சென்னை: இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பின்னர் குடியிருப்புகள் சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் விற்பனை 52 சதவீதம் அதிகரித்த நிலையில் 2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டில் 2% வரை சரிவை கண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
2020 ஆம் ஆண்டு கொரோனாவுக்கு பிறகு வீடுகளின் விற்பனை அதிகரித்த நிலையில் முதன்முறையாக அவை குறைந்திருப்பதாக அனராக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. ஆனால் 2.5 கோடி ரூபாய்க்கு மேல் விலை கொண்டு ஆடம்பர குடியிருப்புகளின் விற்பனை மட்டும் உயர்ந்துள்ளதாம்.

இந்தியாவில் அண்மை காலமாகவே பிரீமியம் மற்றும் ஆடம்பர குடியிருப்புகளை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இத்தகைய வீடுகளை கட்டி விற்பனை செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றன.
இதனால் ஆடம்பர குடியிருப்புகளின் விலை 56 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என அனராக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் 1.2 முதல் 2.5 கோடி ரூபாய் வரையிலான வீடுகளை கட்டுவதே கடந்த மூன்று காலாண்டில் 15 சதவீதம் வரை சரிந்திருக்கிறதாம்.
ஏனெனில் இந்தியாவில் மும்பை ,டெல்லி ,பெங்களூரு ,சென்னை ஆகிய இடங்களில் 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரை 2.5 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்பு கொண்ட வீடுகளின் விற்பனை ஆண்டுக்கு 116 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
2020 ஆம் ஆண்டு 2.5 கோடி ரூபாய்க்கு மேல் விலை கொண்ட 4000 வீடுகள் மட்டுமே விற்பனையாகின. இதுவே 2023 ஆம் ஆண்டில் 41 ஆயிரம் என அதிகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டில் மட்டும் இது 52 ஆயிரம் யூனிட்டுகள் என உயர்ந்துள்ளது.
குறிப்பாக நகர் பகுதிகளில் இதுபோன்ற வீடுகளின் தேவை அதிகரித்துள்ளதாம் . கூடுதல் அறைகள் மற்றும் கேட்டட் கம்யூனிட்டிகள், அருகிலேயே குழந்தைகளுக்கான பார்க், ஜிம் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும் என நகர்ப்புறங்களை சேர்ந்த பலரும் விரும்புகிறார்களாம்.

2020 ஆம் ஆண்டு இதுபோன்ற குடியிருப்புகளுக்கான சராசரி பரப்பளவு 1167 சதுர அடியாக இருந்து 2023 இல் 1300 சதுர அடி என உயர்ந்து உள்ளதாம். இந்தியா முழுவதுமே இது போன்ற ஆடம்பர குடியிருப்புகளுக்கான தேவை உயர்ந்துள்ளது என்றும் வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்றும் நிறுவனத்தின் டிஎல்எஃப் நிறுவனத்தின் கூடுதல் மேலாண் இயக்குனரான ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டில் 40 லட்சம் ரூபாய்க்கும் குறைவான மதிப்பு கொண்ட வீடுகள் கட்டப்படும் விகிதமே 10% வரைந்து குறைந்துவிட்டது, 40 முதல் 1.5 கோடி ரூபாய் வரையிலான மதிப்பு கொண்ட வீடுகளை கட்டுவதும் 7% வரை சரிந்துவிட்டது. எனவே இந்தியாவில் குறிப்பாக நகர்ப்பகுதிகளில் மலிவு விலை வீடு என்ற கருத்தாக்கம் தற்போது படிப்படியாக மறைந்து வருகிறது என ரியல் எஸ்டேட் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி

எங்கே அமைகிறது பெங்களூருவின் 2ஆவது விமான நிலையம்? பணிகளை துரிதப்படுத்தும் கர்நாடக அரசு..!!

ரியல் எஸ்டேட்டில் பணத்தை கொட்டிய Dhurandhar நாயகன் மாதவன்.. சும்மாயில்ல பாஸ் ரூ.125 கோடி சொத்து மதிப்பு..!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications