சென்னை: சென்னை துரைப்பாக்கத்தின் அடையாளமாக திகழ்ந்த காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தின் அலுவலகம் விற்பனைக்கு வந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் குழுமமான பாக்மானே (Bagmane) 800 கோடி ரூபாய் கொடுத்து அதனை வாங்க இருப்பது தெரிய வந்துள்ளது.
உலகின் பிரபலமான ஐடி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசண்ட் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சென்னை துரைப்பாக்கத்தில் 13.39 ஏக்கர் பரப்பளவில் தன்னுடைய ஐடி அலுவலகத்தை செயல்படுத்தி வந்தது. காக்னிசண்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமையகமாகவும் இந்த அலுவலகம் தான் இயங்கி வந்தது. இந்நிலையில் இந்த அலுவலகத்தை விற்பதாக 2023இல் காக்னிசண்ட் அறிவித்தது.

இதை தான் பாக்மானே ரியல் எஸ்டேட் நிறுவனம் 800 கோடி ரூபாய்க்கு வாங்கி மேலும் மேம்படுத்தி பயன்படுத்த இருப்பதாக எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்ட செய்தி குறிப்பிடுகிறது. காக்னிசண்டின் தலைமை அலுவலகமாக சென்னையில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக இந்த அலுவலகம் செயல்பட்டு வந்தது. 13.39 ஏக்கர் நிலப்பரப்பில் 5 . 60 லட்சம் சதுர அடி அலுவலக இடத்துடன் காக்னிசண்ட் தலைமையகம் இயங்கி வந்தது.
தமிழ்நாட்டில் காக்னிசண்ட் நிறுவனம் நிறுவிய முதல் வளாகம் இந்த துரைப்பாக்கம் அலுவலகம் தான். அதேபோல புனேவுக்கு பிறகு இந்தியாவில் இந்த நிறுவனம் நிறுவிய இரண்டாவது அலுவலகமும் இதுதான். கடந்த 20 ஆண்டுகளாக இங்கே வெற்றிகரமாக இந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது.
ஆனால் காக்னிசண்ட் நிறுவனம் பல்வேறு நாடுகளிலும் தங்கள் வசம் இருக்கும் பல்வேறு சொத்துக்களையும் விற்பனை செய்து பணமாக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தான் சென்னை அலுவலகத்தை விற்பனை செய்வதாக அறிவிப்பு வெளியிட்டது. பாக்மானே குழுமம் இந்த அலுவலகத்தை 800 கோடி ரூபாய்க்கு வாங்கி கூடுதலாக அதில் 3 மில்லியன் சதுர அடி அலுவலக இடத்தை சேர்த்து பல்வேறு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட இருப்பதாக தெரியவந்துள்ளது.
2023 ஆம் ஆண்டு தங்கள் நிறுவனம் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் இதற்காக 400 மில்லியன் டாலர்கள் வரை செலவை குறைக்க இருப்பதாகவும் காக்னிசண்ட் அறிவித்தது இதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் தங்களுக்கு சொந்தமான 11 மில்லியன் சதுர அடி அலுவலக இடங்களை விற்பனை செய்வதாக கூறியது.
2024 டிசம்பர் மாதம் வெளியான தகவலின்படி சென்னையில் காக்னிசண்ட் நிறுவனம் 8 மில்லியன் சதுர அடி அலுவலக இடத்தை சொந்தமாக கொண்டிருக்கிறது. ஹைதராபாத்தில் 3 மில்லியன் சதுர அடி, புனே ,பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் தலா 2 மில்லியன் சதுர அடி பரப்பளவிலான அலுவலக இடத்தை வைத்திருக்கிறது. காக்னிசண்ட் நிறுவனத்தை பொருத்தவரை அதன் 70% ஊழியர்கள் இந்தியாவில் தான் வேலை செய்கின்றனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications