உலகின் மிகப்பெரிய டெக் மற்றும் தொழில்நுட்ப சேவை நிறுவனமாக விளங்கும் கூகுள்-ன் தாய் நிறுவனமான ஆல்பபெட்-ஐ நிர்வாகம் செய்து வந்த செர்ஜி பிரின், லேரி பேஜ் ஆகியோர் நிர்வாக பணியில் இருந்து வெளியேற முடிவு செய்த போது இவ்விருவருக்கு மட்டும் அல்லாமல் அனைத்து நிர்வாக குழு உறுப்பினர்களின் ஒற்றை தேர்வாக இருந்தது சுந்தர் பிச்சை தான்.
சுந்தர் பிச்சை சிஇஓ-வாக அறிவிக்கும் வரையில் இவரது பெயர் பெரிய அளவில் பிரபலம் இல்லை என்றாலும், கூகுள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தது சுந்தர் பிச்சை தான்.
கூகுள், ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓ உயர்ந்து கோடிக்கணக்கான தமிழர்களுக்கு பெருமை சேர்த்த இவரின் உண்மையான பெயர் என்ன தெரியுமா..?
சுந்தர் பிச்சை முழு பெயர்
மதுரையில் லட்சுமி மற்றும் ரகுநாத பிச்சை ஆகியோருக்கு மகனாக பிறந்து, சென்னையில் பள்ளி கல்வி, ஐஐடி காரக்பூர் கல்லூரி படிப்பை முடிந்து, அமெரிக்காவில் மேற்படிப்பு முடிந்து இன்று கூகுள் சிஇஓ-ஆக உயர்ந்திருக்கும் சுந்தர் பிச்சையின் உண்மையான முழு பெயர் சுந்தரராஜன் பிச்சை.
சுந்தரராஜன் பிச்சை
சுந்தரராஜன் பிச்சை என்ற பெயரை உலகில் பல நாடுகளில் இருந்து பணியாற்றும் கூகுள் போன்ற பெரு நகரங்களில் பயணியாற்றும் போது அழைக்க ஏதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக சுந்தர் பிச்சை என காலப்போக்கில் அழைக்க பெற்றார்.
சுந்தரராஜன் பிச்சை-யின் மாபெரும் வெற்றி
சுந்தர் பிச்சை என்கிற சுந்தரராஜன் பிச்சை-யின் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், பெற்றோர்கள் படித்து நல்ல வேலையில் இருந்தவர்கள் என்பதால் இவருடைய வளர்ச்சி பாதை மிகவும் சிறப்பாக இருந்தது என்றால் மறுக்க முடியாது. சுந்தரராஜன் பிச்சை-யின் மாபெரும் வெற்றிக்கு பின் அவருடைய முயற்சி 95 சதவீதம் பங்கு வகிக்கிறது.
ரகுநாத பிச்சை - லட்சுமி
சுந்தரராஜன் பிச்சை-யின் தாய் லட்சுமி இவர் ஸ்டெனோகிராபர் ஆக பணியாற்றியவர் மற்றும் அவரது தந்தை ரகுநாத பிச்சை இவர் GEC என்னும் எலக்ட்ரிகல் இன்ஜினியராக இருந்தார். ரகுநாத பிச்சை சொந்தமாக எலக்ட்ரிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை வைத்திருந்தார்.


Click it and Unblock the Notifications