பாத்ரூம், கிச்சன் கூட இல்லாத குட்டியூண்டு வீடு.. மாத வாடகை 1 லட்சம்..!!

அமெரிக்காவில் ஒரு ரியல் எஸ்டேட் வல்லுனர் நியூயார்க்கில் உள்ள ஒரு குட்டியூண்டு அப்பார்ட்மென்ட்டின் உள்புறத்தை விடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவேற்றியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒமர் லாபோக் என்ற அந்த ரியல் எஸ்டேட் வல்லுனர் திங்கள்கிழமையன்று இந்த சிறிய அப்பார்ட்மென்ட்டை விடியோ பிடித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். விடியோவில் அவர் நியூயார்க் நகரின் மிகவும் முக்கியமான மன்ஹாட்டன் பகுதியில் ஒரு வீடு அமைந்துள்ளது. அந்தக் கண்றாவியை நாம் பார்க்கலாம் என்ற குரல் ஒலிக்கிறது.

பாத்ரூம், கிச்சன் கூட இல்லாத குட்டியூண்டு வீடு.. மாத வாடகை 1 லட்சம்..!!

ஒரு கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள ஒரு கதவை ஒமர் திறக்கிறார். அது மிக மிகச் சிறிய அறை. காலியாக உள்ளது. சிறிய அலமாரி இருக்கிறது. ஒரு ஜன்னல். அங்கிருந்து வெளியே பார்த்தால், அவசரகால பாதை மற்ற கட்டடங்கள் தெரிகிறது.
இவ்வளவுதான் மொத்த அப்பார்ட்மென்ட்டும். அங்கு குளியலறை, கழிவறை, கிச்சன் கூட இல்லை.

இந்த நிலையில் ஒமர் அப்பார்ட்மென்ட்டுக்குள் இருந்து கூறுகையில், நான் பெரிய சைஸ் மனிதன் இல்லை. ஆனால் என்னால் எதிர்எதிரே உள்ள சுவர்களைத் தொட முடிகிறது. இதுதான் மன்ஹாட்டனின் மிகச் சிறிய அப்பார்ட்மென்ட் என்று கூறலாம். இதற்கு வாடகை மாதம் 1200 டாலர்கள். கிட்டத்தட்ட 1 லட்சம் ரூபாய்.

குளியலறை எங்கே இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். வாங்க வீட்டுக்கு வெளியே போய்ப் பார்க்கலாம். இதோ பாதையில் இருக்கும் பொதுப்பகுதியில்தான் நீங்கள் குளிக்க வேண்டும் என்கிறார்.

பின்னர் அவர் அந்தப் பாதையில் சிறிதுதூரம் சென்றதும் ஒரு பொது பாத்ரூம் இருக்கிறது. அங்கு ஒரு சிங்க், டாய்லெட், ஷவர் இருக்கிறது. இந்த விடியோவில் ஒமர், நீங்கள் இங்கு வாழ்வீர்களா? என்று கேட்டு பதிவிட்டுள்ளார். அவ்வளவுதான் இதைப் பார்த்த நெட்டிசன்கள் கோபத்தில் பொரிந்து தள்ளிவிட்டனர்.

ஒருவர், சட்டப்படி இத்தகைய வீட்டை வாடகைக்கு விடுவது சரிதானா? என்று கேட்டுள்ளார். மற்றொருவர், நான் இதற்கு பதிலாக எனது காரில் வசித்துக் கொள்வேன். ஜிம் மெம்பர்களுக்கான பாத்ரூமைப் பயன்படுத்துவேன் என்று பதிவிட்டுள்ளார்.

மூன்றாவது நபர், பாத்ரூம் இல்லாவிட்டால் அதற்கு பெயர் அப்பார்ட்மென்ட்டே அல்ல. அது ஒரு தங்கு இடம். அவ்வளவுதான். இதையெல்லாம் வாடகைக்கு விடுவதற்கு அதன் உரிமையாளருக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று கூறியுள்ளார்.

நான் வசிக்கும் இடத்தில், இது ஒரு மாதத்துக்கு $80க்கான குடவுனாகக் கருதப்படும் என்று நான்காவது யூசர் குறிப்பிட்டார். ஒரு மாதத்துக்கு $1290 என்பது எனக்கு அழகான லாஸ் வேகாஸ், நெவாடாவில் மூன்று படுக்கையறைகள், 2 குளியலறை கொண்ட வீடு உள்ளது. இது ஒரு அப்பார்ட்மென்ட்டே இல்லை. எனக்கு ஒரு கேரேஜ்கூட உள்ளது. . அங்கிருந்து முதலில் வெளியேறு. இது அபத்தமானது என்று ஐந்தாவது பயனர் கருத்து தெரிவித்தார்.

Story Written by: I. Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+