ஹைதராபாத்: ஹைதராபாத்தில் எல்கேஜி கல்வி கட்டணம் 3.7 லட்சம் ரூபாயாக உயர்ந்து இருக்கிறது என ஒருவர் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய விவாதத்தை எழுப்பி உள்ளது. பெங்களூருவை சேர்ந்த முதலீட்டாளர் ஒருவர் ஹைதராபாத்தில் கல்வி கட்டணங்கள் தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார்.
ஹைதராபாத்தில் எல்கேஜி படிப்புக்கான கல்வி கட்டணம் எவ்வளவு தெரியுமா? 3.7 லட்சம் ரூபாய், இது 2.3 லட்சம் ரூபாயாக இருந்து தற்போது 3.7 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கிறது என தன்னுடைய பதிவில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இந்தியாவில் நாம் பணவீக்கம் பற்றி பேசுகிறோம், குறிப்பாக ரியல்எஸ்டேட் துறையில் பணவீக்கம் அதிகரித்திருப்பதாக கூறுகிறோம். ஆனால் உண்மையில் கல்வி பணவீக்கம் என்பது நாம் எதிர்பாராத வகையில் அதிகரித்துள்ளது என கூறியுள்ளார்.

அவர் எந்த பள்ளியில் இவ்வாறு கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதை குறிப்பிடவில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக தேசிய அளவில் இது தான் நிலைமை எனக் கூறும் வகையில் தன்னுடைய பதிவினை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் பள்ளி படிப்புக்கான கட்டணங்கள் கடந்த 30 ஆண்டுகளில் 9 மடங்கு அதிகரித்து இருக்கிறது எனக் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி கல்லூரி மேற்படிப்புக்கான கல்வி கட்டண உயர்வினை கேட்டால் தலையே சுற்றிவிடும் ஏனெனில் இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் கல்லூரி மேற்படிப்புக்கான கட்டணங்கள் 20 மடங்கு அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டி உள்ளார்.
நாம் தற்போது வீட்டுமனைகளின் விலை உயர்வை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் ஆனால் உண்மையில் நாம் கவலைப்பட வேண்டியது கல்வி கட்டண உயர்வு பற்றி தான் எனக் கூறியுள்ளார். கல்விக்கு நாம் கொடுக்கும் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது என தெரிவித்துள்ளார்.

அவரது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது. ஒரு பயனர் இந்தியாவில் உணவு ,சுகாதார மற்றும் கல்வி ஆகிய மூன்றுக்கான செலவினங்கள் அதிக அளவில் உயர்ந்துள்ளன, மிடில் கிளாஸ் மக்கள் தங்களுடைய வருமானத்தில் கிட்டத்தட்ட 70 சதவீதத்தை இந்த மூன்றுக்காகவே செலவிட வேண்டி இருக்கிறது எனக் கூறியுள்ளார்.
மேலும் உணவு, சுகாதாரம் மற்றும் கல்விக்கான பணவீக்கம் என்பது ஆண்டுதோறும் 10 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்து வருகிறது என தெரிவிக்கிறார். ஒரு பயனர் எல்கேஜி கல்வி கட்டணம் என்பது தனியார் நிறுவன ஊழியர்களின் ஆண்டு ஊதியத்தை விட அதிகமாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications