பிளிப்கார்ட் நிறுவனம் மாதம் தோறும் நிறுவன செயல்பாட்டுக்காக 40 மில்லியன் டாலர்கள் செலவு செய்கிறது. இதனை மாதத்திற்கு 20 மில்லியன் டாலர்களாக குறைக்க வேண்டும் என்று தலைமை செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்திக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளிப்கார்ட் நிறுவனத்தின் வாரிய குழு இயக்குனர்கள் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது அந்தக் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்காக மாதம்தோறும் அதிக அளவிலான பணம் செலவு செய்யப்படுவதாகவும் அதனை பாதியாக குறைக்க வேண்டும் என்றும் தலைமை செயல் அதிகாரி கல்யாண கிருஷ்ணமூர்த்திக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வால்மார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஈ காமர்ஸ் நிறுவனம் பிளிப்கார்ட்.

கூடிய விரைவில் இந்திய சந்தையில் இந்நிறுவனம் ஐபிஓ வெளியீடு செய்ய திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக சிங்கப்பூரில் இருக்கும் தங்களுடைய நிறுவன தலைமையகத்தை இந்தியாவிற்கு முழுவதுமாக மாற்றுவதற்கு பிளிப்கார்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக தங்களுடைய நிதி சார்ந்த செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறது.
மாதம் தோறும் பிளிப்கார்ட் நிறுவனம் 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 340 கோடி ரூபாயை செலவு செய்கிறது, இதனை மாதத்திற்கு 20 மில்லியன் டாலர்கள் அதாவது 170 கோடி ரூபாயாக குறைக்க வேண்டும் என தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணமூர்த்திக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தான் நிறுவனங்கள் Cash Burn என அழைக்கின்றன.
அதாவது நிறுவனங்கள் குறிப்பாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் புதிய நிறுவனங்கள் தங்களுடைய வணிக நடவடிக்கைகளுக்காக தங்கள் மூலதனத்திலிருந்து செலவு செய்யும் தொகையின் விகிதம் தான் Cash Burn. இது லாபமீட்டாத நிறுவனங்களின் நிலையை தீர்மானிப்பதற்கான ஒரு முக்கிய அளவீடாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் கூடுதல் நிதி தேவைப்படுவதற்கு முன்பு இந்த நிறுவனம் எவ்வளவு காலம் தன்னுடைய செயல்பாடுகளை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதை குறிப்பதற்கு தான் இந்த கேஷ்பேர்ன் என்பது பயன்படுத்தப்படுகிறது.
குறைவாக செலவு செய்து அதைவிட அதிகமாக லாபம் ஈட்டுகிறது எனும்போது அந்த நிறுவனம் நல்ல வளர்ச்சியுடைய நிறுவனமாக இருக்கிறது என்று அர்த்தம். இதனை அடிப்படையாகக் கொண்டுதான் பிளிப்கார்ட் நிறுவனத்தின் இயக்குநர்கள் தலைமை செயல் அதிகாரிக்கு இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளனர். அண்மையில் தான் பிளிப்கார்ட் நிறுவனம் பிளிப்கார்ட் மினிட்ஸ் என்ற தன்னுடைய குயிக் காமர்ஸ் செயலியை தொடங்கியது .

இதற்காக இந்நிறுவனம் கூடுதலாக கிடங்குகளை அமைக்க வேண்டி இருக்கும். குயிக் காமர்ஸ் பிரிவில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்களோடு போட்டி போட வேண்டி இருக்கும் என்பதால் அதற்கு நிறுவனம் அதிக செலவு செய்தாக வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் தான் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணமூர்த்திக்கு செலவை குறைக்க வேண்டும் என்ற பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இதனை அவர் எப்படி கையாள போகிறார் என்பது அடுத்து வரும் நாட்களில் தெரிந்துவிடும். பிளிப்கார்ட் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் மருந்து விற்பனைக்காக தாங்கள் உருவாக்கிய flipkart health என்ற சேவையை நிறுத்திவிட்டது. இது தவிர குறிப்பிட்ட சில தொழில்களை மறுக்கட்டமைப்பு செய்து வருகிறது. தற்போது செலவை குறைக்க வேண்டும் என குறிப்பிட்டு இருப்பதால் சிக்கன நடவடிக்கைகளை எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது.
இந்திய சந்தையில் பிளிப்கார்ட் நிறுவனம் ஏற்கனவே கடும் போட்டியை எதிர்கொண்டிருக்கிறது. இது தவிர கடந்த சில ஆண்டுகளாக குயிக் காமர்ஸ் பிரிவில் வளர்ந்து வரும் செயலிகளும் பிளிப்கார்டுக்கு கடும் போட்டியாக உருவாகியுள்ளன. இதனை அடுத்து தான் பிளிப்கார்ட் நிறுவனம் அண்மையில் பிளிப்கார்ட் மினிட்ஸ் என்ற பெயரில் ஒரு குயிக் காமர்ஸ் செயலியை அறிமுகம் செய்தது. இந்த பிரிவில் ஏற்கனவே செப்டோ, பிளிங்கிட் , ஸ்விக்கி இன்ஸ்டா மார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இந்த நிலையில் தான் பிளிப்கார்ட் நிறுவனமும் குயிக்காமர்ஸ் பிரிவில் கால் பதித்துள்ளது, வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்க வேண்டும் என்றால் அதற்கு என பிளிப்கார்ட் நிறுவனம் பிரத்தியேக சலுகைகளை அறிவிக்க வேண்டும். அது மட்டும் இன்றி வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் பொருட்களைக் கொண்டு சேர்ப்பதற்கு ஏதுவாக கிடங்குகளை உருவாக்கி அதற்கு ஏற்ற வகையில் டெலிவரி ஆட்களையும் பணி நியமனம் செய்ய வேண்டும்.
இதற்காக பிளிப்கார்ட் நிறுவனம் கூடுதலாக செலவு செய்ய வேண்டிய காலகட்டத்தில் திடீரென வாரிய குழு உறுப்பினர்கள் நிறுவன தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணமூர்த்திக்கு செலவை குறைக்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளனர். பிளிப்கார்ட் நிறுவனத்தை பொருத்தவரை மாதம் தோறும் தங்களுடைய செயல்பாடுகளுக்காக 40 மில்லியன் டாலர்களை செலவு செய்கிறது , அதாவது 340 கோடி ரூபாய் இதுவே செப்டோ நிறுவனம் மாதத்திற்கு 30 மில்லியன் டாலர்களை செலவு செய்கிறது . இது இந்திய ரூபாயின் மதிப்பில் பார்க்கும் போது 250 கோடி ரூபாய்.
செப்டோவை விட பிளிப்கார்ட் நிறுவனம் அதிக தொகை செலவு செய்கிறது என்றாலும் பிளிப்கார்ட் நிறுவனம் இ-காமர்ஸ் தொழிலிலும் ஈடுபட்டிருக்கிறது. செப்டோ நிறுவனம் முழுக்க முழுக்க குயிக் காமர்ஸ் பிரிவில் மட்டும் கவனம் செலுத்துகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதே வேளையில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் கிராஸ் மெர்ச்சண்டைஸ் வேல்யூ என்பது 29 பில்லியன் டாலர்களாக இருக்கிறது செப்டோவிற்கு இது வெறும் 5 பில்லியன் டாலர்கள் தான்.
இந்தியாவைப் பொறுத்தவரை பிளிப்கார்ட் நிறுவனம் நஷ்டத்தில் தான் இயங்கி வருகிறது. கடந்த நிதி ஆண்டில் தான் இந்த நிறுவனத்தின் நஷ்டத்தின் அளவு 41% வரை குறைந்தது. நிதி ரீதியாக அந்த நிறுவனம் இந்திய சந்தையில் வளர்ச்சி அடைந்து வருகிறது. குயிக் காமர்ஸ் செயலி அதனை இன்னும் அதிகப்படுத்தும் என நிறுவனம் நம்புகிறது.
பிளிப்கார்ட் நிறுவனம் அண்மையில் தான் கூகுள் நிறுவனத்திடம் இருந்து 350 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டியது. 2018 ஆம் ஆண்டு பிளிப்கார்ட் நிறுவனம் வால்மார்ட் நிறுவனத்திடம் விற்பனை செய்யப்பட்ட பிறகு திரட்டப்பட்ட அதிக மதிப்பு கொண்ட நிதி இதுவாகும். ஏற்கனவே செப்டோ நிறுவனம் ஐபிஓ வெளியீடு செய்வதற்காக தங்கள் தலைமையகத்தை சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு மாற்றியுள்ளது. அதனை பின்பற்றி தற்போது பிளிப்கார்ட்டும் தங்களின் தலைமையகத்தை மாற்ற இருக்கிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications