி, மெயின்ஸ், இண்டர்வியூ என்ற மூன்று நிலைகளைத் தாண்ட வேண்டும். இருப்பினும் இந்த சிவில் சர்வீஸ் வேலைகளை உதறித் தள்ளிவிட்டு எத்தனையோ பேர் பல நிறுவனங்களுக்குத் தலைவர்களாகச் சென்று பதவி வகிக்கின்றனர்.

ஐஏஎஸ் வேலையை உதறிவிட்டு ரூ.2.9 கோடி நிறுவனத்தை உருவாக்கிய சாதனை மனிதர்

அப்படிப்பட்ட ஒருவர் தான் ஆர்சி பார்கவா, மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் தலைவர். அவர் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். அவரது பேட்ச்சில் அவர் தான் முதலாவது நபர். 1956 இல் அவர் ஐஏஎஸ் பதவியை பெற்றார்.

சுமார் 25 வருடம் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிவிட்டு 1981 ஆம் ஆண்டு RC Bhargava மாருதி சுசூகி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு இயக்குநராக சேர்ந்தார். அதன்பின்னர் அவர் அந்த நிறுவனத்தில் பல்வேறு பதவிகளை வகித்தார்.

நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகியின் தலைவராக கடந்த 2007 ஆம் ஆண்டில் பதவி ஏற்றார். கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதிப்படி அந்த நிறுவனத்தின் மார்க்கெட் மூலதனம் ரூ.2,90,000 கோடியாகும். அதன் பங்கு மதிப்பு ரூ.9,622.30 ஆகும்.

அலகாபாத் பல்கலைக்கழகத்தில் கணக்கியலில் பார்கவா முதுநிலை பட்டம் படித்தார். வில்லியம்ஸ் கல்லூரியில் அவர் மாஸ்டர் ஆப் ஆர்ட்ஸ் இன் டெவலப்மென்ட் எக்கனாமிக்ஸ் பட்டம் முடித்தார். அவர் டூன் ஸ்கூலில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.

ஐஏஎஸ் பணியில் நீண்டகாலம் பணியாற்றிய பிறகு அவர் 1981 ஆம் ஆண்டில் மாருதி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் கமர்ஷியல் பிரிவில் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். ஐஏஎஸ் அதிகாரியாக மத்திய எனர்ஜி அமைச்சகத்தில் இந்திய அரசின் இணை செயலராக 1974-77 காலகட்டத்தில் பணியாற்றினார்.

1977-78 காலகட்டத்தில் இந்திய அரசின் கேபினட் செக்ரடேரியேட்டில் இணை செயலராகவும் இருந்துள்ளார். 2016 ஆம் ஆண்டில் அவருக்கு நாட்டின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் பட்டம் வழங்கப்பட்டது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+