மும்பை: இந்தியாவின் பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளரான ரேகா ஜூன்ஜூன்வாலா செவ்வாய்க்கிழமை அன்று காலை பங்குச்சந்தை தொடங்கிய முதல் பத்து நிமிடங்களில் 105 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.
நவம்பர் 26ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்றுஇந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தான் வர்த்தகத்தை தொடங்கின. இந்த இதில் அதிக லாபம் பெற்ற ஒரு முதலீட்டாளராக ரேகா ஜூன்ஜூன்வாலா இருக்கிறார். இவரது போர்ட்போலியோவில் இருக்கும் பங்குகளில் இரண்டு நிறுவன பங்குகளின் மூலம் மட்டும் அவருக்கு 105 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. டாடா குழுமத்துக்கு சொந்தமான டைட்டன் கம்பெனி மற்றும் மெட்ரோ பிரான்ட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் உயர்ந்ததே இதற்கு காரணமாகும்.

நவம்பர் 26 ஆம் தேதி அன்று டைட்டன் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பானது முதல் 10 நிமிடங்களிலேயே தேசிய பங்கு சந்தையில் 20 ரூபாய் வரை உயர்ந்து 3329 ரூபாய் என வர்த்தகமானது. அதேபோல மெட்ரோ பிரான்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பும் முதல் பத்து நிமிடங்களில் மூன்று ரூபாய் வரை உயர்ந்து ஒரு பங்கின் மதிப்பு 1180 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.
டைட்டன் நிறுவனத்தில் ரேகா ஜூன்ஜூன்வாலா 4.57 கோடி பங்குகளை சொந்தமாக வைத்திருக்கிறார். பங்குச்சந்தை தொடங்கிய முதல் 10 நிமிடங்களில் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 20 ரூபாய் உயர்ந்ததை அடுத்து அவருடைய சொத்து மதிப்பில் கூடுதலாக 95.4 கோடி ரூபாய் சேர்ந்தது.
அதேபோல மெட்ரோ பிரான்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு முதல் 10 நிமிடங்களில் மூன்று ரூபாய் அதிகரித்தது. இந்த நிறுவனத்தில் அவர் தனக்கு சொந்தமாக 2.61 கோடி பங்குகளை வைத்திருக்கிறார். எனவே இதன் மூலம் அவருடைய சொத்து மதிப்பு 10.18 கோடி ரூபாய் என்ற அளவில் உயர்ந்தது.
எனவே மொத்தமாக இன்றைய நாளில் பங்குச்சந்தை தொடங்கிய உடனே இந்த இரண்டு நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்ந்ததால் மட்டும் ரேகா ஜூன்ஜூன்வாலா 105 கோடி ரூபாயை வருமானமாக பெற்றுள்ளார். இந்தியாவின் வாரன் பஃபெட் என அழைக்கப்படுபவர் தான் ராகேஷ் ஜூன் ஜூன் வாலா.
புகழ்பெற்ற முதலீட்டு நிபுணரான அவர் காலமானதை அடுத்து அவரது போர்ட்போலியோவை நிர்வகிக்கும் பொறுப்பு அவரது மனைவி ரேகாவிடம் வந்தது. அவரும் தனது கணவர் போலவே திறம்பட போர்ட்போலியோவை நிர்வகித்து முதலீடுகளை மேற்கொண்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications