சென்னை: 2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் விற்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியது. இந்தியாவின் முதல் 7 நகரங்களில், Q1 காலாண்டில் சுமார் 130,170 வீடுகள் விற்கப்பட்டன. Anarock Research இன் சமீபத்திய தகவலின்படி, கடந்த ஆண்டு இதே Q1 காலாண்டில் விற்பனையான 113,775 வீடுகளை விட இது 14% அதிகம்.
2024 ஆம் ஆண்டின், Q1 காலாண்டில், டெல்லி-என்சிஆர், கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, மும்பை பெருநகரப் பகுதி (எம்எம்ஆர்), ஹைதராபாத் மற்றும் பெங்களூரு உட்பட ஏழு நகரங்களில் மொத்தம் சுமார் 130,170 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டு Q 1 காலாண்டோடு ஒப்பிடுகையில் 16,395 யூனிட்கள் அதிகம். போன ஆண்டு இதே Q 1 காலாண்டில் 11,775 யூனிட்கள் விற்பனையானது.

அனாரோக் அறிக்கையின் படி, 2024 ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான Q 1 காலாண்டில், 42,920 விற்பனைகைளை பூர்த்தி செய்து மும்பை முதலிடத்தில் உள்ளது. இது 2023 ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் விற்கப்பட்ட 34,690 யூனிட்களை விட 24% அதிகரிப்பைக் குறிக்கிறது.
புனேவில், 2024 ஆம் ஆண்டின் முதல் Q 1 காலாண்டில் தோராயமாக 22,990 யூனிட்கள் விற்கப்பட்டன, இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 15% உயர்வை பிரதிபலிக்கிறது. அதே போன்று, ஹைதராபாத் முதல் Q 1 காலாண்டில் சுமார் 19,660 யூனிட்களை விற்பனை செய்துள்ளது, இது 2023 ஆம் ஆண்டின் இதே Q 1 காலகட்டத்தை விட 38% அதிகரிப்பைக் குறிக்கிறது. அதே நேரத்தில், பெங்களூரு ஆண்டுக்கு ஆண்டு விற்பனையில் 14% அதிகரித்து, மொத்தம் 17,790 யூனிட்களை எட்டியுள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
அதேசமயம், முதல் ஏழு நகரங்களில் கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய இரண்டு நகரங்களில் வீட்டு விற்பனை குறைந்துள்ளது. கொல்கத்தா 14% சரிவைச் சந்தித்தது, 2024 ஆம் அண்டின், Q1 காலாண்டில் மொத்தம் 6,185 யூனிட்கள் விற்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் சென்னையில் 6% குறைந்துள்ளது, மொத்த விற்பனை 5,510 யூனிட்கள் என அனராக் ரிப்போர்ட் தெரிவிக்கின்றன.
விலை அதிகரிப்பு: சொத்து விலையின் மதிப்பு பெரும் ஏற்றத்தை தழுவி உள்ளது. கட்டுமான பொருள்களின் விலைகள் மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக இந்த உயர்வு ஏற்படுகிறது. ஹைதெராபாத் மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் 32% மற்றும் 25% உயர்வைக் கண்டுள்ளது என அறிக்கை கூறுகிறது.
2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், முதல் 7 நகரங்கள் சுமார் 1,10,865 புதிய சொத்துக்களை அறிமுகப்படுத்தியுள்ளன, இது கடந்த ஆண்டு இதே Q1 காலாண்டில் 1,09,570 யூனிட்களாக இருந்தது. அதாவது இது 1% அதிகரிப்பு மட்டுமே. பெரும்பாலான புதிய சொத்துக்கள் மும்பை, ஹைதராபாத், புனே மற்றும் பெங்களூரில் தொடங்கப்படுகின்றன.
2023 ஆம் ஆண்டின் Q1 காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டின் Q 1 காலாண்டில் மொத்த வீடுகளின் எண்ணிக்கை 7% குறைந்துள்ளது என அறிக்கை கூறுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications