டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் தகவல் தொடர்புகள் மிகவும் எளிமையாகி விட்டன. இதனால் கடிதங்கள் எழுதுவது ,தபால் அனுப்புவது உள்ளிட்டவை எல்லாம் படிப்படியாக மறைந்துவிட்டன.
பதிவு தபால்: இருந்தாலும் ஆவணங்கள் உள்ளிட்டவை இன்னமும் பதிவு தபால்கள் மூலம் தான் அனுப்பப்பட்டு வருகின்றன. ரிஜிஸ்டர்டு போஸ்ட் எனப்படும் பதிவு தபால்கள் தான் ஆவணங்களை அனுப்ப நம்பகத்தன்மை வாய்ந்தது என்ற நம்பிக்கை இன்றளவும் மக்கள் மத்தியில் நீடிக்கிறது. இந்நிலையில் தான் பதிவு தபால் சேவை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக தகவல் வெளியானது.

தபால் துறை விளக்கம்: இனி பதிவு தபால் அனுப்ப முடியாதா, ஸ்பீடு போஸ்ட் எனப்படும் விரைவு தபால் மட்டும் தான் அனுப்ப முடியுமா, பதிவு தபாலின் நம்பிக்கை விரைவு தபாலில் கிடைக்காதே என்ற குழப்பம் மக்கள் மத்தியில் எழுந்தது. இந்த சூழலில் மத்திய அரசும் இந்திய தபால் துறையும் இணைந்து ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது. இதன்படி பதிவு தபால் சேவை முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது என்ற செய்தி தவறானது என குறிப்பிட்டு இருக்கிறது.
பதிவு தபால் விரைவு தபாலுடன் இணைப்பு: பதிவு தபால் சேவையை இன்னும் மேம்படுத்துவதற்காக அதனை ஸ்பீடு போஸ்ட் எனப்படும் விரைவு தபால் தேவையுடன் இணைக்கிறோம் என தெரிவித்திருக்கிறது. முதலில் பதிவு தபாலுக்கும் , விரைவு தபாலுக்கும் இடையிலான வித்தியாசத்தை நாம் தெரிந்து கொள்வது அவசியம். பதிவு தபால் முறையில் நாம் ஒரு ஆவணத்தையோ அல்லது ஒரு தபாலையோ அனுப்புகிறோம் என்றால் யாருடைய பெயருக்கு அந்த தபால் அனுப்பப்பட்டதோ அவரால் மட்டுமே கையெழுத்திட்டு அந்த தபாலை பெற்றுக் கொள்ள முடியும் .இதனால் தான் முக்கியமான ஆவணங்கள் அனைத்தும் இந்த பதிவு தபால் முறையில் நமக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன .
நம்பகத்தன்மை மாறாது: தபாலை வழங்க வருபவர் குறிப்பிட்ட அந்த நபர் இல்லை என்றால் யாரிடமும் அந்த தபாலை வழங்க மாட்டார். இதுவே விரைவு தபால் எனப்படும் ஸ்பீடு போஸ்ட் என்பது எந்த முகவரிக்கு அனுப்பப்பட்டு இருக்கிறதோ அந்த முகவரியில் இருக்கும் யாரேனும் ஒரு நபரிடம் வழங்கப்படும். குறிப்பிட்ட இந்த நபரிடம் தான் வழங்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது . ஆனால் ஸ்பீடு போஸ்ட் முறையில் நாம் அனுப்பக்கூடிய தபால்களை நாம் தொடக்கத்தில் இருந்து அது சென்று சேரும் வரை ஆன்லைன் வாயிலாக அனைத்து அப்டேட்டுகளையும் தெரிந்து கொள்ள முடியும்.

பதிவு தபால் மேம்படுத்தப்படுகிறது:இந்த சூழலில் தபால் துறை உள்கட்டமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது என விளக்கம் தரப்பட்டிருக்கிறது . இதன் ஒரு பகுதியாக தான் பதிவு தபாலையும் விரைவு தபாலையும் ஒன்றிணைத்திருக்கிறோம் எனக் கூறியிருக்கிறது. இந்த ஒருங்கிணைப்பின் மூலம் தபால்களை சென்று சேர்ப்பதில் ஏற்படக்கூடிய தாமதங்கள் குறையும். இந்த சேவையை இன்னும் சிறப்பாக வழங்க முடியும் என தெரிவித்திருக்கிறது.
ஆன்லைன் டிராக்கிங் வசதி: விரைவு தபாலுடன் பதிவு தபாலை ஒருங்கிணைப்பதன் மூலம் பதிவு தபாலின் நம்பகத்தன்மையை காக்கும் அதே வேளையில் விரைவு தபாலில் கிடைக்கும் வேகமான டெலிவரி, ஆன்லைன் டிராக்கிங் வசதிகள் பதிவு தபாலுக்கும் கிடைக்கும் என விளக்கம் தரப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 1ஆம் தேதி ஸ்பீடு போஸ்ட் லெட்டர் மற்றும் ஸ்பீடு போஸ்ட் பார்சல் ஆகிய இரண்டும் வழக்கமான முறையில் எந்த முகவரிக்கு அனுப்பப்படுகிறதோ அந்த முகவரியில் டெலிவரி செய்யப்பட்டு விடும்.
இனி பதிவு தபால் அனுப்புவது எப்படி: செப்டமர் 1 முதல் பதிவு தபால்களை ஸ்பீடு போஸ்ட் முறையின் கீழ் குறிப்பிட்ட நபரிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என பதிவு செய்ய வேண்டுமாம், அவ்வாறு செய்துவிட்டால் யாருக்கு அந்த தபால் சென்று சேர வேண்டுமோ அவரிடம் மட்டுமே அது டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பதிவு தபாலை ஸ்பீட் போஸ்ட் முறையோடு இணைப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் அதனை டிராக் செய்து கொள்ள முடியும் , ரியல் டைம் டெலிவரி அப்டேட்டுகளை பார்த்துக்கொள்ள முடியும் ,ஓடிபி அடிப்படையிலான பாதுகாப்பான டெலிவரி சேவையை பெற முடியும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பதிவு தபால் தொடர்ந்து செயல்படும்: இனி பதிவு தபால் முறையே இல்லை என்ற தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ள தபால் துறை, பதிவு தபால் நீக்கப்படவில்லை மேம்படுத்தப்பட்டுள்ளது என விளக்கம் தந்திருக்கிறது. அஞ்சல் துறை நவீனமயமாக்கப்படுவதன் மூலம் மக்களுக்கு வழங்கும் சேவைகள் தரம் மாறவில்லை மேம்படுத்தப்படுகிறது என தெரிவித்து இருக்கிறது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications