ஆர்டிபி குழுமத்தை சேர்ந்த ஆர்டிபி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் அண்ட் பவர் நிறுவனம், ரியல் எஸ்டேட் டெவலப்மென்ட் மற்றும் கட்டுமான வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் முன்பு ஆர்டிபி ரியாலிட்டி அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது. கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம், புதுடெல்லி, மும்பை, ஹைதராபாத், ஜெய்ப்பூர் மற்றும் சென்னை உள்பட பல்வேறு வேகமாக வளர்ந்து நகரங்களில் வலுவான வர்த்தக இருப்பை கொண்டுள்ளது.
தொடர்ந்து லாபத்தை ஈட்டி வரும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இந்நிறுவனம் கடந்த 2023-24ம் நிதியாண்டில் வருவாயாக ரூ.83.31 கோடி ஈட்டியுள்ளது. மேலும் அந்த நிதியாண்டில் நிகர லாபமாக ரூ.3.86 கோடி ஈட்டியுள்ளது. 2024 ஜூன் மற்றும் செப்டம்பர் காலாண்டுகளிலும் இந்நிறுவனம் லாபம் சம்பாதித்துள்ளது. இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் திருப்திகரமாக இருப்பதால் முதலீட்டாளர்கள் எப்போதும் இந்நிறுவன பங்கின் மீது ஒரு பார்வை வைத்துள்ளனர். மேலும், இந்நிறுவன பங்கு கடந்த 5 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை அள்ளிக் கொடுத்துள்ளது.

கடந்த வருடத்தில் ஆர்டிபி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் அண்ட் பவர் நிறுவன பங்கு விலை 437.21 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம், ட்ரெண்ட்லைன் தரவுகளின்படி, இதேகாலத்தில் ரியல் எஸ்டேட் துறை 10.37 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டது. மேலும், கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 2,500 சதவீதம் ஆதாயத்தை கொடுத்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.536.50ஆக இருந்தது. 2024 டிசம்பர் 10ம் தேதியன்று இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.612.65ஐ எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆர்டிபி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இந்நிறுவனம் தனது பங்கின் பங்கு பிரிப்பு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒரு ஈக்விட்டி பங்கினை முழுவதும் செலுத்தப்பட்ட ரூ.1 முக மதிப்பு கொண்ட 10 பங்குகளாக பிரிக்க உள்ளது. இதற்கு இந்நிறுவனத்தின் இயக்குனர்களும் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் பங்கு பிரிப்பு நடவடிக்கைக்கு உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்ற பிறகு, பங்கு பிரிப்புக்கான பதிவு தேதி அறிவிக்கப்படும் என இந்நிறுவனம் அண்மையில் தெரிவித்து இருந்தது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications