இந்தியாவின் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்த்து காத்திருக்கக் கூடிய ஒரு விளையாட்டு போட்டி தான் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள். இதில் நடப்பு சாம்பியன் ஆக பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இருக்கிறது. இந்த அணி கடந்த ஆண்டு தான் முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
தற்போது ஆர்சிபி அணி உரிமையாளராக பிரிட்டனை சேர்ந்த பிரபல நிறுவனமான டிடாஜியோவின் இந்திய பிரிவான யுனைடெட் லிமிடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் இருக்கிறது. அந்த நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை விற்பனை செய்யப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்திய ஐபிஎல் அணிகளிலேயே அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட ஆர்சிபி அணியை வாங்குவதற்கு பல்வேறு நபர்கள் மத்தியில் கடுமையான போட்டி காணப்பட்டது.

இந்த ஏலத்தில் கலந்து கொள்வதற்கு மார்ச் 16ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த போட்டியில் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அடர் பூனவல்லா , மணிப்பால் குழுமத்தின் தலைவர் ரஞ்சன்பாய், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஈக்விட்டி என்ற நிறுவனம் உட்பட 10 பேர் போட்டி போட்டனர். வரும் 28ஆம் தேதியிலிருந்து ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் அதற்குள் ஆர்சிபி அணியின் புதிய முதலாளியை முடிவு செய்து விட வேண்டும் என முடிவு செய்திருக்கிறார்களாம்.
அந்த வகையில் ஆர்சிபி அணியை வாங்குவதற்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்த ஏலத்தில் பங்கேற்பதற்கான காலக்கெடு முடிந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வாங்கும் போட்டியில் இருந்து அடல் பூனவல்லா விலகி விட்டார். தற்போது இரண்டு பேர் மத்தியில் கடுமையான போட்டி நிலவுவது தெரியவந்திருக்கிறது. ஒன்று மணிப்பால் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவரான ரஞ்சன் பாய். அவர் அமெரிக்க தனியார் ஈக்விட்டி நிறுவனம் மற்றும் சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனத்தோடு இணைந்து rcb அணியை வாங்குவதற்கு ஒப்பந்தம் கோரியிருக்கிறார்.

அதேபோல ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஈக்விட்டி நிறுவனம் , லிப்ரோ நிறுவனர் அசின் பிரேம்ஜியின் முதலீட்டு அலுவலகமான பிரேம்ஜி இன்வெஸ்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கூட்டாக ஒப்பந்தம் கேட்டுள்ளன. ஆர்சிபி என்ற பிராண்டின் கீழ் இருக்கக்கூடிய மகளிர் ஐபிஎல் அணியும் இந்த ஒப்பந்த மூலம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
தற்போது ஆர்சிபி அணிக்கு உரிமையாளராக இருக்கக்கூடிய யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் 2 பில்லியன் டாலர் அதாவது 18,520 கோடி ரூபாய் வரை விலை கேட்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் ஐபிஎல் -இன் பிரான்ட் வேல்யூ 3.9 பில்லியன் டாலராக இருக்கிறது, இதில் 269 மில்லியன் டாலர்களுடன் ஆர்சிபி தான் முதலிடத்தில் இருக்கிறது, இரண்டாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் மூன்றாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இடம் பெற்று இருக்கின்றன.


Click it and Unblock the Notifications