சென்னை: சியோமி (Xiaomi) நிறுவனத்தின் பிரபல ஸ்மார்ட் TV பிராண்டான Redmi, தனது புதிய ஸ்மார்ட் டிவியை தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. "Redmi Smart Fire TV 32 2024" என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய ஸ்மார்ட் டிவி 32 இன்ச் அளவிலான HD ரெசொல்யூஷன் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி பட்ஜெட் விலையிலும் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவியின் அம்சங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
ரெட்மி ஸ்மார்ட் ஃபையர் டிவியின் விலை: விலையைப் பொறுத்தவரை, ரெட்மி ஸ்மார்ட் ஃபையர் டிவி, ரூ. 11,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூன் 12ஆம் தேதி முதல் mi.com, Amazon மற்றும் Flipkart போன்ற ஆன்லைன் விற்பனை தளங்களில், இந்த ஸ்மார்ட் டிவி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ICICI பேங்க் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கும்போது ரூ. 1000 தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம், இந்த ஸ்மார்ட் டிவியின் அசல் விலையிலிருந்து ரூ.10,999 ஆக குறையும்.

ரெட்மி ஸ்மார்ட் ஃபையர் டிவி, 32 இன்ச் அளவிலான HD ரெசொல்யூஷன் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 178 டிகிரி வியூவிங் ஆங்கிளை கொண்டிருப்பதோடு, விவிட் பிக்சர் இன்ஜின் (Vivid Picture Engine technology) தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது தெளிவான மற்றும் கண்களுக்கு இதமான காட்சிகளை வழங்குகிறது. மேலும், கேமிங் போன்றவற்றிற்கு ஏற்றதாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த டிவியானது 1.5GHz குவாட் கோர் கார்டெக்ஸ் A35 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், 1ஜிபி RAM மற்றும் 8ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இந்த டிவி Fire TV OS 7-இல் இயங்குகிறது. இது அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃப்ளிக்ஸ் போன்ற பிரபலமான ஸ்ட்ரீமிங் சேவைகள் உட்பட 12,000க்கும் மேற்பட்ட சேவைகளைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் விரல் நுனியில், அதிக அளவிலான பொழுதுபோக்கு விருப்பங்களைப் பார்வையிட முடியும்.
இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் ஃபையர் டிவி, ரிமோட் கண்ட்ரோலரில் Alexa voice assistant உடன் கூடிய "ரெட்மி வாய்ஸ் ரிமோட்" (Redmi Voice Remote) வழங்கப்படுகிறது. இந்த ரிமோட் கண்ட்ரோலரில் பிளேபேக் கண்ட்ரோல்கள், சேனல் மாற்றுதல், மியூட் செய்தல் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் மியூசிக் போன்ற பிரபலமான ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான ஷார்ட் கட் பட்டன்களைக் கொண்டு இருப்பதால் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும். இந்த ரிமோட் கொண்டு வாய்ஸ் கமாண்டுகள் மற்றும் ஷார்ட் கட் பட்டன்கள் மூலம் ஸ்மார்ட் டிவியை சுலபமாக பயன்படுத்தலாம்..
பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் டிவி தேடும் வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் ஃபையர் டிவி 32 2024, சிறந்த தேர்வாக இருக்கும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications