2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், நிலத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்தின் மீதான வரி கணக்கீட்டில் வழங்கப்படும் இன்டெக்ஸேஷன் சலுகையை நீக்குவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இது இந்திய ரியல் எஸ்டேட் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டும் அல்லாமல், அரசு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்வோம் வாங்க.
மத்திய அரசின் அறிவிப்பை முழுமையாக புரிந்துகொள்வதற்கு முன்பு இன்டெக்ஸேஷன் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும். ஒருவர் நிலத்தையோ அல்லது ஒரு வீட்டையோ விற்பனை செய்யும் போது கிடைக்கும் லாபத்திற்கு கேப்பிடல் கெயின்ஸ் டாக்ஸ் கணக்கிடும் முறையில் ஒரு பகுதி தான் இன்டெக்ஸேஷன். கேப்பிடல் கெயின்ஸ் அளவீட்டைக் கணக்கிடும் போது ஒருவர் வாங்கிய ரியல் எஸ்டேட் சொத்தின் விலையை, இன்றைய பணவீக்கத்திற்கு ஏற்ப உயர்த்திக் கணக்கிட்டு அதன் அடிப்படையில், லாப அளவுகளைக் கணக்கிட்டு லாபத்தில் 20 சதவீத வரி செலுத்துவார்கள். இந்த முறை இனி கிடையாது என்பது தான் மத்திய அரசு இன்றைய பட்ஜெட் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

பட்ஜெட் அறிவிப்புக்கு முன்னர், நிலம் அல்லது வீட்டை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் நீண்ட கால மூலதன லாபத்திற்கு 20% வரி விதிக்கப்பட்டது. இதில் இன்டெக்ஸேஷன் சலுகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஆனால், தற்போது பட்ஜெட் அறிவிப்புகளின் படி, நிலத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் மூலதன லாபத்திற்கு விதிக்கப்படும் நீண்ட கால மூலதன லாபத்திற்கான வரி விகிதத்தை 12.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டு இன்டெக்ஸேஷன் சலுகையை ரத்து செய்துள்ளது.
இதை முழுமையாகப் புரிந்து கொள்வதற்காக ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். அருண் என்பவர் 2002-2003 ஆம் நிதியாண்டில் ரூ.25 லட்சத்திற்கு ஒரு நிலத்தை வாங்குகிறார் என வைத்துக்கொள்வோம். 2023-2024 ஆம் நிதியாண்டில் அந்த நிலத்தை ரூ.1 கோடிக்கு விற்பனை செய்கிறார்.
இதற்கு முந்தைய விதிகளின்படி, ரூ.25 லட்சம் வாங்கிய விலையை, வருமான வரித் துறையால் அறிவிக்கப்படும் செலவின பணவீக்க குறியீட்டு ( Cost Inflation Index - CII) எண்களைக் கொண்டு பணவீக்கத்திற்கு ஏற்ப உயர்த்திக் காட்ட வேண்டும். அப்படி பார்க்கும் போது கேப்பிடல் கெயின் அளவு 17,14,280 ரூபாய், இதற்கு 20 சதவீத வரி எனில் 3,42,850 ரூபாய்.
ஆனால், புதிய விதியின் படி நிலத்தை வாங்கிய விலையில் இருந்து நிலத்தை விற்பனை செய்த தொகையை நேரடியாகக் கழித்து, மூலதன லாபத்தைக் கணக்கிட வேண்டும். இதில் கேப்பிடல் கெயின் என்பது 7500000 இதற்கு 12.5 சதவீத வரி என்றால் 937500 ரூபாய் செலுத்த வேண்டும்.
செலவு பணவீக்க குறியீட்டு (CII) என்றால் என்ன?
ஒவ்வொரு நிதிய ஆண்டிலும், இன்டெக்ஸேஷன் சலுகையைக் கணக்கிடுவதற்காகச் செலவின பணவீக்க குறியீட்டை (CII) வருமான வரித் துறை வெளியிடுகிறது. இந்த எண், நீண்ட கால மூலதன சொத்தின் பணவீக்கத்திற்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட செலவைக் கணக்கிடப் பயன்படுகிறது.
விற்பனை செய்யப்பட்ட சொத்தின் விலையில் இருந்து, பணவீக்கத்திற்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட வாங்கிய விலையைக் கழித்து, வரி செலுத்த வேண்டிய மூலதன லாபத்தை கணக்கிடப்படும். இருப்பினும், குறிப்பிட்ட சொத்துகளுக்கே இந்த இன்டெக்ஸேஷன் சலுகை பொருந்தும்.
நடப்பு 2024-25 நிதியாண்டிற்கு (2025-26 கணக்கீடு ஆண்டு) மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) செலவின பணவீக்க குறியீட்டை (CII) 363 ஆக அறிவித்துள்ளது. இது 2023-24 நிதியாண்டிற்கு (2024-25 கணக்கீடு ஆண்டு) 348 ஆக இருந்தது.
மேலே குறிப்பிட்ட நீண்ட கால மூலதன வரி விதிப்புக்கான காலம் 24 மாதம், 24 மாதங்களுக்கு விற்கப்படும் ரியல் எஸ்டேட் சொத்துக்களாக கணக்கிடப்பட்டு 12.5 சதவீத வரி விதிக்கப்படும். இதுவே 24 மாதங்களுக்குள் சொத்துக்களை விற்பனை செய்தால் வருமான வரி பலகையின் கீழ் கணக்கிடப்படும்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications