ஆன்லைன் கேமிங் மசோதா.. ரூ.334 கோடி சேமித்த ரேகா ஜுன்ஜுன்வாலா.!!

இந்தியாவின் ஆன்லைன் கேமிங் மற்றும் இ-ஸ்போர்ட்ஸ் துறையின் முன்னோடியான நசாரா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர்களில் ஒருவராக இருந்தவர் மறைந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. அவரது மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா அந்த முதலீடுகளைக் கவனித்து வருகிறார். சமீபத்தில், அவர் நசாரா டெக் நிறுவனத்தில் தனக்குச் சொந்தமான அனைத்துப் பங்குகளையும் விற்றது, தற்போது இந்திய பங்குச்சந்தை வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இதற்கான காரணம், அவர் பங்குகளை விற்று சில நாட்களிலேயே, மத்திய அரசு புதிய ஆன்லைன் கேமிங் மசோதா 2025-ஐ கொண்டுவந்தது. இந்த மசோதா, ஆன்லைனில் பணம் வைத்து விளையாடப்படும் விளையாட்டுகளுக்கு முழுமையான தடை விதிக்கிறது. இதன் விளைவாக, நசாரா டெக் பங்குகள் 17.58%-க்கும் மேல் சரிவைச் சந்தித்தன. இந்த சரியான நேரத்தில் ரேகா ஜுன்ஜுன்வாலா வெளியேறியதன் மூலம், அவர் தோராயமாக ரூ.334 கோடி நஷ்டத்தைத் தவிர்த்துள்ளார். இது 'உள் வர்த்தகமா' அல்லது 'தற்செயலா' என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

ஆன்லைன் கேமிங் மசோதா.. ரூ.334 கோடி சேமித்த ரேகா ஜுன்ஜுன்வாலா.!!

சமூக வலைத்தளங்களில் வெடித்த விவாதம்: இந்த செய்தி வெளியானதிலிருந்து, சமூக வலைத்தளங்களான X மற்றும் ரெடிட் போன்ற தளங்களில், இந்த விவகாரம் சூடான விவாதத்தைத் தூண்டியுள்ளது.

@Stock_marketIND என்ற கணக்கு, ரேகா ஜுன்ஜுன்வாலா பங்குகளை விற்ற தேதிகள் மற்றும் விவரங்களைப் பகிர, பலரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். பிரவீன் குமார் என்ற பயனர், பணக்காரர்களுக்கு எப்பொழுதும் சில தகவல்கள் ரகசியமாக முன்கூட்டியே கிடைக்கின்றன. இதுதான் கசப்பான உண்மை, என்று பதிவிட்டார். இதேபோல், விஷன் காட்கே என்பவர், சந்தையில் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான தகவல்கள் கிடைக்காது. இதுதான் செல்வத்தின் அளவிலும், வளர்ச்சியிலும் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டு, இந்தச் செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தார்.

பெரும்பாலானோர் இந்த கருத்தை ஆதரித்தாலும், ஒரு சிலர் இதற்கு விதிவிலக்காக கருத்து தெரிவித்தனர். விஷால் ஜெயின் என்ற பயனர், இது பணக்காரர்களைப் பற்றிய விஷயம் அல்ல. அந்த நேரத்தில் நசாரா டெக் பங்குகளை விற்பது என்பது ஒரு பொதுவான அறிவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு. நானும் என் வசம் இருந்த அனைத்துப் பங்குகளையும் ரூ.1,312 என்ற விலையில் விற்றேன் என்று கூறி, இது உள் தகவல்களால் அல்ல, சந்தையின் நிலவரத்தை உணர்ந்த முடிவென்று வாதிட்டார்.

இதற்கிடையில், @Stock_marketIND கணக்கு, ரேகா ஜுன்ஜுன்வாலாவின் பங்கு விற்பனை உள் வர்த்தகம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும், இது முதலீட்டுத் திட்டங்களை மறுசீரமைக்கும் ஒரு நடவடிக்கை" அல்லது புதிய ஒழுங்குமுறை விதிமுறைகள் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கலாம் என்றும் தெளிவுபடுத்தியது.

பங்கு விற்பனை விவரங்கள்: BSE மற்றும் NSE-ல் உள்ள மொத்த ஒப்பந்தத் தரவுகளின்படி, அமரர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் பெயரில் இருந்த 13 லட்சம் பங்குகள், சராசரியாக ரூ.1,225.19 விலையில் விற்கப்பட்டுள்ளன. மேலும், ஜூன் 13, 2025 அன்று, அவரது குடும்ப நிறுவனம் மூலம் 14,23,620 பங்குகள் விற்கப்பட்டதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த விற்பனைகளுக்குப் பிறகு, நசாரா டெக்கில் ரேகா ஜுன்ஜுன்வாலாவின் பங்கு உரிமை 5.07% அல்லது 44,45,120 பங்குகளாகக் குறைந்தது.

கடந்த ஒரு மாத காலத்தில், நசாரா டெக்னாலஜிஸ் பங்குகள் 19%-க்கும் அதிகமாக சரிந்துள்ளன. கடந்த ஐந்து வர்த்தக அமர்வுகளில் மட்டும் 17.58% சரிவைச் சந்தித்துள்ளது. இருப்பினும், கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு 37%-க்கும் அதிகமான வருமானத்தையும், கடந்த ஒரு ஆண்டில் 21.81% இலாபத்தையும் இந்த பங்குகள் அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+