ஏஐ வருகை, நிறுவன மறுக்கட்டமைப்பு, சிக்கன நடவடிக்கை என பல்வேறு காரணங்களை கூறி பெரிய பெரிய டெக் நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்களை குறைத்த வண்ணம் இருக்கின்றன. இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் கூட தங்களுடைய ஊழியர்களில் 2 சதவீதம் பேரை வேலையில் இருந்து நீக்கியிருக்கிறது. அமேசான் , கூகுள் என இந்த பணி நீக்க பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இந்த பணி நீக்க செய்திகளுக்கு மத்தியில் சில நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களின் உழைப்பை கௌரவப்படுத்தி பிரம்மாண்டமான பரிசுகளை வழங்கும் நற்செய்திகளும் கூட நடக்கின்றன. அப்படி சென்னை சேர்ந்த ஒரு நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு ஆடி கார்களை பரிசாக வழங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

வழக்கமாக நிறுவனங்கள் தங்களுக்கு கிடைக்கக்கூடிய லாபத்தில் ஒரு கணிசமான தொகையை போனஸ் தொகையாக ஊழியர்களுக்கு வழங்கும். இல்லையென்றால் பொங்கல் போன்ற சமயங்களில் பெரிய பரிசு பொருளாக வழங்கி கௌரவிப்பார்கள். அதேபோல நிறுவனத்தின் ஆண்டு விழா கொண்டாட்டங்களின் போதும் ஊழியர்கள் நீண்ட காலமாக நிறுவனத்திற்காக வேலை செய்யும் ஊழியர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்குவது வழக்கமாக இருக்கிறது.
சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படக்கூடிய ரீபெக்ஸ் குரூப் (refex group) என்ற நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு ஆடி கார்களை பரிசாக வழங்கி உற்சாகப்படுத்தி இருக்கிறது. சென்னையை தலைமை இடமாக கொண்டு 23 ஆண்டு காலமாக பல்வேறு துறைகளில் கால் பதித்து செயல்படுத்து செயல்பட்டு வருகிறது. குளிர்பதனை பெட்டிகளில் பயன்படுத்தும் வாயுக்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின் உற்பத்தி நிலையங்களுக்கான நிலக்கரி , சாம்பல் உள்ளிட்டவற்றை வழங்கும் இந்நிறுவனம் தங்கள் ஊழியர்களை கவுரப்படுத்தியுள்ளது.
இந்த நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு Audi A4 ரக கார்களை பரிசாக வழங்கியிருக்கிறதாம். நிறுவனத்திற்காக நீண்ட காலமாக வேலை செய்த 12 ஊழியர்களை தேர்ந்தெடுத்து Wheel of achievement என்ற பெயரில் ஆடி கார்களை பரிசாக வழங்கியிருக்கிறது. இந்தியாவில் ஆடி ஏ4 ரக கார்கள் 46 லட்சத்திலிருந்து 56 லட்சம் வரை விலை கொண்டு விற்பனை செய்யப்படுகின்றன. 10.1 இன்ச் டிஸ்பிளே, 360 டிகிரி கேமரா , பார்க்கிங் அசிஸ்டன்ட் , வயர்லெஸ் சார்ஜிங், எலக்ட்ரிக் சன் ரூஃப் என பல்வேறு சிறப்புகளை கொண்டிருக்கிறது. இது அதிகபட்சமாக மணிக்கு 241 கிலோமீட்டர் வரை பயணம் செய்யக்கூடியது. ஏழு ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக இந்த வகை கார்கள் இருக்கின்றன.
ரீஃபக்ஸ் நிறுவனம் ஊழியர்களை கவுரப்படுத்தவும் மேற்கொண்டு ஊழியர்கள் உற்சாகமாக வேலை செய்யவும் இப்படி ஆடி கார்களை பரிசாக வழங்கியுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் வீடியோக்களில் வரிசையாக ஆடி கார்கள் நிற்பதும் ஊழியர்லள் பரிசு பெறுவதும் தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications