அட சென்னையை விட்டு தள்ளுங்க.. கொல்லிமலை ஏலகிரி பகுதிகளில் சூடு பிடிக்கும் ரியல் எஸ்டேட்!

சுற்றிப் பார்க்க விரும்பும் நபர்கள் நீலகிரி அல்லது கொடைக்கானலை நோக்கி டிரெக்கிங் கேம்பிங் போன்ற பயணங்களை மேற்கொள்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் சென்னையில் இருந்து அங்கு செல்வதற்கு குறைந்தது 12 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. சென்னையில் 2 அல்லது 3 நாட்கள் வீகெண்ட் கிடைக்கும் போது இது போன்ற ஊர்களுக்கு செல்வது சற்று கடினமானதாக இருக்கலாம். ஏனெனில் அங்கு செல்லவே நேரம் எடுக்கும் போது, சுற்றிப் பார்ப்பதற்கு அதிக அளவு நேரம் கிடைக்காது. இதனை பயன்படுத்திக் கொள்ள தற்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இறங்கியுள்ளது.

எனவே இதுபோன்ற குறுகிய கால விடுமுறைகளை சிறப்பாக கழிக்கும் வகையில் பயணிகளுக்கு உதவுவதற்காக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) ஏலகிரி, ஜவ்வாது மற்றும் கொல்லிமலை ஆகிய மலைப் பகுதிகளை முக்கிய சுற்றுலா மையங்களாக மேம்படுத்த டெண்டர் எடுத்துள்ளது. இதன் காரணமாக பல பயணிகளும் அங்குள்ள தலங்களை பார்க்க வருவார்கள்.. என்ற நம்பிக்கையில் ரியல் எஸ்டேட் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

 அட சென்னையை விட்டு தள்ளுங்க.. கொல்லிமலை ஏலகிரி பகுதிகளில் சூடு பிடிக்கும் ரியல் எஸ்டேட்!

மேலும் ஏலகிரி, ஜவ்வாது மலை மற்றும் கொல்லிமலை ஆகிய மலைப்பகுதிகளுக்கு சென்னையிலிருந்து 6 முதல் 8 மணி நேரத்திற்குள் பயணம் செய்து சென்றுவிடலாம். இந்த இடங்கள் இயற்கை அழகு மற்றும் அமைதியுடன் கூடிய சூழலை வழங்குகிறது. மேலும் இந்த டெண்டர் நடவடிக்கையின் காரணமாக உள்ளூர் பொருளாதாரத்தை வெகுவாக உயர்த்த முடியும் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு புதிய இடங்களை வழங்கவும், இது உதவும் என்று மாநில சுற்றுலா செயலாளர் பி சந்திர மோகன் கூறியுள்ளார்.

ஏலகிரியில், சுமார் 50 சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு, வழக்கமான கூடாரங்களுடன் முகாம் அமைப்பதற்காக 5 ஏக்கர் அரசாங்கத்திற்கு சொந்தமான இடத்தை TTDC அடையாளம் கண்டுள்ளது. இதில் கூடுதலாக ஜிப்-லைன், ரோப் வாக்கிங், படகு சவாரி ஆகியவை இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. கொல்லிமலையில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் ரிசார்ட் மற்றும் கேம்பயர், உணவகம் போன்றவற்றை அமைக்கவும் ஏற்பாடுகள் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதி குறித்த கவலைகளும் தற்போது எழுந்துள்ளன. அருவிகளில் துணி மாற்றுவதற்கான அறைகள் அல்லது கழிப்பறைகள் இல்லாதது, மேலும் சில ஆண்கள் வெளிப்படையாக மது அருந்துவது போன்றவை சுற்றுலாப் பயணிகளை கவலைப்படுத்துகின்றன.

டிரெக்கிங்கின் போது மாரடைப்பால் ஒருவர் உயிரிழந்ததையடுத்து கடந்த ஆண்டு அருவி மூடப்பட்டது. சுற்றுலா தலத்தை மேம்படுத்துவதற்கு முன்பு அடிப்படை கட்டமைப்புகள் அவசியம். இது போன்ற கவலைகளை நிவர்த்தி செய்ய TTDC ரூ. 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜவ்வாது மலைப் பகுதிகள் மற்ற இடங்களைப் போல அல்லாமல் குறைவாக அறியப்பட்ட ஒரு தலமாகும். இதில் ஹோட்டல்களும் மிகக் குறைவாகவே உள்ளது. இதற்காக TTDC பழங்குடியின மக்களை பயன்படுத்தி சுற்றுலா தலங்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், சுற்றுலாப் பயணிகள் பழங்குடி மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் கலாச்சாரத்தைப் பற்றி நேரடியாகக் கற்றுக் கொள்ள முடியும். மேலும், இந்த இடங்கள் கோவில்கள் மற்றும் பிரபலமான நாட்டுப்புற விழாக்களுக்கும் பெயர் பெற்றது.

முக்கியமாக படப்பிடிப்பிற்காக திரைப்படத் தயாரிப்பாளர்களால் அடிக்கடி பயன்படுத்தப்படும் இப்பகுதி, சிறந்த சுற்றுலாத் திறனைக் கொண்டுள்ளது என்று தமிழ்நாடு சுற்றுலா கூட்டமைப்பைச் சேர்ந்த வி.கே.டி.பாலன் தெரிவித்துள்ளார். இந்த இடத்தில் TTDC-யின் கவனம் கூடுதல் வருவாயை உருவாக்கும், உள்ளூர் பழங்குடி சமூகங்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் ரியல் எஸ்டேட்டை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+