சென்னை விமான நிலையம் பளபளன்னு மாறப்போகுது.. அதிரடியாக பணிகள் ஆரம்பம்..!

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்தை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் நாளுக்கு நாள் விமான போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதன் பொருட்டு விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக உள்நாட்டு முனையத்தை புதுப்பிக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.

டெர்மினல் 1 மற்றும் டெர்மினல் 4 உள்நாட்டு முனையங்களில் தற்போது புதுப்பிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர். சென்னை விமான நிலையத்தை நவீனப்படுத்தும் இரண்டாவது கட்டப்பணிகள் கடந்த சில ஆண்டுகளாகவே நடைபெற்று வருகின்றன.

சென்னை விமான நிலையம் பளபளன்னு மாறப்போகுது.. அதிரடியாக பணிகள் ஆரம்பம்..!

இதற்காக 2467 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக டெர்மினல் 2 சர்வதேச முனையம் கட்டப்பட்டது. தற்போது டெர்மினல் 3 சர்வதேச முனையத்தை கட்டமைக்கும் பணிகள் நடைபெற்ற வருகின்றன. இது அடுத்த ஆண்டு இறுதி வரை நடைபெறும் என தெரிகிறது.

இதன் ஒரு பகுதியாக தற்போது உள்நாட்டு முனையத்தை மறுசீரமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக உள்நாட்டு விமானங்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளது. எனவே விமான போக்குவரத்து ஆணையம் உள்நாட்டு முனையங்களையும் நவீனப்படுத்தும் பணிகளை கையில் எடுத்துள்ளது.

இந்த மறுசீரமைப்பு பணியின் ஒரு பகுதியாக கூடுதலாக எக்ஸ்ரே இயந்திரங்கள் ,ஆட்டோமேட்டிக் ட்ரே ரிட்ரைவல் அமைப்புகள் (Automatic Tray Retrieval Systems) மற்றும் டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர்கள் (Door Frame Metal Detectors) ஆகியவை பொருத்தப்பட்டு வருவதாக விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன்படி 60 டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர்களும், 20 எக்ஸ்ரே இயந்திரங்களும் 12 ஏடிஆர்எஸ் அமைப்புகளும் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் பீக் அவர்ஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இது வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பயணிகள் சோதனை பிரிவுகளில் நீண்ட நேரம் காத்திருப்பதை தடுப்பதற்காக மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அடுத்து 8 முதல் 9 மாத காலத்திற்கு இந்த பணிகள் நடைபெறும் என்றும் அடுத்த மே மாதத்திற்குள் கூடுதல் வசதிகள் செய்து முடிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

உள்நாட்டு முனையத்தில் கூடுதலாக சில்லறை விற்பனை கடைகள் அமைப்பதற்கான வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். தற்போது விமான நிலைய கட்டுமான பணியும், ஒருபுறம் விமான போக்குவரத்து சேவைகளும் நடைபெற்று வருவதால் பயணிகள் சற்று சிரமத்தை எதிர்கொள்கின்றனர். எனவே தான் உள்நாட்டு முனையத்தை புதிதாக கட்டமைக்காமல் அதனை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+