தற்போது அனைவருக்கும் மிக எளிமையாக கிரெடிட் கார்டுகள் கிடைக்கின்றன . நாம் முதலில் பணத்தை செலவு செய்து விட்டு பின்னர் அந்த பணத்தை செலுத்தி விட கூடிய ஒரு வாய்ப்பினை கிரெடிட் கார்டுகள் வழங்குகின்றன .
கிரெடிட் கார்டுகள் பெரும்பாலான மக்களிடையே புழக்கத்திற்கு வந்திருக்கிறது. பலரும் தங்களுடைய மாதாந்திர செலவினங்களையும் இந்த கிரெடிட் கார்டுகளை நம்பித்தான் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பழக்கம் என்பது அதிகரித்திருக்கிறது. கிரெடிட் கார்டை பயன்படுத்துபவர்கள் அந்த அந்த தொகையை சரியான நேரத்தில் சரியான முறையில் திரும்ப செலுத்தினால் அவர்களின் கிரெடிட் ஸ்கோர் என்பது உயரும். இதனால் பல நன்மைகளும் இருக்கின்றன.

அதே வேளையில் நாம் கிரெடிட் கார்டில் சரியான முறையில் பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்றால் அது படிப்படியாக வளர்ந்து பெரிய கடனாக வந்து நிற்கும். அப்படித்தான் டெல்லியை சேர்ந்த ஒரு 31 வயது நபர் தனக்கு எப்படி கிரெடிட் கார்டுகள் மிகப்பெரிய கடன் சுமையாக மாறின என்றும் அதனை எப்படி அவர் சரி செய்து கடன்களை அடைத்தேன் என்றும் விரிவாக தெரிவித்திருக்கிறார் .
ரெடிட் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் அந்த 31 வயது நபர் முதன் முதலில் 2016 ஆம் ஆண்டு நான் என்னுடைய முதல் கிரெடிட் கார்டை வாங்கினேன் , கிரெடிட் கார்டு வாங்கி பயன்படுத்த தொடங்கிய போது எனக்கு அவ்வளவு ஆர்வமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது நினைத்ததற்கெல்லாம் கிரெடிட் கார்ட் ஸ்வைப் செய்து வாங்கினேன் என கூறியுள்ளார். ஆனால் 2018 ஆம் ஆண்டில் தான் எனக்கு ஒரு உண்மை தெரிய வந்தது. கிரெடிட் கார்டு வாங்கிய பிறகு நான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதிகம் செலவு செய்ய தொடங்கினேன் என்னை அறியாமல் பெரிய கடனில் விழுந்து விட்டேன் என கூறியுள்ளார்.
எனக்கு எவ்வளவு கடன் இருக்கிறது நான் கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கு எவ்வளவு பணத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்பதை கணக்கீடு செய்த போது எனக்கு தலையே சுற்றியது எனக் கூறியிருக்கிறார். இதனை அடுத்து கிரெடிட் கார்டு கடன் வலையிலிருந்து எப்படியாவது வெளியேற வேண்டும் என முடிவு செய்து அவர் கிரெடிட் கார்டை கொண்டு பொருட்களை வாங்குவதை தவிர்த்தாராம்.
அடுத்ததாக பட்ஜெட் போட்டு பணத்தை செலவு செய்து படிப்படியாக கடனை அடைத்தாராம், இருந்தாலும் நிலுவை தொகைக்கு வட்டி செலுத்த வேண்டி இருக்கிறதே எவ்வளவு அடைதாலும் கடன் குறையவில்லையே என்பதை உணர்ந்த அவர் தன்னிடம் இருந்த பல்வேறு சேமிப்புகளை எடுத்து கிரெடிட் கார்ட் கடன்களை அடைத்து விட்டேன் என கூறியுள்ளார்.
கிரெடி கார்டு கடன்களை அடைத்த பின்னர் எனக்கு கிடைத்த மன நிம்மதியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என தெரிவித்துள்ள அவர், ஒரு பெரிய சுமையை இறக்கி வைத்தது போன்ற உணர்வு இருப்பதாக தெரிவிக்கிறார். பலரும் அவருடைய இந்த செயலை பாராட்டி இருக்கின்றனர். சிலர் கிரெடிட் கார்டுகள் சரியான முறையில் பயன்படுத்தினால் சரியான நமக்கு மிகச் சிறந்த பலன்களை தரும், அதுவே நாம் அதிக செலவு செய்ய தொடங்கி விட்டோம் என்றால் நாளடைவில் நிம்மதியையும் நம்முடைய வருமானத்தையும் சேர்ந்து உறிஞ்சி விட தொடங்கும் எனக் கூறியிருக்கிறார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications