பெங்களூரு: பெங்களூருவில் வீட்டு வாடகை அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் millennials மற்றும் Gen Z வயதினர் வாடகை வீட்டிற்கு பதிலாக சொந்த வீட்டினை வாங்க முடிவு செய்துள்ளனர். கடந்த 4-5 வருடங்களாக இளம் தலைமுறையில் சொந்த வீட்டு வாங்குவது வேஸ்ட், வாடகை வீடு தான் பெஸ்ட் என பேசி வந்த நிலையில், அதிகரிக்கும் வீட்டு வாடகையை பார்த்து பழைய படி சொந்த வீட்டை வாங்கும் முடிவுக்கு வந்துள்ளனர்.
நோபுரோக்கர் தளம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதுள்ள இளைய தலைமுறையினர் வாடகை வீட்டை விடுத்து சொந்த வீடு வாங்குவதையே விரும்புவதாக தெரிவிக்கிறது. 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பெங்களூருவில் நோ புரோக்கர் தளம் வாயிலாக வீடு வாங்கியவர்களில் 60% பேர் மில்லினியல்ஸ் மற்றும் ஜென் ஸி வயதினர் ஆகும். இதில் 16% பேர் ஜென் ஸி என நோ புரோக்கர் நிறுவனத்தின் துணை நிறுவனர் சவுரப் தெரிவிக்கிறார்.

மில்லினியல்கள் எனப்படுபவர்கள் 27 முதல் 42 வயதுக்கு உட்பட்டவர்கள், ஜென் ஸி எனப்படுபவர்கள் 11 முதல் 26 வயதுக்கு உட்பட்டவர்கள். பெங்களூரில் பிரதான பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் வீட்டு வாடகைகளில் மதிப்பு 45 முதல் 50 % வரை உயர்ந்துள்ளது.
பெங்களூருவின் முக்கிய பகுதிகளில் இரண்டு படுக்கை அறை கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மாத வாடகை 50,000 முதல் 65,000 வரை உயர்ந்துள்ளது. அதே வேளையில் மூன்று படுக்கையறை கொண்ட வீட்டின் வாடகை 80,000 வரை அதிகரித்துள்ளது.
பெங்களூரில் செயல்பட்டு வரக்கூடிய ரியாலிட்டி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குனரான சுனில் அண்மைக்காலமாக 1 முதல் 2 கோடி ரூபாய் வரையிலான மதிப்புள்ள வீடுகளை வாங்குபவர்களின் எண்ணிக்கை பெங்களூருவில் அதிகரித்துள்ளது என்றும், இவர்கள் பெரும்பாலும் 28 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர் என்றும் தெரிவிக்கிறார். அதிகளவிலான வாடகை செலுத்துவதற்கு பதிலாக சொந்தமாக வீடு வாங்கிவிடலாம் என்ற நோக்கத்தில் வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் என கூறுகின்றனர்.
அண்மையில் கர்நாடகா அரசு வெளியிட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையில் கர்நாடக மாநிலத்தில் 2022-23 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தனிநபர் வருமானம் என்பது 5.8 சதவீதம் என உயர்ந்துள்ளது. அதே வேளையில் கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் பெங்களூரில் வேலை செய்பவர்களின் ஊதியமும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே தான் மில்லினியல்கள் மற்றும் ஜென் ஸி வயதினர் சொந்த வீடு வாங்கும் முடிவினை எடுக்கின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
பெங்களூருவில் வீட்டு வாடகைகளின் மதிப்பு உயர்ந்து வருவதன் காரணமாக பெரும்பாலானோர் வாடகை வருமானம் கிடைக்கும் என்ற நோக்கத்திலும் வீடுகளை வாங்குகின்றனர் என இங்கே செயல்படக்கூடிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்திரா நகர், கோரமங்கலா மற்றும் ஒயிட் ஃபீல்ட் பகுதிகளில் வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு முடிவு!! உருவாகிறது இரண்டாவது ஐடி சிட்டி: கர்நாடக அரசு அதிரடி!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications