ஒரு காலத்தில் வீடு வாங்குவது என்பது ஒவ்வொரு குடும்பத்தின் மிகப்பெரிய கனவாகவே இருந்தது. வீடு என்பது பாதுகாப்பு, பெருமை மற்றும் செல்வம் என்று கருதப்பட்டது. பல வருடங்கள் அந்த கனவை நனவாக்க பலரும் உழைத்தும் இருக்கின்றனர். ஆனால், இன்று காலம் மாறியுள்ளது. செலவுகள் அனைத்தும் உயர்ந்துள்ளன.
இதே நேரத்தில் மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற வளர்ச்சி வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன. அதனால் தான் தற்போது ஒரு கேள்வி எழுகிறது. இன்று உங்கள் முழுப் பணத்தையும் சொத்தில் (வீடு/தொழில் நிலம்) முதலீடு செய்வது புத்திசாலித்தனமான முடிவா? அல்லது வளர்ச்சி மற்றும் திரும்பப் பெறும் (returns) வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற நிதி தயாரிப்புகள் மீது முதலீடு செய்து சிறந்ததா?

சொத்து வாங்கும் முடிவு தவறானது அல்ல. ஆனால், அதை ஒரு முதலீடு என்ற முறையில் பார்க்கும் போது, மிகவும் நீண்ட காலம், பராமரிப்பு செலவுகள், திரும்ப விற்பதில் சிக்கல்கள் ஆகியவை இருப்பதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மாற்றாக, மியூச்சுவல் ஃபண்டுகள், சிறிய தொகையிலிருந்தே முதலீடு செய்யும் வாய்ப்பு, நெகிழ்வான முறைகள், மற்றும் பங்குச் சந்தையின் வளர்ச்சியுடன் இணைந்த திருப்பி வழங்கும் திறன் கொண்டவை. எனவே, இன்று வீடு வாங்குவது முக்கியமா? இல்லையா..? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
இதுதொடர்பாக பங்குச்சந்தை முதலீட்டாளர் மற்றும் நிதி நிபுணர் ரஜ்நிஷ் மேஹன் (Rajnish Mehan) லிங்க்ட்இனில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "ரியல் எஸ்டேட்" என்பது ஒரு காலத்தில் சிறந்த முதலீடாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய சூழலில் இது மாறிவிட்டது. இப்போது, இந்த முதலீடு மீண்டும் சிந்திக்க வேண்டிய ஒன்றாக மாறியுள்ளது. ஏனெனில், 2005இல் வேலை செய்த முதலீட்டு உத்தி, 2025ஆம் ஆண்டிலும் வேலை செய்யும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
பல தசாப்தங்களாக, வீடு அல்லது நிலம் வாங்குவது தான் பாதுகாப்பான முதலீடு என்ற நம்பிக்கையில் மக்கள் இருந்தனர். இதற்கு மூன்று முக்கிய காரணங்களும் உள்ளன. ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தவர்கள் சில ஆண்டுகளிலேயே நல்ல லாபம் பெற்றனர். மேலும், சொந்த வீட்டில் வசிப்பது ஒரு நிலைத்த மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையின் அடையாளமாக பார்க்கப்பட்டது. அடுத்து, "இது என் சொந்த வீடு" என்று சொல்வதிலே ஒரு தனி மரியாதையும் நம்பிக்கையும் இருந்தது. இந்த காரணங்களால், வீடு வாங்குவது பல ஆண்டுகளாக குடும்பத் தலைவர் எடுத்த முக்கிய முடிவாக இருந்தது. ஆனால் தற்போது, இந்நிலை மாறி வருகிறது.
முந்தைய காலங்களில் சொத்து முதலீடு என்பது இரட்டை இலக்க வருமானம் (double-digit returns) வழங்கி வந்தது. ஆனால் இன்று, அவ்வாறு கிடைப்பாது மிகவும் குறைந்துவிட்டது. பெரும்பாலான நகரங்களில் வீட்டு விலைகள் மெதுவாகவே உயருகின்றன. வாடகை வருமானமும் நிலையானதாக இல்லாமல் இருக்கிறது. சொத்தை விற்பது என்பது மாதக் கணக்கில் செல்லக்கூடிய சிக்கலான நடைமுறையாகும். மேலும், வீடு வாங்குவதற்கு அதிக முதலீடு தேவைப்படுகிறதும். பிறகு அதன் பராமரிப்பு செலவுகள், ஆவணச் சிக்கல்கள், வரிவிதிகள் என பல செலவுகள் வரும்.
