உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரித்துள்ள காரணத்தால் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது.
இதனால் உலகம் முழுவதும் விரைவில் ரெசிஷன் உருவாகும் நிலை ஏற்பட்டு உள்ளது, குறிப்பாக வல்லரசு நாடுகள் அனைத்தும் இந்த ரெசிஷனில் அதிகம் பாதிக்கப்படும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
இது இந்திய ஐடி நிறுவனங்களைப் பெரிய அளவில் பாதிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஐடி நிறுவனங்கள்
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்தும் பெரும்பாலான வர்த்தகத்தை வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தான் வைத்துள்ளது. இந்த நிலையில் பொருளாதார மந்தநிலை அதாவது ரெசிஷனால் அதிகம் பாதிக்கப்படப்போவது அமெரிக்காவும், ஐரோப்பா, புரட்டனாக இருக்கும் நிலையில், இந்திய ஐடி நிறுவனங்கள் கட்டாயம் பாதிக்கப்படும்.
ரெசிஷன்
அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் ரெசிஷனில் மூழ்கினால் இந்திய ஐடி நிறுவனங்களின் வருவாய் அடுத்த சில காலாண்டுகளுக்குப் பாதிக்கப்படும் எனச் சந்தை வல்லுனர்கள் கணித்துள்ளனர். ஏற்கனவே இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் ஊழியர்கள் வெளியேற்றம், அதிகப்படியான சம்பள பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில் இந்த ரெசிஷன் பெரும் சுமையாக இருக்கும்.
ஆப்ரேட்டிங் மார்ஜின்
செப்டம்பர் காலாண்டில் ஐடி சேவை நிறுவனங்கள் தனது ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவில் குறிப்பிடத்தக்க அளவிலான வளர்ச்சியைக் காட்டினாலும் ரெசிஷன் அச்சம் அதிகமாகவே உள்ளது. இந்தப் பொருளாதார மந்த நிலை சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்களது ஐடி துறை முதலீட்டை காப்பாற்ற இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தில் முதலீடு செய்தால் சரியாக இருக்கும் எனக் கோட்டாக் இன்ஸ்டியூஷனல் ஈக்விட்டிஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இன்போசிஸ், விப்ரோ
செப்டம்பர் காலாண்டில் இன்போசிஸ் சுமார் 2.7 பில்லியன் டாலர் மதிப்பிலான பெரிய திட்டத்தைக் கைப்பற்றியது, கடந்த 7 காலாண்டில் இது சிறப்பான வளர்ச்சியை இக்காலகட்டத்தில் காட்டியுள்ளது. மறுபுறம் ஹெச்சிஎல டெக் நிறுவனம் 625 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆர்டரை கைப்பற்றியுள்ளது. இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக் இக்காலாண்டில் எதிர்பார்த்ததை காட்டிலும் சிறப்பான ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவை பதிவு செய்துள்ளது.
பங்கு விலை
இன்றைய வர்த்தக முடிவின் தரவுகள் அடிப்படையில் 2022ல் மட்டும் நிஃப்டி ஐடி குறியீடு 25.60 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதேபோல் டிசிஎஸ் இக்காலகட்டத்தில் 14.80 சதவீதம் வரையில் சரிந்துள்ளது, இன்போசிஸ் 17.80 சதவீதம் வரையில் சரிந்துள்ளது, ஹெச்சிஎல் டெக் நிறுவனப் பங்குகள் 20.50 சதவீதம் வரையில் சரிந்துள்ளது, விப்ரோ 45.50 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
முதலீட்டாளர்கள்
ஐடி துறையில் தற்போது முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது வேலை புதிதாகப் பணியில் சேர்வோர் எண்ணிக்கை சரிவு, புதிய வர்த்தக அளவுகள், ஊழியர்கள் வெளியேற்ற விகிதம். இதன் படி செப்டம்பர் காலாண்டில் இந்திய ஐடி நிறுவனங்கள் புதிதாகப் பணியில் சேர்க்கும் ஊழியர்கள் எண்ணிக்கை மொத்தமாக 57 சதவீதம் சரிந்துள்ளது. விப்ரோ புதிதாகச் சேர்க்கப்படும் ஊழியர்கள் அளவை 95 சதவீதம் குறைத்துள்ளது.
அட்ரிஷன் விகிதம்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 23.8 சதவீதமாக உள்ளது, இதுவே விப்ரோ நிறுவனத்தில் 23 சதவீதம், டிசிஎஸ் நிறுவனத்தில் 21.5 சதவீதமாக உள்ளது. தற்போது வரையில் புதிய வர்த்தகத்தைப் பெறும் வாய்ப்பு சிறப்பாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications