IPL போட்டிகள் துவங்க உள்ள நிலையில் இரு முக்கிய அணிகளின் உரிமையாளர்கள் அந்த அணியில் உரிமையை விற்றுவிட்டு மொத்தமாக வெளியேற முடிவு செய்தனர். அதில் ஒன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றொன்று விராத் கோலியின் ஆஸ்தான அணியான RCB. இரு அணிகளையும் வாங்குவதற்கு பல நிறுவனங்கள் போட்டிப்போட்டாலும் கடைசியில் வென்றது இந்திய தொழில்திபர் தான்.
இந்திய பிரீமியர் லீக் (IPL) வரலாற்றில் மிகப்பெரிய ஒப்பந்தங்களில் ஒன்றாக, Royal Challengers Bangalore அணி சுமார் 1.8 பில்லியன் டாலர் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 16916.4 கோடி ரூபாய் (இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 93.98).
இந்த ஒப்பந்தம், இந்திய T20 கிரிக்கெட் லீக் அணிகளின் மதிப்பீட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. மேலும் ஆர்சிபி அணியின் இந்த மதிப்பு முக்கிய பென்ச்மார்க் ஆக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாங்கியது யார்?
இந்த RCB அணியை ஆதித்யா பிர்லா குழுமம், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம், போல்ட் வென்ச்சர்ஸ் மற்றும் பிளாக்ஸ்டோன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வாங்கியுள்ளன. இதனால் இனி ஆர்சிபி அணி ஒரு நிறுவனத்தை மட்டுமே சார்ந்து இருக்க தேவையில்லை.
இந்த கூட்டணியில் சர்வதேச முதலீட்டாளர்களின் பங்கேற்பு, இந்திய கிரிக்கெட் சந்தையில் உலகளாவிய ஆர்வம் அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது. பிளாக்ஸ்டேன் அமெரிக்காவின் மிகப்பெரிய alternative investment management நிறுவனமாகும், போல்ட் வென்ச்சர்ஸ் என்பது ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஒரு வென்சர்ஸ் கேப்பிடல் நிறுவனமாகும்.
IPL அணிகள் - மதிப்பீட்டில் வேகமான உயர்வு
RCB-ன் 1.8 பில்லியன் டாலர் மதிப்பு, கடந்த ஆண்டு Gujarat Titans அணி 900 மில்லியன் டாலர் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டதை விட இரட்டிப்பாக அதிகமாகும். இந்த வேகமான உயர்வு, ரசிகர்கள் ஈடுபாடு, விளம்பர வருவாய் மற்றும் டிஜிட்டல் பார்வையாளர்கள் அதிகரிப்பு ஆகியவற்றின் தாக்கத்தால் உயர்ந்துள்ளது.
யுனைடெட் ஸ்பிரிட்ஸ்-க்கு பெரும் லாபம்
RCB அணியை ஆஸ்தான உரிமையாளர் விஜய் மல்லையா, இவர் கட்டுப்பாட்டில் United Spirits Limited இருந்த போது தான் கிங்பிஷர் பிராண்டை முன்னிலைப்படுத்தி வாங்கினார். யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தை Diageo நிறுவனம் கைப்பற்றியதன் மூலம் ஆர்சிபி உரிமையும் இந்த நிறுவனத்திற்கு வந்தது.
இன்றைய ஆர்சிபி அணியின் விற்பனை ஒப்பந்தத்தின் மூலம் சுமார் 16 மடங்கு லாபத்தை பெற்றுள்ளது யுனைடெட் ஸ்பிரிட்ஸ் உரிமையாளரான டியாஜியோ.
2008ல் ஆர்சிபி அணி வெறும் 111.6 மில்லியன் டாலருக்கு வாங்கிய மதிப்பிலிருந்து தற்போது 1.8 பில்லியன் டாலருக்கு விற்கப்பட்டு உள்ளது. இது யுனைடெட் ஸ்பிரிட்ஸ்-க்கு பெரும் லாபமாகும்.
புதிய நிர்வாகம் - புதிய தலைமை
புதிய உரிமையாளர்கள் அமைப்பில், ஆர்யமன் விக்ரம் பிர்லா RCB அணியின் தலைவர் (Chairman) ஆகவும், Satyan Gajwani துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குமார் மங்கலம் பிர்லா
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான குமார் மங்கலம் பிர்லாவின் மகனான ஆர்யமன் விக்ரம் பிர்லா, ஒரு இடது கை பேட்ஸ்மேன், இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தவர். 2018 IPL ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
மத்தியப் பிரதேச அணிக்காக விளையாடிய திறமையான முதல் தர வீரராகத் திகழ்ந்தபோதிலும், மனநலத்தின் மீது கவனம் செலுத்துவும், வர்த்தகத்தின் மீது கவனும் செலுத்த முடிவு செய்து 2019-ஆம் ஆண்டில் அவர் கிரிக்கெட்டிலிருந்து விலகி ஓய்வு எடுத்துக்கொண்டார்.
ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள்
இன்று செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், RCB ஆண்கள் அணியுடன் சேர்த்து Women's Premier League அணியும் புதிய உரிமையாளர்களுக்கு கிடைக்கிறது. இது வருவாய் வாய்ப்புகளை மேலும் விரிவாக்கும் முக்கிய அம்சமாகும்.
Rajasthan Royals ஒப்பந்தம்
RCB விற்பனைக்கு முன்பாக, Rajasthan Royals அணி 1.6 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த அணியை அமெரிக்க தொழிலதிபரான Kal Somani வாங்கியுள்ளார். அவருக்கு Rob Walton மற்றும் Hamp family ஆதரவளித்துள்ளனர். இவர்கள் அமெரிக்காவின் National Football League அணிகளின் உரிமையாளர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
RCB மற்றும் Rajasthan Royals ஒப்பந்தங்கள், IPL அணிகள் வெறும் விளையாட்டு அணிகள் அல்ல; மிகப்பெரிய வணிக சொத்துகளாக மாறிவிட்டதை காட்டுகிறது. ஒரு முறை கப்பை வென்ற ஆர்சிபி அணியே 1.8 பில்லியன் டாலர் எனில் அப்போ நம்ம சிஎஸ்கே..!!
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications