முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஐபிஓ தான் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயமாக இருக்கிறது. இந்த சமயத்தில் ஜியோவின் தாய் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஐபிஓ-வை பலரும் நினைவு கூறுகின்றனர். 1977-ம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஐபிஓ வெளியிடப்பட்டது. அதில் முதலீடு செய்தவர்கள் அள்ள அள்ள குறையாத லாபம் பார்த்துள்ளனர்.
1977ஆம் ஆண்டில், முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முதல் ஐபிஓவை வெளியிட்டார். அப்போது ஒரு பங்கின் மதிப்பு வெறும் 10 ரூபாய் தான். அதாவது அன்றைய தேதிக்கு ஒரு நபர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ-வில் வெறும் 1,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால், அவருக்கு 100 பங்குகள் கிடைத்திருக்கும். இன்று ஒரு பங்கின் மதிப்பு 1215 ரூபாய். இதற்கு முன்பு ஒரு பங்கின் விலை 1595 ரூபாய் வரை கூட சென்றுள்ளது.

கடந்த பல தசாப்தங்களாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது வணிகத்தை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தியுள்ளது. பெட்ரோகெமிக்கல்ஸ், ரீடெய்ல் மற்றும் ஜியோ போன்ற டிஜிட்டல் சேவைகள் என பல்வேறு துறைகளில் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. இந்த வளர்ச்சி பயணத்தின் போது, நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு தொடர்ந்து போனஸ் பங்குகள் மற்றும் பங்கு பிரிப்பு போன்ற பல லாபகரமான நன்மைகளை வழங்கியுள்ளது. இதன் காரணமாக, 1977இல் வாங்கப்பட்ட 100 பங்குகளின் மதிப்பு தற்போது பல மடங்கு பெருகி இருக்கிறது.
ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கிய போனஸ் பங்குகள் அடிப்படையில் 100 பங்குகள் 4,096 பங்குகளாக உயர்ந்துள்ளன. மேலும் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகளும் கூடுதலாக கிடைத்தன. இவற்றை எல்லாம் வைத்து நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு உயர்வு காரணமாக, அன்று முதலீடு செய்யப்பட்ட 1,000 ரூபாய் இன்று வளர்ந்து 52 லட்சத்திற்கும் மேல் லாபத்தை ஈட்டி தந்துள்ளது.
இது இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் மிகப்பெரிய லாபம். 1000 ரூபாய் 50 ஆண்டுகளில் 52 லட்சம் ரூபாயாக மாறியுள்ளது என்பதே ரிலையன்ஸின் வளர்ச்சி நமக்கு உணர்த்தும் பாடம். 1977இல் ரிலையன்ஸ் ஐபிஓ-வில் இலட்சக்கணக்கான சில்லறை முதலீட்டாளர்கள் பங்கேற்றது இந்திய பொருளாதார வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. அந்த வகையில் தந்தையை தொடர்து மகன் முகேஷ் அம்பானி மிகப்பெரிய ஐபிஓ-வை வெளியிட உள்ளார்.
ஜியோ ஐபிஓவும் முதலீட்டாளர்களின் கவனம் பெற்றுள்ளது. எப்படியாவது இந்த பங்கினை வாங்க வேண்டும் என போட்டிகள் அதிகரித்துள்ளன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற ஒரு மேஜிக் லாபத்தை ஜியோவும் கொடுக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையே இதற்கு காரணம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

