இந்தியா பொருளாதாரத்தில் கடந்த 3 வருடங்களாக ஏற்பட்டு வரும் தொடர் வீழ்ச்சி கொரோனா பாதிப்பால் மோசமான நிலையை அடைந்துள்ளது. இதன் எதிரொலியாக நாட்டின் பணவீக்கம் அடுத்த ஒரு வருடத்திற்கு மிகவும் அதிகமாக இருக்கும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே பல கோடி மக்கள் வேலைவாய்ப்புகளையும், வருமானத்தையும் இழந்து தவித்து வரும் வேளையில், குறிப்பாகச் சாமானிய மக்களின் தினசரி வாழ்க்கையைப் புரட்டிப்போடும் அளவிற்கு நாட்டின் பணவீக்கம் உயரும் எனக் கணிப்பு வெளியாகியுள்ளது நிதியியல் வாயிலாக மக்களை மேலும் பயமுறுத்துகிறது.
அடுத்த ஒரு வருடத்தில் இந்தியாவில் பணவீக்கத்தின் அளவு எந்த அளவிற்கு உயரும் என்பதை ரிசர்வ் வங்கி கணித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
பணவீக்கம்
இந்திய ரிசர்வ் வங்கி செய்த ஆய்வில் இந்திய மக்களை நேரடியாகத் தொடர்புடைய வீட்டுடைமை பணவீக்கம் (Households inflation) எப்போதும் இல்லாத வகையில் அடுத்த ஒரு வருட காலத்திற்கு 10.3 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது.
இதன் வாயிலாகத் தற்போதைய நிதிநிலையை வைத்துப் பார்க்கும்போது நுகர்வோர் செலவு செய்யும் மனப்பானமை வரலாறு காணாத விதமாக 49.9 சதவீதமாகச் செப்டம்பர் மாதம் சரிந்துள்ளது.
விலைவாசி
இந்த வீட்டுடைமை பணவீக்கம் என்பது நுகர்வோர் மற்றும் மொத்த விலை பணவீக்கத்தில் இருக்கும் ஒரு சிறிய அதேபோல் முக்கியமான அளவீடாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் சந்தையில் வாங்கப்படும் பொருட்களும், பொருட்களின் அளவீடும் பெரிய அளவில் குறைந்துள்ளதால் தொழிற்சாலையில் உற்பத்தியும் அதிகளவில் குறைந்துள்ளது. இதனால் ரிசர்வ் வங்கியின் 2 முதல் 6 சதவீத விலைவாசி உயர்வு அளவீட்டை விடும் அதிகமாகியுள்ளது.
இதனால் மக்கள் வாங்கும் உணவு முதல் எரிபொருள் வரையில் விலைவாசி அதிகரிக்கும் நிலை ஏற்படும்.
இலக்கு
ரிசர்வ் வங்கி நாட்டின் ரீடைல் பணவீக்கத்தை 4 சதவீத அளவீட்டில் தக்கவைக்க வேண்டும் என முயற்சி செய்து வரும் வேளையில், செம்படம்ப்ர் மாதத்தில் ரீடைல் பணவீக்கம் 6.69 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது தற்போது சந்தையில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலைவாசி உயர்வில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
இந்நிலையில் அடுத்த ஒரு வருடத்தில் நாட்டின் வீட்டுடைமை பணவீக்கம் 10.3 சதவீதம் வரையில் உயரும் என்பது சாமானியர்களை அதிகளவில் பாதிக்கும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
தொழிற்துறை
வர்த்தகத்தில் மீண்டு வருவதற்காக உற்பத்தி நிறுவனங்கள் ஜூலை - செப்டம்பர் காலத்தில் உற்பத்தி பொருட்களின் விலை உயர்ந்தாலும், பொருட்களின் விலையை மாற்றாமல் அப்படியே விற்பனை செய்து வருகிறது.
இதன் பின்பு விழாக்காலம் வருவதால் அதிகளவிலான விற்பனை செய்ய அதிகளவிலான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உற்பத்தியாளர்கள் இருக்கும் காரணத்தால் இந்த இழப்புகள் அனைத்தும் இனி வரும் காலத்தில் சரி செய்யும்.
மக்களுக்குப் பாதிப்பு
மேலும் ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தைக் குறைக்காத காரணத்தால் பணப்புழக்கத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து தான் நாட்டின் மக்களுக்கு நேரடி தொடர்புடைய வீட்டுடைமை பணவீக்கம் 10.3 சதவீதம் வரையில் உயரும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications