இனி ATM-ல் ரீசார்ஜ் செய்யலாம்..! கலக்கும் ஜியோ!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதுமே, கொரோனா வைரஸால் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது.

 

தற்போது வரை உலகம் முழுக்க சுமாராக 8.6 லட்சம் பேர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 42,000 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள்.

இதற்கு மத்தியில் பல நாடுகள் முழுக்க முழுக்க ஷட் டவுன் செய்து தங்கள் மக்களை பாதுகாக்க போராடிக் கொண்டு இருக்கிறது. இதில் இந்தியாவும் ஒன்று.

டெலிகாம்

டெலிகாம்

மக்களை வீட்டிலேயே இருக்கச் சொல்வது எல்லாம் ஓகே. ஆனால் அத்தியாவசியப் பொருட்களை டோர் டெலிவரி செய்யச் சொல்வது தொடங்கி, பொழுது போக்குக்கு நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட் ஸ்டார் போன்றவைகளைப் பார்ப்பது வரை எல்லாவற்றுக்கும் இணைய வசதி அவசியம். இதற்கு சமுத்திரக் கனி மீம்ஸ் சாட்சி.

கடை இல்லை

கடை இல்லை

ஆனால் இந்தியாவில் இந்த 21 நாள் ஷட் டவுன் கடை பிடிக்கப்பட்டு வருவதால் முன்பைப் போல ரீசார்ஜ் செய்து கொள்வது சிரமமாக இருக்கிறது. ஆன்லைனில் ரீசார்ஜ் செய்து கொள்ளாமல் கடைகளுக்குச் சென்று ரீசார்ஜ் செய்பவர்களுக்கு தான் இந்த சிக்கல். இந்த சிக்கலைத் தீர்க்க, ஜியோ ஒரு நல்ல தீர்வை முன் வைத்து இருக்கிறது.

ஏடிஎம்
 

ஏடிஎம்

அது தான் ஏடிஎம் இயந்திரத்தில் ரீசார்ஜ் செய்து கொள்வது. எல்லா ஏடிஎம் இயந்திரங்களிலும் இந்த வசதி இல்லை. எஸ்பிஐ, ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஹெச் டி எஃப் சி பேங்க், ஐடிபிஐ பேங்க், சிட்டி பேங்க், டிசிபி பேங்க், ஏ யூ எஃப் பேங்க், ஸ்டாண்டர்ட் சாட்டர்ட் பேங்க் போன்ற வங்கி ஏடிஎம்-களில் மட்டும் இந்த வசதியைக் கொண்டு வந்து இருக்கிறார்களாம். சரி எப்படி ரீசார்ஜ் செய்வது..?

எப்படி ரீசார்ஜ் செய்யலாம்

எப்படி ரீசார்ஜ் செய்யலாம்

ஸ்டெப் 1: வழக்கம் போல ஏடிஎம் கார்டை மேலே சொன்ன வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் கொடுக்கவும்.

ஸ்டெப் 2 : ரீசார்ஜ் என ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

எந்த எண்ணுக்கு

எந்த எண்ணுக்கு

ஸ்டெப் 3: அதன் பின் எந்த மொபைல் எண் அல்லது ஜியோ ஃபோன் எண்ணுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டுமோ அந்த எண்ணை சரியாகக் குறிப்பிடவும்.

ஸ்டெப் 4: அதன் பின் ஏடிஎம் பின் நம்பர் கேட்கப்படும், அதை சரியாகக் கொடுக்கவும்

எவ்வளவு தொகை

எவ்வளவு தொகை

ஸ்டெப் 5: அதன் பின் எவ்வளவு தொகைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டுமோ, அந்த தொகையைக் குறிப்பிடவும்.

ஸ்டெப் 6: அதன் பின் confirm (Enter-ஐ அழுத்தவும்)

ஸ்டெப் 7: அதன் பின் ஏடிஎம் ஸ்கிரீனில், ரீசார்ஜ் தொடர்பான விவரங்களைக் காட்டும்.

எஸ் எம் எஸ்

எஸ் எம் எஸ்

ஸ்டெப் 8 : அதன் பின் தான் நாம் முன்பு குறிப்பிட்ட ரீசார்ஜ் தொகை நம் வங்கிக் கணக்கில் இருந்து டெபிட் செய்யப்படும். அதன் பின் நம் செல்ஃபோன் எண்ணுக்கு ரீசார்ஜ் செய்ததற்கான எஸ் எம் எஸ் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திடம் இருந்து வரும். அவ்வளவு தான் ரீசார்ஜ் டன்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Recharge reliance Jio number from ATM

Now anyone can recharge their reliance jio number from selected ATM machines near you. Just go with your debit card and recharge you number from ATM.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X