தென் கொரியாவின் ரியல் எஸ்டேட் சந்தை பலவீனமாக இருந்தபோதிலும், தலைநகர் சியோலின் கங்னம் பகுதியில் உள்ள ஒரு புதிய அடுக்குமாடி வளாகத்தில் அமைந்துள்ள மூன்று அப்பார்ட்மென்ட்களை வாங்குவதற்காக பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் டெண்டரில் பணம் கட்டியுள்ளனர்.
தி ஹெச் ஃபர்ஸ்ட்யர் ஐபார்க் (H Firstier IPark) என்று அழைக்கப்படும் உயர்வகுப்பு அடுக்குமாடி குடியிருப்புகள், ஹூண்டாய் இன்ஜினியரிங் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் எச்டிசி ஹூண்டாய் டெவலப்மென்ட் கோ ஆகியவற்றால் அமைக்கப்பட்ட வளாகம் இது. இதில் விற்பனைக்கு வந்த மூன்று அப்பார்ட்மென்ட்கள் மக்களைக் கவர்ந்துள்ளன.

சந்தை விலையை விட நான்கு ஆண்டுகளுக்கு முன் விற்பனைக்கு முந்தைய விலையில் இந்த அப்பார்ட்மென்ட்கள் விற்கப்படுகிறது.
தென் கொரியாவில், கட்டுமானம் தொடங்குவதற்கு முன்பே மக்கள் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவது பொதுவான வழக்கமாகும்.
கடுமையான போட்டியின் காரணமாக, பெரிய குடும்பங்கள் அல்லது நீண்ட காலமாக சொத்து இல்லாதவர்கள் அத்தகைய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அரசு விதிமுறைகள் உள்ளன.
அரசு நடத்தும் ஏஜென்சியான கொரியா ரியல் எஸ்டேட் வாரியத்தின் தகவல்படி, இந்த வளாகத்தில் உள்ள மூன்று அப்பார்ட்மென்ட்கள் முந்தைய டெண்டர் விலையில் மக்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது.
வாங்குபவர்கள் இந்த அப்பார்ட்மென்ட்கள் ஏற்கனவே முடிக்கப்பட்டுவிட்டதால், குறிப்பிட்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதிமுறைகளில் இருந்து அவை விலக்கு அளிக்கப்படுகின்றன. தனியார் கல்வி மையங்கள் மற்றும் கங்கனத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு அருகில் இருப்பது இந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் மற்றொரு சிறப்பு அம்சமாகும். இந்த டெண்டரில் வீடு ஒதுக்கப்பட்ட ஏலதாரர்கள் விவரம் வியாழக்கிழமை அறிவிக்கப்படும்.
உலகம் முழுவதும் ரியல் எஸ்டேட் பிசினஸ் வெற்றிகரமாக செயல்படுகிறது. ஜெஃப் பெசோஸ் போன்ற பெரும் பணக்காரர்கள் $270 மில்லியன் மெகா-மேன்ஷன்கள் மற்றும் அபோகாலிப்ஸ்-ரெடி சொத்துகளில் முதலீடு செய்கிறார்கள்.
இந்த நிலையில் தென்கொரியத் தலைநகர் சியோலின் மதிப்புமிக்க மற்றும் மிகவும் விரும்பப்படும் கங்கனம் மாவட்டத்தில் உள்ள மூன்று அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒன்றை சொந்தமாக்கிக் கொள்வதற்காக பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் - 'H Firstier IPark' வளாகத்தின் ஒரு பகுதி ஆகும். 40 ஆண்டு பழமையான இந்த வளாகம் இப்போது புதிப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் நல்ல டிமாண்டைப் பெற்றுள்ளது.
இந்த சொத்துக்கள் குறைந்த விலையில் மீண்டும் சந்தைக்கு வந்துள்ளன. தென் கொரியாவில் உள்ள பெரும்பாலான விற்பனைகளைப் போலல்லாமல், பெரிய குடும்பங்கள் அல்லது வேறொரு சொத்தை வைத்திருக்காதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதிமுறைகளிலிருந்து இதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Story Written by: I. Jayachandran
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications