டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனமாக விளங்கும் டைட்டன் கம்பெனி பங்குகள் மத்திய பட்ஜெட் 2023 க்குப் பின்பு தொடர் ஏற்றத்தில் உள்ளன.
பிப்ரவரி 2, 2023 அன்று, டைட்டன் பங்குகளின் விலை சுமார் 2,310 ரூபாய் என்ற அளவில் முடிவடைந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக மும்பை பங்குச்சந்தையில் தொடர்ந்து அதிகளவிலான முதலீடுகளைப் பெற்று வருகிறது.
இந்தக் காலகட்டத்தில் டாடா குழுமத்தின் டைட்டன் கம்பெனி பங்குகள் விலை 2,310 ரூபாயில் இருந்து 2,535 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே வேளையில் மறைந்த பங்குச்சந்தை BIGBULL ரகேஷ் ஜுன்ஜுன்வாலா-வின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா-வின் நிகரச் சொத்து மதிப்பு 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
ரேகா ஜுன்ஜுன்வாலா
அக்டோபர் முதல் டிசம்பர் 2022 காலாண்டுக்கான டைட்டன் நிறுவனத்தின் பங்குதாரர் தரவுகளின்படி, ரேகா ஜுன்ஜுன்வாலா 4,58,95,970 டைட்டன் பங்குகளை வைத்திருக்கிறார், இது டைட்டன் கம்பெனி லிமிடெட்டின் மொத்த பங்குகளில் சுமார் 5.17 சதவீதமாகும்.
டைட்டன் பங்கு
இன்று டைட்டன் பங்கின் விலை 0.89 சதவீதம் சரிந்து சுமார் 2,499.95 ஆக உள்ளது. ஆனால் கடந்த இரண்டு வாரங்களில் 2,310 ரூபாய் என்ற அளவிலிருந்து இன்று இந்த நிலைகளுக்கு உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் டைட்டன் பங்குகள் ஒரு பங்கிற்கு 225 ரூபாய். உச்ச விலையான 2,535 ரூபாய்க்கும் 2 வாரத்திற்கு முந்தைய 2,310 ரூபாய் ஒப்பிடுகையில் 225 ரூபாய் உயர்வு.
1,000 கோடி
கடந்த இரண்டு வாரங்களில் டைட்டன் பங்கு விலை உயர்வால் ரேகா ஜுன்ஜுன்வாலாவின் நிகர முதலீட்டு மதிப்பு சுமார் 10,32,65,93,250 ரூபாய் அதாவது 1,000 கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா
டைட்டன் நிறுவனத்தில் ரேகா ஜுன்ஜுன்வாலா 1,50,23,575 பங்குகள் அதாவது 1.69 சதவீத பங்குகளை மட்டுமே வைத்திருக்கும் நிலையில், மறைந்த அவருடைய கணவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா 3,41,77,395 பங்குகள் அதாவது 3.85 சதவீத பங்குகளை வைத்திருந்தார்.
5.17 சதவீத டைட்டன் பங்குகள்
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மறைவிற்குப் பின்பு இந்தப் பங்குகள் அனைத்தும் ரேகா ஜுன்ஜுன்வாலா பெயருக்கு வந்த நிலையில் தற்போது மொத்தம் 5.54 சதவீத பங்குகளை வைத்துள்ளார். ஆனால் டிசம்பர் காலாண்டு முடிவுகள் படி 33,05,000 பங்குள் விற்பனை செய்யப்பட்டு 5.17 சதவீத பங்குகளை மட்டுமே வைத்துள்ளார்.
தடாலடி உயர்வு
டைட்டன் பங்குகள் விலை பிப்ரவரி 2 ஆம் தேதி 2304 ரூபாயாக இருந்த நிலையில் பிப்ரவரி 3 ஆம் தேதியே 2463 ரூபாய் வரையில் உயர்ந்தது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 15 ஆம் தேதி 2,524 ரூபாயாக உயர்ந்தது அசத்தியது.
டைட்டன் பங்குகள் கணிசமாகச் சரிவு
இதற்கிடையில் கடந்த இரண்டு நாட்களாகச் சரிந்து வரும் டைட்டன் பங்குகள் இன்று காலை வர்த்தகத் துவக்கத்தில் 2,519.95 ரூபாயில் துவங்கி 2,545.50 ரூபாய் வரையில் உயர்ந்தது. ஆனால் இதன் பின்பு தொடர் சரிவைப் பதிவு செய்து 2,496.40 ரூபாய் வரையில் சரிந்தது.
டைட்டன் PE Ratio
டாடா குழுமத்தில் அதிகம் லாபம் அளித்து வரும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் டைட்டன் நிறுவனத்தின் 52 வார உயர்வான விலை 2,790 ரூபாய், 52 வார குறைவான விலை 1827 ரூபாய். மேலும் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.22 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. மேலும் PE Ratio 73.24 ஆக உள்ளது. தற்போது டைட்டன் பங்குகள் 0.84 சதவீதம் சரிந்து 21.10 ரூபாய் சரிந்து 2501.00 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications