மும்பை: சமீப காலமாக முதலீடுகள் சார்ந்து சார்ந்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளும் சந்தையில் வருகின்றன. அந்த வகையில் தற்போது மக்களின் கவனத்தை பெற்றிருக்கும் ஒரு முதலீடு தான் Fractional ownership எனப்படும் பகுதியளவு உரிமை கொண்ட முதலீடுகள்.
பொதுவாக ரியல் எஸ்டேட் முதலீடுகள் என்றால் சாதாரண மக்கள் வீடுகளை வாங்குவது அல்லது சிறிய கடைகள் ஆகியவற்றை தான் தேர்வு செய்வோம்.

பெரும் பணக்காரர்களும், நிறுவன முதலீட்டாளர்களும் மால்கள், பெரிய ஷாப்பிங் காம்பிளக்ஸுகள் உள்ளிட்ட மிகப்பெரிய கமர்ஷியல் சொத்துகளில் முதலீடு செய்வார்கள். ஆனால் இந்த Fractional ownership என்ற நடைமுறை , சிறு முதலீட்டாளர்களுக்கும் வணிக ரீதியான சொத்துக்களில் முதலீடு செய்யும் வாய்ப்பினை வழங்குகிறது.
தனிநபராக ஒரு பெரிய ஷாப்பிங் காம்பிளக்ஸை வாங்குவது கடினம், இதுவே 10 பேர் அல்லது 20 பேராக சேர்ந்து வாங்கினால் அது சாத்தியம் தானே. இது தான் Fractional ownershipஇன் அடிப்படை.
பலர் ஒன்றிணைந்து லாபம் தரும் வணிக சொத்துக்களை வாங்குவது, இதன் உரிமை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் அதே போல இதன் லாபம் அல்லது வாடகை வருவாயும் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்,
பல்வேறு ரியல் எஸ்டேட் இணையதளங்கள் தற்போது Fractional ownership வாய்ப்புகளை வழங்குகின்றன.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கல் உள்ளிடவை கமர்ஷியல் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கு வித்திடுகின்றன. எனவே இந்த வகை முதலீடுகள் நல்ல லாபம் தருபவை என இத்துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.
இந்த முதலீட்டு வாய்ப்புகளை பயன்படுத்தி 11 முதல் 18% வருவாய் ஈட்ட முடியும் என சொல்லப்படுகிறது. கமர்ஷியல் ரியல் எஸ்டேட் மற்றும் வீடு சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் முதலீடுகளை ஒப்பீடு செய்தால், வாடகை வருமானம் அதிகம், சொத்தின் மதிப்பு உயரும் விகிதம் அதிகம், முதலீட்டிற்கு கிடைக்கும் வருவாய் அதிகம் என சொல்லப்படுகிறது.
ஏ கிரேடில் உள்ள கமர்ஷியல் சொத்துக்கள் இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர்களால் மட்டுமே வாங்கக் கூடியவையாக இருந்தன. ஆனால் இந்த பகுதியளவு உரிமை என்ற புதிய முயற்சி சிறு முதலீட்டாளர்களுக்கும் இத்தகைய லாபம் தரக்கூடிய சொத்துக்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை பெற்று தந்துள்ளது.
Fractional ownershipaஐ பொறுத்தவரை இதற்காக Small and Medium Real Estate Investment Trusts என்ற தளங்கள் செயல்படுகின்றன. அதாவது இத்தகைய தளங்கள் வணிக லாபம் கொண்ட சொத்துக்களை நமக்கு அடையாளம் காட்டும். விருப்பமுள்ளவர்கள் இதில் முதலீடு செய்து பகுதியளவு உரிமையாளராக மாறலாம். அந்த சொத்தினை வாங்குவது, பதிவு செய்வது, வாடகைக்கு விடுவது, என அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும். நீங்கள் முதலீடு செய்தால் மட்டும் போதுமானது.
இந்த வகை முதலீடு வளர்ந்து வருவதால் அண்மையில் செபியானது Small and Medium Real Estate Investment Trusts அமைப்பதற்கான வழிமுறைகள் அறிவித்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு அனைத்தையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்ற ஒரு அறிவுறுத்தலையும் வழங்கியுள்ளது.
JLL நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வறிக்கை அடிப்படையில் இந்தியாவில் பகுதியளவு உரிமை முதலீட்டு சந்தை 2030ஆம் ஆண்டுக்குள் 5 பில்லியன் டாலர் என்ற அளவை எட்ட இருக்கிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications