ஆர்டிபி குழுமத்தை சேர்ந்த ஆர்டிபி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் அண்ட் பவர் நிறுவனம், ரியல் எஸ்டேட் டெவலப்மென்ட் மற்றும் கட்டுமான வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் முன்பு ஆர்டிபி ரியாலிட்டி அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது. கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம், புதுடெல்லி, மும்பை, ஹைதராபாத், ஜெய்ப்பூர் மற்றும் சென்னை உள்பட பல்வேறு வேகமாக வளர்ந்து நகரங்களில் வலுவான வர்த்தக இருப்பை கொண்டுள்ளது.
தொடர்ந்து லாபத்தை ஈட்டி வரும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இந்நிறுவனம் கடந்த 2023-24ம் நிதியாண்டில் வருவாயாக ரூ.83.31 கோடி ஈட்டியுள்ளது. மேலும் அந்த நிதியாண்டில் நிகர லாபமாக ரூ.3.86 கோடி ஈட்டியுள்ளது. 2024 ஜூன் மற்றும் செப்டம்பர் காலாண்டுகளிலும் இந்நிறுவனம் லாபம் சம்பாதித்துள்ளது.

இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் திருப்திகரமாக இருப்பதால் முதலீட்டாளர்கள் எப்போதும் இந்நிறுவன பங்கின் மீது ஒரு பார்வை வைத்துள்ளனர். மேலும், இந்நிறுவன பங்கு கடந்த 5 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை அள்ளிக் கொடுத்துள்ளது.
கடந்த வருடத்தில் ஆர்டிபி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் அண்ட் பவர் நிறுவன பங்கு விலை 437.21 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம், ட்ரெண்ட்லைன் தரவுகளின்படி, இதேகாலத்தில் ரியல் எஸ்டேட் துறை 10.37 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டது. மேலும், கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 2,500 சதவீதம் ஆதாயத்தை கொடுத்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.536.50ஆக இருந்தது. 2024 டிசம்பர் 10ம் தேதியன்று இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.612.65ஐ எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆர்டிபி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இந்நிறுவனம் தனது பங்கின் பங்கு பிரிப்பு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒரு ஈக்விட்டி பங்கினை முழுவதும் செலுத்தப்பட்ட ரூ.1 முக மதிப்பு கொண்ட 10 பங்குகளாக பிரிக்க உள்ளது.
இதற்கு இந்நிறுவனத்தின் இயக்குனர்களும் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் பங்கு பிரிப்பு நடவடிக்கைக்கு உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்ற பிறகு, பங்கு பிரிப்புக்கான பதிவு தேதி அறிவிக்கப்படும் என இந்நிறுவனம் அண்மையில் தெரிவித்து இருந்தது.
Story written by: Subramanian
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications