முகேஷ் அம்பானி தலைமை தாங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், தனது பங்குதாரர்களுக்கு 1:1 போனஸ் வழங்குவது குறித்து ஆலோசிக்க இன்று இந்நிறுவனத்தின் நிர்வாக குழு கூடியது. இந்த கூட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 35 லட்சம் கோடி முதலீட்டாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படியே நிர்வாக குழு 1:1 விகித அடிப்படையில் போனஸ் பங்குகள் அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் பொருள், ஒரு முதலீட்டாளர் வைத்திருக்கும் ஒவ்வொரு பங்கிற்கும் ஒரு பங்கு இலவசமாகக் கொடுக்கப்படும். அப்படியானால் இதன் மூலம் அதிகம் லாபம் அடைவது முகேஷ் அம்பானி குடும்பம் தான். ஏன் தெரியுமா..?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் பங்கு இருப்புகளைப் பார்க்கும் போதும் முக்கியமான விஷயம் தெரிய வந்துள்ளது. இந்த வர்த்தக சாம்ராஜ்ஜியத்தில் ப்ரோமோட்டராக இருக்கும் முகேஷ் அம்பானி குடும்பமும், இக்குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனங்களும் சுமார் 50.3 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
இதில் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் 80,52,020 பங்குகள் அதாவது 0.12 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார். இதேபோல் அவரது மனைவி நீதா அம்பானி, மகள் ஈஷா அம்பானி, மகன்களான ஆனந்த் அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி ஆகிய 4 பேரும் ஒரு பங்கு அதிகமாக 8,052,021 பங்குகளை வைத்துள்ளனர்.
இவர்களோடு முகேஷ் அம்பானியின் தயார் கோகிலாபென் அம்பானி 15,741,322 பங்குகளை வைத்துள்ளார். இது கிட்டத்தட்ட முகேஷ் அம்பானி பங்கு இருப்பை காட்டிலும் 2 மடங்கு அதிகமாகும். இப்படி முகேஷ் அம்பானி குடும்பம் மட்டும் 56,001,426 பங்குகளை வைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து முகேஷ் அம்பானி குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் 49.48 சதவீதம் அதாவது 3,266,746,622 பங்குகளை வைத்துள்ளது. இப்படி மொத்தமாக முகேஷ் அம்பானி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் 3,322,748,048 பங்குகள் அதாவது 50.33 சதவீத பங்குகள் உள்ளது.
இது தற்போதைய 1:1 போனஸ் பங்குகள் மூலம் 332 கோடி பங்குகள் எண்ணிக்கை 664 கோடியாக அதிகரிக்க உள்ளது. ஆனால் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் ரீடைல் முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் பங்கு இருப்பை என்றால் வெறும் 10.4% மட்டுமே.
ஜூன் 2024 ஆம் நிலவரப்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ப்ரோமோட்டர் பிரிவின் மொத் பங்கு இருப்பின் விபரம்.
| பங்கு உரிமையாளர் | பங்கு இருப்பு (%) | பங்குகள் எண்ணிக்கை |
| ப்ரோமோட்டர் பங்கு இருப்பு (ஜூன் 2024) | 50.33 | 3,322,748,048 |
| தனிநபர்கள் | 0.85 | 56,001,426 |
| கோகிலாபென் அம்பானி | 0.24 | 15,741,322 |
| அனந்த் எம் அம்பானி | 0.12 | 8,052,021 |
| இஷா எம் அம்பானி | 0.12 | 8,052,021 |
| முகேஷ் டி அம்பானி | 0.12 | 8,052,020 |
| நீதா எம் அம்பானி | 0.12 | 8,052,021 |
| ஆகாஷ் எம் அம்பானி | 0.12 | 8,052,021 |
| மற்றவை | 49.48 | 3,266,746,622 |
| ஸ்ரீசக்ரா கமர்சியல்ஸ் எல்.எல்.பி | 11.2 | 739,599,829 |
| தத்வம் எண்டர்பிரைசஸ் எல்.எல்.பி | 8.26 | 545,569,460 |
| கருணா கமர்சியல்ஸ் எல்.எல்.பி | 8.26 | 545,569,460 |
| தேவர்ஷி கமர்சியல்ஸ் எல்.எல்.பி | 8.26 | 545,569,460 |
| ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட் | 4.6 | 304,014,856 |
| ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் | 3.65 | 240,942,006 |
| ரிலையன்ஸ் சேவைகள் மற்றும் ஹோல்டிங்ஸ் பெட்ரோலியம் அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தை மட்டுப்படுத்தியது | 2.6 | 171,882,820 |
| சமர்ஜித் எண்டர்பிரைசஸ் எல்எல்பி | 1.89 | 124,625,274 |
| ஸ்ரீஜி காம்டிரேட்் எல்.எல்.பி | 0.22 | 14,337,965 |
| ஸ்ரீகிருஷ்ணா டிரேட்காம் எல்எல்பி | 0.22 | 14,337,965 |
| ஸ்வார் எண்டர்பிரைசஸ் எல்எல்பி | 0.21 | 13,589,367 |
| ரிலையன்ஸ் நல சங்கம் | 0.08 | 5,344,997 |
| வசுபிரதா எண்டர்பிரைசஸ் எல்எல்பி | 0.02 | 1,315,925 |
| ரிஷிகேஷ் எண்டர்பிரைசஸ் எல்எல்பி | 0 | 215 |
| கன்கல் டிரேடிங் எல்எல்பி | 0 | 215 |
| நரஹரி எண்டர்பிரைசஸ் எல்எல்பி | 0 | 213 |
| நியூட்ரான் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் | 0 | 1,849 |
| பாவனா எண்டர்பிரைசஸ் எல்எல்பி | 0 | 215 |
| பினாகின் கமர்ஷியல்ஸ் பிரைவேட் லிமிடெட் | 0 | 108 |
| பீதாம்பர் எண்டர்பிரைசஸ் எல்எல்பி | 0 | 215 |
| ஸ்ரீபால் எண்டர்பிரைசஸ் எல்எல்பி | 0 | 216 |
| சக்ரதேவ் எண்டர்பிரைசஸ் எல்எல்பி | 0 | 216 |
| சினெர்ஜி சின்தெடிக்ஸ் பிரைவேட் லிமிடெட் | 0 | 215 |
| தரன் எண்டர்பிரைசஸ் எல்.எல்.பி | 0 | 215 |
| திரிலோகேஷ் கமர்சியல்ஸ் எல்.எல்.பி | 0 | 215 |
| விஷதன் எண்டர்பிரைசஸ் எல்எல்பி | 0 | 216 |
| ஜனார்தன் கமர்சியல்ஸ் எல்.எல்.பி | 0 | 216 |
| அபயபிரதா எண்டர்பிரைசஸ் எல்எல்பி | 0 | 215 |
| ஆதிசேஷ் எண்டர்பிரைசஸ் எல்.எல்.பி | 0 | 215 |
| அஜிதேஷ் எண்டர்பிரைசஸ் எல்.எல்.பி | 0 | 215 |
| பத்ரி கமர்சியல்ஸ் எல்.எல்.பி | 0 | 215 |
| புவனேஷ் எண்டர்பிரைசஸ் எல்எல்பி | 0 | 215 |
| கேரட் ஹோல்டிங்ஸ் அண்ட் டிரேடிங் கோ பிரைவேட் லிமிடெட் | 0 | 10,951 |
| சக்ரதர் கமர்சியல்ஸ் எல்.எல்.பி | 0 | 216 |
| சக்ரேஷ் எண்டர்பிரைசஸ் எல்.எல்.பி | 0 | 216 |
| சத்ரபுஜ் எண்டர்பிரைசஸ் எல்எல்பி | 0 | 216 |
| எலக்ஷி கமர்ஷியல்ஸ் பிரைவேட் லிமிடெட் | 0 | 108 |
| எக்ஸோடிக் ஆபிஸ்இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட் | 0 | 27,674 |
| ஃபியூச்சுரா கமர்ஷியல்ஸ் பிரைவேட் லிமிடெட் | 0 | 1,814 |
| ஹரிநாராயண் எண்டர்பிரைசஸ் எல்எல்பி | 0 | 216 |
| கமலாகர் எண்டர்பிரைசஸ் எல்.எல்.பி | 0 | 213 |
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications