பெங்களூரு: பெங்களூரு தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மூன்று ஏரிகளை மீட்டெடுத்துள்ளது. இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரமான பெங்களூரு கடந்த சில மாதங்களாக தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டிருக்கிறது.
மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் பெங்களூரு தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண ராயல் சேலஞ்சர்ஸ் அணி தன் பங்கை முன்னெடுத்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மூன்று ஏரிகளை மீட்டெடுத்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏரிகளை மேம்படுத்தும் திட்டத்தை முன்னெடுத்தது ஆர்சிபி அணி.
தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் அமைந்திருக்கும் ஏரிகளை தூர்வாரி மேம்படுத்துவது இந்த திட்டத்தின் பிரதான நோக்கம். இதற்கு ஆர்சிபி அணியின் கோ கிரீன் முயற்சியின் ஒரு பகுதியாக இது முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் காவிரி நீர் கிடைக்கப் பெறாத மற்றும் நிலத்தடி நீரை ஆதாரமாக நம்பி உள்ள பகுதிகளில் அமைந்துள்ள ஏரிகளை மீட்டெடுப்பதாக ஆர்சிபி அணி அறிவித்தது.
தற்போது ஆர்சிபி அணி மூன்று ஏரிகளை மீட்டமைத்துள்ளது. இட்கல்புரா மற்றும் சடேன ஹள்ளி ஏரிகளில் முதல் கட்ட பணிகள் தொடங்கப்பட்டன. இந்த இரண்டு ஏரிகளிலும் 1.20 டன் வண்டல் மண் அகற்றப்பட்டது. சுமார் 9 ஏக்கர் பரப்பளவிலான ஏரி நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதனால் ஏரிகளின் பரப்பளவு தற்போது கூடியிருக்கிறது. இந்த பகுதிகளில் நிலத்தடி நீரானது ஆயிரம் மற்றும் 1500 அடிக்கு கீழ் சென்று விட்டது.
தற்போது ஏரிகளின் நீர் கொள்ளளவு 17 ஏக்கர் என்ற அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது, இந்த ஏரிகள் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு மட்டுமல்லாமல் வேளாண் நடவடிக்கைகளுக்கும் உதவும் என ஆர்சிபி அணியின் வைஸ் பிரசிடெண்ட் ராஜேஷ் மேனன் கூறியுள்ளார். இந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு முக்கிய வாழ்வாதாரமே இந்த ஏரிகள் தான் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏரிகளை மீட்டெடுத்ததன் மூலம், நீர்நிலை சார்ந்து வாழும் பறவைகள் மற்றும் விலங்குகளும் பலனடைந்துள்ளன. அதேபோல பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு பணிகளை கண்ணூர் ஏரியில் ஆர்சிபி அணி மேற்கொண்டுள்ளது.
இந்த மூன்று ஏரிகளுக்கு அருகிலேயே மூங்கில் பூங்கா, பட்டாம்பூச்சி பூங்கா போன்ற பூங்காக்களையும் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்ற வருகின்றன.
Story written by: Devika
More From GoodReturns

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்



Click it and Unblock the Notifications