ரியல் எஸ்டேட் தான் பெஸ்ட் ஆப்ஷன்.. பணத்தை கொட்டும் பெரும் தலைகள்..!!

மண் மீதும், பொன் மீதும் செய்யும் முதலீடு எப்போதும் கைவிடாது என்ற பார்மூலாவை நீண்ட காலமாக இந்திய மக்கள் பின்பற்றி வந்தாலும், கடந்த 5 வருடத்தில் சொந்த வீடு வாங்குவது தவறான முடிவு என்ற கருத்து நிதியியல் வல்லுனர்கள் மற்றும் Finfluencers மத்தியில் அதிகமாக முன்வைக்கப்படும் கருத்தாக உள்ளது. இதை நம்பி பலரும் பெரும் நகரங்களில் சொந்த வீடு வாங்குவது வேஸ்ட் என்ற அடிப்படையில் வாடகை வீட்டிலேயே இருக்க முடிவும் செய்துள்ளனர்.

ஆனால் மறுமுனையில் இந்தியாவில் இருக்கும் பெரும் பணக்காரர்களும், வெளிநாட்டில் இருக்கும் NRI-களும் அதிகளவில் ரியல் எஸ்டேட் சொத்துக்களை வாங்கி வருகின்றனர். பெரும் பணக்காரர்களின் இந்த மாறுப்பட்ட முதலீட்டு கோணம் அதிர்ச்சியை அளிக்கிறது. பெரும் பணக்காரர்கள் எதற்காக ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்கிறார்கள்..? இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன..?

ரியல் எஸ்டேட் தான் பெஸ்ட் ஆப்ஷன்.. பணத்தை கொட்டும் பெரும் தலைகள்..!!

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் குடும்ப அலுவலகங்கள் தங்களுடைய செல்வத்தை பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு செல்வம் - சொத்துகளை உருவாக்கவும் ஆடம்பர் ரியல் எஸ்டேட் சொத்துகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் உள்ள முக்கியமான இடங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் 25,000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ஆடம்பர சொத்துகள் வாங்கப்பட்டு உள்ளது. இது முந்தைய மூன்று ஆண்டுகளை ஒப்பிடுகையில் 90% அதிகரிப்பு என ரியல் எஸ்டேட் புள்ளிவிவர நிறுவனமான Zapkey தெரிவித்துள்ளது.

பெரிய தொழிலதிபர் குடும்பங்கள் மற்றும் அவர்களது குடும்ப அலுவலகங்களின் மூலதன மேலாண்மை உத்திகளில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளதை இந்த ஆடம்பர சொத்து வாங்குவதை குறிக்கிறது.

பங்குகள், பத்திரங்களை தாண்டி ரியல் எஸ்டேட் ஒரு நீண்ட கால முதலீடாக பார்க்கப்படுகிறது. மேலும் மற்ற சொத்துக்களை காட்டிலும் ரியல் எஸ்டேட் வாயிலாக செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாகவும், எளிதாக அளிக்க முடியும். மேலும் தற்போது ஆடம்பர சொத்துகளில் செய்யப்பட்டும் முதலீடு மூலம் அதை அனுபவிக்க முடியும், எதிர்காலத்தில் அதன் மதிப்பும் உயரும் என பல நன்மைகள் இருப்பதாக பெரும் பணக்காரர்கள் நினைக்கின்றனர்.

இதேவேளையில் பெரும் தொழிலதிபர்கள் தங்கள் நிறுவனத்தில் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு புதிய உச்சத்தை எட்டியிருக்கும் வேளையில் பலர் பங்குகளை விற்பனை செய்து லாபம் பார்த்து வருகின்றனர். இந்த பணம் தான் தற்போது ரியல் எஸ்டேட் சொத்துக்களில் விழுகிறது. தொழிலதிபர்களுக்கு ஏற்றார் போல் இந்திய பங்குச்சந்தையில் ரீடைல் முதலீட்டாளர்களின் முதலீடு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

வேதாந்தா குழுமம், பஜாஜ் குழுமம், கோத்ரெஜ், இன்ஃபோசிஸ், ராதாகிருஷ்ணன் தமணி, உதய் கோடக், ஜிவிகே, வெல்ஸ்பன், பாலிகேப், பார்லே புராடக்ட்ஸ், மற்றும் டிவிஸ் லெபாரட்டரீஸ் ஆகிய பெரிய தொழில் குழுமங்கள் மற்றும் குடும்பங்கள் தற்போது மும்பை, ஹைதரபாத், பெங்களூர், டெல்லியில் ஆடம்பர சொத்துக்களை வாங்கி வருகின்றனர்.

பெரும் பணக்காரர்கள் ஆடம்பர பங்களாக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் நிலங்கள் என பல வகையில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளனர். இதேவேளையில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஆடம்பர சொத்துகளின் மதிப்பு கடந்த சில ஆண்டுகளில் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதனால் ஏற்கனவே வாங்கியவர்கள் தற்போது விற்பனை செய்துவிட்டு புதிய சொத்துக்களை வாங்குவதும் நடக்கிறது.

இதனால் தொழிலதிபர்களுக்கு ரியல் எஸ்டேட் ஒரு பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பாக பார்க்கின்றனர். இதேபோல் பெரும்பாலான ஆடம்பர குடியிருப்புகள் வங்கிக்கடன் இல்லாமல் நடக்கிறது எனவும் சந்தையில் கருத்து நிலவுகிறது, இதனால் மக்கள் இதையும் கவனிக்க வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+