சென்னை: புவி வெப்பமடைந்து அதனால் ஏற்படக்கூடிய பருவநிலை மாற்ற பாதிப்புகளை உலகம் அனுபவிக்க தொடங்கிவிட்டது. பருவம் தவறிய மழை, வறட்சி, திடீர் புயல்கள், பெருவெள்ளம் என மக்களும் இந்த பாதிப்புகளை அனுபவிக்க தொடங்கி விட்டோம்.
எதிர்வரும் காலங்களில் இந்த பருவநிலை மாற்றம் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் குறிப்பாக பல்வேறு நகர்புறங்களில் பெரும் அளவில் வறட்சியை உண்டாக்கும் என்றும் ஒரு ஆய்வறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேச்சர் கம்யூனிகேஷன் என்ற இதழில் வெளியாகியிருக்கக்கூடிய ஒரு ஆய்வறிக்கையில் உலகம் முழுவதும் பெரிய அளவிலான ஒரு தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என குறிப்பிட்டு இருக்கிறது.

குறிப்பாக இந்தியாவில் தண்ணீர் பிரச்சனை பெரிய பிரச்சனையாக உருவாகும் என்றும் நகரப்புறங்கள் மட்டுமில்லாமல் கிராம பகுதிகளிலும் இந்த பாதிப்புகளை மக்கள் எதிர்கொள்வார்கள், வேளாண் துறை இதில் பெரிய தாக்கத்தை சந்திக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அறிக்கையில் சென்னை உள்பட பெருநகரங்கள் நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதாகவும் இது பெரிய பிரச்சினைக்கு வித்திட போகிறது என்றும் கூறுகிறது.
சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்கள் அனைத்தும் ஏற்கனவே தண்ணீர் பிரச்சனையை சந்தித்து வருகின்றன. அவ்வப்போது எழக்கூடிய இந்த பிரச்சினை நிரந்தரமாகலாம் என்பதே இந்த எச்சரிக்கையின் சாராம்சம். சென்னை போன்ற நகரங்கள் பெரும் வறட்சியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் தற்போது முதலில் மிகப்பெரிய அளவிலான நீர் மேலாண்மை திட்டங்களை ஏற்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த நூற்றாண்டு இறுதியில் உலகம் முழுவதும் கிட்டதட்ட 750 மில்லியன் மக்கள் தண்ணீர் இல்லாமல் தவிப்பார்கள் என தெரிவித்திருக்கிறது. இவர்களில் 470 மில்லியன் பேர் நகர்ப்புறங்களிலும் இருப்பார்கள் என்றும் கூறுகிறது. குறிப்பாக ஆசிய பிராந்தியம் பெரிய பாதிப்பை சந்திக்கும் என தெரிவித்திருக்கிறது . கார்பன் வெளியீட்டை குறைத்து 1.5°c என்ற இலக்கை நாம் எட்டி விட்டாலும் கூட இதனால் ஏற்படக்கூடிய தண்ணீர் பிரச்சனையை நம்மால் தடுக்க முடியாது என இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய ரவிநந்தர்சனா தெரிவித்திருக்கிறார்.
இது வெறும் தியரி அளவில் மட்டுமல்ல ஏற்கனவே நடைமுறையில் வர தொடங்கிவிட்டது என்கிறார். உலகின் மக்கள் தொகையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் இந்தியா ஏற்கனவே தண்ணீர் பிரச்சனையை சந்திக்க தொடங்கிவிட்டது என இந்த ஆய்வு அறிக்கை குறிப்பிடப்பட்டிருக்கிறது . அதாவது 1951 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒரு நபருக்கு இருந்த தண்ணீரின் அளவு 5200 கியூபிக் மீட்டர்கள் , அது 2021 ஆம் ஆண்டில் 1486 கியூபிக் மீட்டராக குறைந்துவிட்டது , 2050ஆம் ஆண்டு இது 1191 கியூபிக் மீட்டர்களாக குறைந்துவிடும் என கணிக்கப்படுகிறது.

அண்மையில் கூட நிதி ஆயோக் வெளியிட்ட தகவலில் இந்தியாவில் ஏற்கனவே 21 மாவட்டங்களில் தீவிர தண்ணீர் பிரச்சினை இருப்பதாகவும் 2050 இல் இது 49 மாவட்டங்களாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது . பஞ்சாப் ,ராஜஸ்தான் ,தமிழ்நாடு , ஹரியானா ஆகிய மாநிலங்களில் எல்லாம் நிலத்தடி நீர் அதிக அளவில் உறிஞ்சப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது .
உதாரணமாக சென்னை எடுத்துக் கொண்டால் 2019 ஆம் ஆண்டு சென்னையில் மக்களுக்கு 80 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்பட்டது ஆனால் அரசால் கொடுக்க முடிந்தது 50 கோடி லிட்டர் தண்ணீர் தான் . இதனால் மக்கள் பெரும் தண்ணீர் பிரச்சனையை சந்திக்க ஆளானார்கள் . டெல்லி , பெங்களூர் நகரங்களும் கூட அண்மைக்காலமாக இந்த தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனையை எதிர்கொண்டது.
இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண தண்ணீர் மேலாண்மை திட்டங்களை தற்போது இருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ற வகையிலான உள்கட்டமைப்புகளை நகர்ப்புறங்களில் கொண்டு வர வேண்டும், கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டங்களை இன்னும் மேம்படுத்தி நவீனப்படுத்த வேண்டும் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications