இந்தியாவில் தொடங்கப்படும் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இன்றைக்கு நினைத்துக்கூட பார்க்கமுடியாத உயரத்தை எட்டுகின்றன. அதேபோலத்தான் ரெட்பஸ் நிறுவனமமும். ஃபனிந்திர சாமா, சுதாகர் பசுபுனுரி, சரண் பத்மராஜு ஆகியோரால் ரெட்பஸ் என்ற ஆன்லைட் டிக்கெட் புக்கிங் நிறுவனம் 2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இதைத் தொடங்கிய மூவரும் பிர்லா இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி அண்டு சயின்ஸ் நிறுவனத்தில் படித்தவர்கள். ரெட்பஸ்ஸை தொடங்குவதற்கு முன்பு பல நிறுவனங்களில் வேலை பார்த்தனர். இந்த நிலையில் ரூ.5 லட்சம் முதலீடு செய்து ரெட் பஸ் நிறுவனத்தை தொடங்கினர். இப்போது அதன் சந்தை மதிப்பு ரூ.6985 கோடி ஆகும்.

ரெட்பஸ் நிறுவனத்தைத் தொடங்குவதற்கு மூலகாரணம் ஃபனிந்திர சாமா. அவர் ஒருமுறை ஆன்லைனில் பஸ் டிக்கெட்டை புக் செய்ய முயன்றபோது சந்தித்த சிரமத்தைத் தொடர்ந்து தானே ஏன் ஒரு ஆன்லைன் புக்கிங் நிறுவனம் தொடங்கக்கூடாது என்று சிந்தித்தார். அதன் விளைவே ரெட் பஸ் நிறுவனம்.
ஃபனிந்திர சாமாவின் தலைமையில் இந்தியாவில் பஸ் டிக்கெட் புக்கிங்கில் பல புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்த நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்பாக சாமா, டெக்ஸாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார்.
2007 ஆண் ஆண்டில் ரெட் பஸ் தொடங்கப்பட்டது. முதலில் 1 மில்லியன் டாலர் முதலீடு கிடைத்தது. இதைவைத்து நிறுவனத்தை சில ஆண்டுகளுக்குள்ளேயே மிகப் பெரிய அளவுக்கு கொண்டு வந்தனர்.
2013 ஆம் ஆண்டில் ரெட் பஸ்ஸை தென்னாப்பிரிக்காவை சேர்ந்த நாஸ்பர்ஸ் மற்றும் சீனாவை சேர்ந்த டென்சென்ட் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான இபிபோ குரூப் வாங்கியது. ரூ.828 கோடிக்கு இந்த நிறுவனம் விற்கப்பட்டது.
நிறுவனத்தை விற்ற பின்னரும் ரெட்பஸ் முன்னேற்றத்துக்காக ஃபனிந்திர சாமா பல்வேறு உதவிகளை செய்து வந்தார்.
அதுமட்டுமல்லாமல் பல்வேறு கொடைச் செயல்களிலும் ஈடுபட்டார்.
பின்னர் தெலங்கானா மாநிலத்தின் தலைமை இன்னோவேஷன் அதிகாரியாக வேலை பார்த்தார்.
இதன் மூலம் தெலங்கானா அரசுக்கு பல்வேறு புதுமையான டெக்னாலஜி திட்டங்களை உருவாக்கித் தந்தார். கடும் உழைப்பை செய்தால் நாம் எடுக்கும் எந்த காரியத்திலும் வெற்றி பெறலாம் என்பது ஃபனிந்திரா சாமாவின் ரெட் பஸ் நிறுவனம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.


Click it and Unblock the Notifications