இந்தியாவின் ஐடி நகரமான பெங்களூரு நகரில் அண்மைக்காலமாக வில்லாக்களுக்கான டிமாண்ட் அதிகரித்திருப்பதாக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கூறுகின்றன. இந்தியாவிலேயே ரியல் எஸ்டேட் துறை மற்றும் வீட்டு வாடகை வேகமாக வளர்ந்து வரும் ஒரு நகரமாக பெங்களூரில் இருக்கிறது.
இங்கு செயல்பட்டு வரக்கூடிய பல்வேறு ஐடி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இதற்கு காரணமாக கூறலாம். நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை நிமித்தமாக பெங்களூருக்கு வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையில் பெங்களூருவில் வில்லாக்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது என அங்கு செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கூறுகின்றன.

பத்தாண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் வில்லாக்களை வாங்குவது என்பது ஒரு ஆடம்பரமான முதலீடாக பார்க்கப்பட்டது, வெகு சிலரே இதில் முதலீடு செய்வார்கள். ஆனால் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவதை தவிர்த்து பலரும் வில்லாக்களை வாங்குவதற்கு முன் வருகின்றனர் என ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கூறுகின்றன.
பெங்களூரில் சராசரியாக ஆடம்பர வசதிகள் கொண்ட வில்லாக்களின் மதிப்பு 2 கோடியிலிருந்து 5 கோடி ரூபாய் வரை இருப்பதாக கூறுகின்றன. தற்போது பலரும் ஆடம்பர குடியிருப்புகளை வாங்க வேண்டும் என விரும்புவதே வில்லாக்களுக்கான டிமாண்ட் அதிகரிப்பதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி வில்லா என வாங்கும்போது அந்த குறிப்பிட்ட வீடு அமைந்திருக்கும் நிலமும் உரிமையாளருக்கே சொந்தமாக கிடைக்கிறது. அடுக்குமாடி குடியிருப்பில் அவர்கள் வாங்கும் பரப்பளவில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்திலான இடமே அவர்களுக்கு சொந்தமானதாக கிடைக்கிறது.
நிலம் முழுவதுமாக நமக்கு சொந்தமாக கிடைக்கிறது என்பதாலேயே பலரும் வில்லாக்களில் முதலீடு செய்ய முன் வருகிறார்கள். முன்பெல்லாம் வில்லாக்கள் என்றால் 3000 சதுர அடி பரப்பளவு கொண்டதாக இருந்தது. அதில் நீச்சல் குளம் ,தோட்டங்கள் உள்ளிட்டவற்றை பலரும் அமைத்துக் கொண்டனர். அப்போது அவற்றின் விலை 10 கோடி ரூபாயாக இருந்தது.
தற்போது மலிவு விலை வில்லாக்கள் சந்தையில் அதிகரித்துவிட்டன என ப்ரோக்கரின் ப்ளூ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் கூறுகிறது. 1500லிருந்து 2000 சதுர அடி பரப்பளவிலான வில்லாக்கள் 2 கோடியில் இருந்து 5 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன எனக் கூறுகிறார் . வில்லாக்களுக்கான தேவை கடந்த ஓராண்டில் மட்டும் 25% உயர்ந்திருப்பதாக இந்த நிறுவனம் கூறுகிறது.
குறிப்பாக பெங்களூரின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வில்லாக்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாம். இங்கே ஒரு சதுர அடி 15000 ரூபாய் முதல் 18000 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது. குறிப்பாக பெங்களூருவில் வில்லாக்களை வாங்குபவர்களில் 25 சதவீதம் பேர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என இந்த நிறுவனங்கள் கூறுகின்றன.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications