ஐரோப்பிய யூனியன் பகுதியில் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் ஜெர்மனி நாட்டின் பொருளாதாரம் 2 காலாண்டுகள் தொடர்ந்து மைனஸ் அளவில் ஜிடிபி வளர்ச்சி அளவீட்டை பதிவு செய்துள்ள காரணத்தால் ரெசிஷனுக்குள் நுழைந்து உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
ஜெர்மனி வீழ்ச்சியை தொடர்ந்து அடுத்தடுத்து பிற ஐரோப்பிய யூனியன் நாடுகளும் மோசமான பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்து ஒட்டுமொத்த ஐரோப்பாவும் யூனியன் நாடுகளும் ரெசிஷனுக்குள் சிக்குமா என்ற கேள்வி இருந்தது. இது தற்போது உறுதியாகியுள்ளது.

ஐரோப்பிய யூனியனில் முன்பு உறுப்பினராக இருந்க பிரிட்டன் பொருளாதாரம் ஏற்கனவே ரெசிஷனுக்குள் மாட்டிக்கொண்டு உள்ளது. இதை தொடர்ந்து ஜெர்மனி நாட்டின் பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டின் மார்ச் காலாண்டில் -0.3 சதவீதம் சரிந்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் கடைசி 3 மாதத்தில் ஜெர்மனி பொருளாதாரம் -0.5 சதவீதமாக இருந்து. தொடர்ந்து இரு காலாண்டுகள் சரிவை சந்தித்த நிலையில் ஜெர்மனி ரெசிஷனுக்குள்ள நுழைந்தது.
இந்த நிலையில் பிரிட்டன் வெளியேற்றத்திற்கு பின் EUROZONE-ல் இருக்கும் 20 நாடுகளின் மொத்த பொருளாதாரம் மார்ச் காலாண்டில் -0.1 சதவீதமாக சரிந்துள்ளது. முன்பு 0 சதவீதம் என கணிக்கப்பட்ட நிலையில் தற்போது திருத்தி கணக்கிடப்பட்டு உள்ளது. இதேபோல் டிசம்பர் காலாண்டிலும் -0.1 சதவீதம் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் ஒட்டுமொத்த ஐரோப்பிய பொருளாதாரமும் தற்போது ரெசிஷனுக்குள் நுழைந்துள்ளது. ஒரு நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து 2 காலாண்டுகளுக்கு மைனஸ் GDP வளர்ச்சி அளவீட்டை எதிர்கொண்டால் அது ரெசிஷனுக்குள் நுழைந்துள்ளதாக பொருள்.
ஐரோப்பாவின் பொருளாதார சரிவுக்கு மிக முக்கியமான காரணம், உக்ரைன் மீதான ரஷ்யா போர் தொடுத்த காரணத்திற்காக ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு தடை விதித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முக்கிய குளிர்காலத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
ரஷ்யா-வில் இருந்து ஐரோப்பிய பகுதிக்கு செல்லும் அனைத்து கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகத்தை குறைக்கப்பட்டதும், நிறுத்தப்பட்ட குளிர்காலத்தில் புடின் அறிவித்தார். இது ஜெர்மனி உட்பட அனைத்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரிட்டன் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து அந்நாட்டுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
'EuroZone' என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் 20 உறுப்பு நாடுகளின் கூட்டமைப்பாகும், இந்த 20 நாடுகளும் யூரோ-வை வர்த்தக நாணயமாக பயன்படுத்துகிறது. இதனால் பொருளாதார வளர்ச்சி முதல் கொள்கை அளவில் வரையில் அதிகளவில் ஒத்துழைப்பு உடனும், இணைப்புடன் இந்த 20 நாடுகள் உள்ளது.
EuroZone நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரியா, பெல்ஜியம், குரோஷியா, சைப்ரஸ், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லாட்வியா, லிதுவேனியா, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்லோவேனியா மற்றும் ஸ்பெயின் ஆகியவை உள்ளது.


Click it and Unblock the Notifications