சென்னை: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசண்ட் நிறுவனம் சென்னையில் மெப்ஸ், சிறுசேரி ஆகிய பகுதிகளில் ஐடி அலுவலகங்களை அமைத்து செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக ஓஎம்ஆர் சாலையில் ஓக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் அமைந்திருந்த 13.68 ஏக்கர் பரப்பளவிலான வளாகம் தான் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.
காக்னிசண்ட் தனக்கு சொந்தமான துரைப்பாக்கம் வளாகத்தை 612 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறது. காக்னிசண்ட் நிறுவனத்துக்கு சொந்தமாக இருந்த 13.68 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை பெங்களூருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான பாக்மானே (Bagmane) கன்ஸ்டிரக்சன் நிறுவனம் வாங்கி இருக்கிறது. இதனை வாங்கி இருக்கும் பெங்களூருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான பாக்மானே இதனை மேம்படுத்தி பயன்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

துரைப்பாக்கத்தில் இருந்த அலுவலகம் தான் இந்தியாவில் 20 ஆண்டு காலத்திற்கும் மேலாக காக்னிசண்ட் நிறுவனத்தின் தலைமையகமாக செயல்பட்டு வந்தது. அதேபோல சென்னையில் காக்னிசண்ட் நிறுவனத்திற்கு சொந்தமாக இருந்த முதல் அலுவலகமும் இதுதான். இதற்கு முன் இந்த நிறுவனம் அமெரிக்க தூதரகத்திற்கு அருகே சிஎஸ்ஐ கட்டிடத்தில் வாடகைக்கு தான் தன்னுடைய அலுவலகத்தை செயல்படுத்தி வந்தது.
புதன்கிழமை அன்று காக்னிசண்ட் நிறுவனம் தங்களுடைய இந்த இடத்தை 612 கோடிக்கு நீலாங்கரை பதிவாளர் அலுவலகத்தில் வைத்து பாக்மானே குழுமத்திற்கு எழுதி தந்திருக்கிறது. இந்த பத்திரப்பதிவுக்காக பதிவு கட்டணமாக 55.8 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசிற்கு செலுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே காக்னிசண்ட் நிறுவனம் தங்களுடைய துரைப்பாக்கம் அலுவலகத்தை விற்பனை செய்வதாக அறிவிப்பு வெளியிட்டது.
அப்போது சென்னையில் செயல்படும் பாஷ்யம் குழுமம், காஸாகிராண்ட் உள்ளிட்டவை இந்த இடத்தை வாங்குவதற்கு போட்டி போட்டன. ஆனால் இறுதியில் பெங்களூருவை சேர்ந்த பாக்மானே தான் இதனை கைப்பற்றி இருக்கிறது. தற்போது காக்னிசண்ட் நிறுவனத்தின் புதிய தலைமையகமாக தாம்பரம் அருகே இருக்கும் மெப்ஸ் அலுவலகம் மாறி இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே காக்னிசண்ட் நிறுவனம் இந்த துரைப்பாக்கம் அலுவலகத்தை முழுவதுமாக காலி செய்து விட்டது.
காக்னிசண்ட் நிறுவனம் பல்வேறு நாடுகளிலும் தங்கள் வசம் இருக்கும் பல்வேறு சொத்துக்களை விற்பனை செய்து பணமாக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தான் சென்னை அலுவலகத்தை விற்பனை செய்வதாக அறிவிப்பு வெளியிட்டது. பாக்மானே குழுமம் இந்த அலுவலகத்தில் கூடுதலாக அதில் 3 மில்லியன் சதுர அடி அலுவலக இடத்தை சேர்த்து பல்வேறு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட இருப்பதாக தெரியவந்துள்ளது.
2024 டிசம்பர் மாதம் வெளியான தகவலின்படி சென்னையில் காக்னிசண்ட் நிறுவனம் 8 மில்லியன் சதுர அடி அலுவலக இடத்தை சொந்தமாக கொண்டிருக்கிறது. ஹைதராபாத்தில் 3 மில்லியன் சதுர அடி, புனே ,பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் தலா 2 மில்லியன் சதுர அடி பரப்பளவிலான அலுவலக இடத்தை வைத்திருக்கிறது. காக்னிசண்ட் நிறுவனத்தை பொருத்தவரை அதன் 70% ஊழியர்கள் இந்தியாவில் தான் வேலை செய்கின்றனர்.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

போயஸ்கார்டனே இனி நம்ம ஏரியா தான்!! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பக்கா பிளான்!!

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?

தமிழ்நாட்டில் LPG சிலிண்டர் விலை ஏன் அதிகம்? மும்பை, டெல்லியை விட ரூ.15–ரூ.25 அதிகம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications