மாஃபியா கேங்-ஐ விட்டு வராத எலான் மஸ்க்.. டிவிட்டரை வாங்கியது இதற்குத் தானா..?

எலான் மஸ்க் தங்க முட்டை போடும் வாத்தான டெஸ்லா பங்குகளை விற்பனை செய்து, டிவிட்டரை வாங்க சமுக வலைத்தளத் துறையில் இறங்க வேண்டும், மக்களுக்குச் சுதந்திர பேச்சுக்கான தளத்தை உருவாக்க வேண்டும் போன்றவை வெளியில் சொல்லப்பட்டாலும், வெளியில் சொல்லப்படாத ஒரு முக்கியக் காரணமும் உண்டு.

இதேபோல் எலான் மஸ்க் தனது ஆரம்பமான பேபால் மாபியா தாக்கத்தில் இன்னும் இருந்து வெளியில் வரவில்லை என்றும், இதைச் சாத்தியப்படுத்துவே எலான் மஸ்க் டிவிட்டரை பெரும் தொகைக்கு வாங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு பேபால் மாஃபியா குறித்துத் தெரிந்துகொண்டால் மட்டுமே, எலான் மஸ்க் திட்டத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

மாஃபியா

மாஃபியா

மாஃபியா என்ற உடன் கடத்தல், கருப்புப் பணம் போன்ற தவறான செயல்கள் என நினைத்து விட வேண்டாம். பலருக்கும் எலான் மஸ்க்-ஐ டெஸ்லா அல்லது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் வாயிலாகத் தெரிந்திருக்கும். ஆனால் எலான் மஸ்க்-ன் துவக்கம் X.com

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் X.com என்னும் பேமெண்ட் சேவை வழங்கும் ஒரு ஆன்லைன் வங்கி தான் இவருடைய பிரம்மாண்ட வளர்ச்சிக்குக் காரணம். இன்று டிஜிட்டல் பணப் பரிமாற்றம் மிகவும் எளிதாக இருக்கிறது, வங்கிகளுக்கே டிஜிட்டல் பணப் பரிமாற்றம் என்றால் என்ன என்று தெரியாத நிலையில் அமெரிக்க மக்கள் அனைவருக்கும் டிஜிட்டல் வங்கி சேவையை அறிமுகம் செய்தவர் தான் எலான் மஸ்க்.

X.com இணைப்பு

X.com இணைப்பு

இப்படி எலான் மஸ்க் 1999ல் உருவாக்கிய X.com நிறுவனத்தை 2000ல் அதன் சக போட்டி நிறுவனமான Confinity Inc உடன் இணைக்கப்பட்டு PAYPAL ஆக மாற்றப்பட்டது. இந்த PAYPAL நிறுவனத்தில் X.com மற்றும் Confinity Inc -ன் நிறுவனர்களும் முதலீட்டாளர்களும் இருந்தனர்.

 பேபால் மாபியா கேங்

பேபால் மாபியா கேங்

இந்தக் கூட்டத்தைத் தான் பேபால் மாபியா-வாக அழைக்கப்படுகிறது. இவர்கள் உருவாக்கிய நிறுவனங்களின் பட்டியல் இது தான் Tesla, Inc., LinkedIn, Palantir Technologies, SpaceX, Affirm, Slide, Kiva, YouTube, Yelp, மற்றும் Yammer.

Ebay நிறுவனத்திற்கு விற்பனை

Ebay நிறுவனத்திற்கு விற்பனை

2002ல் பேபால் நிறுவனத்தை Ebay நிறுவனத்திற்கு விற்பனை செய்துவிட்டு வெளியேறிய கூட்டம் என்று டெக் உலகின் மாற்றத்திற்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் எலான் மஸ்க் டிவிட்டர் மூலம் தனது ஆரம்ப வாழ்க்கையை இணைக்க உள்ளதாக நம்பப்படுகிறது.

X holdings Inc

X holdings Inc

எலான் மஸ்க்-ஐ பேபால் தான் பில்லியனராக்கியது, சிலிக்கான் வேலியில் முக்கிய நபராக மாற்றியது. இதனால் பேமெண்ட் என்பது எலான் மஸ்க் ரத்தத்திலேயே ஊறிப்போன ஒன்று. இதனாலேயே எலான் மஸ்க்-ன் தனது முதல் நிறுவனத்தின் பெயரான X.com போலவே X holdings Inc என்ற நிறுவனத்தை உருவாக்கி அதன் கிளை நிறுவனமான X Holdings II Inc உடன் டிவிட்டரை மொத்தமாக இணைந்துள்ளார்.

பேமெண்ட் மட்டுமே

பேமெண்ட் மட்டுமே

எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கியதற்கு அடிப்படை காரணம் பேமெண்ட் மட்டுமே, குறிப்பாகத் தற்போது உலகளவில் வங்கிகள் மற்றும் கிரெடிட் யூனியன் மத்தியில் பயன்படுத்தப்படும் ACH-க்குப் போட்டியாக ஒரு நெட்வொர்கை கொண்டு வர வேண்டும் அதைக் கிரிப்டோ தொழில்நுட்பத்தில் உருவாக்க வேண்டும் என்பது தான் அடிப்படை காரணமாக இருக்கும் என மார்கன் ஸ்டான்லி முன்னாள் உயர் அதிகாரி Caitlin Long தெரிவித்துள்ளார்.

முக்கிய நபர்கள்

முக்கிய நபர்கள்

இதற்கு ஏற்றார் போல் எலான் மஸ்க் டிவிட்டரை வாங்க Binance நிறுவனர் Changpeng Zhao, பேபால் மாபியா உறுப்பினர் டேவிட் சாக்ஸ், A16Z கிரிப்டோ முதலீட்டாளர் ஸ்ரீராம் கிருஷ்ணன் ஆகியோர் உதவியுள்ளனர். இதில் ஸ்ரீராம் கிருஷ்ணன் தற்போது டிவிட்டரை மறுசீரமைப்பு செய்யும் முக்கிய அதிகாரியாக உள்ளார்.

டார்கெட்

டார்கெட்

இதை ஆங்கிலத்தில் கனெக்டிங் டாட்ஸ் எனக் கூறலாம், இதைப் பார்த்தால் எலான் மஸ்க் அரசியல், மீடியா துறையில் இறங்க போவதாகத் தெரிகிறதா அல்லது பேமெண்ட்ஸ்-ல் இறங்கப்போவதாகத் தெரிகிறதா..? மேலும் எலான் மஸ்க் 2028க்குள் 1.2 பில்லியன் டாலர் தொகையைப் பேமெண்ட் வருமானமாகக் கொண்டு வர இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதன் மூலம் டிவிட்டரை வெறும் சமுக வலைத்தள நிறுவனமாக இருப்பதைத் தாண்டி பேமெண்ட் நிறுவனமாக மாறப்போகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+