ஆனால், இப்போது மியூச்சுவல் ஃபண்டுகள் என்பது பலராலும் விரும்பப்படும் முதலீட்டு திட்டமாக மாறியுள்ளது. குறிப்பாக இளைஞர்களும், நடுத்தர வர்க்க முதலீட்டாளர்களும் இதில் அதிகமாக முதலீடு செய்கின்றனர். இதனால், SEBI (பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையம்) மூலம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் பாதுகாப்பான முதலீடு. தெளிவான விதிமுறைகள், நிதி நேர்மையுடன் செயல்படும் அமைப்புகள். சிறிய தொகையிலேயே முதலீடு செய்யக்கூடிய SIP (Systematic Investment Plan) வாய்ப்பு, மாதம் மாதமாக சிறிது சிறிதாக முதலீடு செய்யும் வசதி. தேவையான நேரத்தில் பணத்தை திரும்ப பெறும் நெகிழ்வான அமைப்பும் உள்ளது. இதனால், நிலத்தில் பணத்தை முதலீடு செய்வதற்கு பதிலாக இன்றைய தலைமுறையினர் மியூச்சுவல் ஃபண்டுகளையே அதிகம் முதலீடு செய்கின்றனர்.
மியூச்சுவல் ஃபண்டுகள் இன்று நியாயமான கட்டுப்பாடுகளுடன், வளர்ச்சியடைந்த முதலீட்டு வடிவமாக மாறியுள்ளதாக நிதி நிபுணர் ரஜ்நிஷ் மேஹன் கூறியுள்ளார். அவர் கூறுகையில், "SIP (Systematic Investment Plan) மூலம் சிறிய தொகையிலேயே முதலீடு செய்ய முடியும். மாதம் ₹500 இருந்தாலே போதும். இது முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு ஒழுங்குமுறை ஏற்படுத்தும், சந்தை நேரம் குறித்து பதற்றமில்லாமல் செயல்பட வாய்ப்பு தரும். இதற்கு பராமரிப்பு செலவுகள் கிடையாது" என்றார்.
இன்றைய காலத்தில், மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய இரண்டிற்கும் தனித்தனியான பலன்களும் சவால்களும் உள்ளன. ஆனால், எந்த ஒன்றை தேர்வு செய்வது என்பது ஒரு பொதுவான பதிலல்ல. உங்கள் நிதி இலக்குகள், வருமான நிலை, மூலதனத்தின் அளவு மற்றும் பெரிய செலவுகளுக்கான தயாரிப்பு ஆகியவற்றை பொருத்தே அமையும். உதாரணமாக, நீண்டகால பாதுகாப்பாக ஒரு சொந்த வீடு தேவைப்படுகிறது என்றால் ரியல் எஸ்டேட் நல்ல தேர்வு. நெகிழ்வான, குறைந்த தொகையிலே ஆரம்பிக்க விரும்புகிறீர்கள் என்றால், மியூச்சுவல் ஃபண்டுகள் சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
இளைஞர்கள் பணம் சேமித்து செல்வம் உருவாக்க விரும்பினால், சிறிய SIPகளால் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம். இது சேமிப்பின் பழக்கத்தை வளர்க்கிறது மற்றும் காலத்துடன் சிறந்த வருமானத்தை தரும். மாறாக, ஏற்கனவே போதுமான சேமிப்புகள் உள்ளவர்கள் மற்றும் சொத்துக்களை ஆண்டுகள் வைத்திருக்கும் திறன் உள்ளவர்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யலாம்.
ஆனால் வருமானம் குறைவாக இருக்கும் போது, ரூ.50 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை சொத்துக்களில் கட்டுப்படுத்துவது மீண்டும் சிந்திக்க வேண்டிய விஷயம். நடுத்தர வர்க்க முதலீட்டாளர்கள் குறைந்த மூலதனத்துடன் சொத்தில் முதலீடு செய்யும் போது, அதன் கட்டுப்பாடுகளையும் கவனிக்க வேண்டும். 2025ல் செல்வம் வெறும் எண்ணங்கள் அல்லது கருத்துக்களால் அல்ல. அதனை அடிப்படையாகக் கொண்டு மக்களில் விழிப்புணர்வு உருவாக்குதல், சரியான ஒதுக்கீடு செய்வது மற்றும் அனைத்து தரப்பினரிடையே நெருக்கமாக பணியாற்றுதல் மூலம் உருவாகும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications