அதானி குழுமத்திற்குப் போட்டியாகப் புதிய துறையில் இறங்குவதில் வேகத்தைக் குறைத்திருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன்று அடுத்தடுத்து 3 புதிய வர்த்தகத்தில் இறங்குவதைக் குறித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 8,9,10 இடத்திலேயே இருக்கும் நிலையில் கௌதம் அதானி 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்நிலையில் இந்த 3 புதிய வர்த்தகப் பிரிவுகளில் இறங்குவது குறித்த அறிவிப்புகள் முகேஷ் அம்பானியின் சொத்து உயர வழிவகுக்கும்.
ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ அதிவேக இண்டர்நெட் சேவையை அளிக்கவும், இந்தியாவின் டிஜிட்டல் சேவை தளத்தை மொத்தமா மாற்றவும் 5G சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காகச் சில வாரங்களுக்கு முன்பு ரிலையன்ஸ் ஜியோ சுமார் 88,078 கோடி ரூபாய் முதலீடு செய்து அதிகப்படியான 5ஜி அலைக்கற்றைக் கைப்பற்றியுள்ளது.
5ஜி சேவை
இந்நிலையில் இந்தியாவிலேயே முதல் நிறுவனமாக 5ஜி சேவையை அறிமுகம் செய்யவும் இந்தியா முழுக்க விரிவாக்கம் செய்யவும் சுமார் 2 லட்சம் கோடி ரூபாயை ரிலையன்ஸ் ஜியோ முதலீடு செய்ய உள்ளதாக முகேஷ் அம்பானி 45வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
தீபாவளி
ரிலையன்ஸ் ஜியோவின் புதிய 5ஜி சேவையைத் தீபாவளி பண்டிகைக்குள் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய 4 நகரங்களில் முதல்கட்டமாக அறிமுகம் செய்ய உள்ளது. டிசம்பர் 2023-க்குள் இந்தியாவில் ஒவ்வொரு டவுன், தாலுக்கா, கிராமம் வரையில் 5ஜி சேவை விரிவாக்கம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது ரிலையன்ஸ் ஜியோ.
ரிலையன்ஸ் ரீடைல்
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனங்கள் கொரோனா தொற்று காலத்தின் போது சொந்தமாகப் பொருட்களைத் தயாரித்துத் தனது கடைகளிலும், ஈகாமர்ஸ் தளத்திலும் விற்பனை செய்யத் துவங்கியது. இதில் அதிகப்படியான லாபம் கிடைத்த நிலையில் தற்போது மக்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்களைச் சொந்த பிராண்டில் இறங்க முடிவு செய்துள்ளது.
FMCG பிரிவு வர்த்தகம்
இதற்காக ரிலையன்ஸ் ரீடைல் புதிதாக FMCG பிரிவில் வர்த்தகத்தைத் துவங்க முடிவு செய்துள்ளது. இப்பிரிவின் வாயிலாக, இப்பிரிவு வர்த்தகத்தின் கீழ் ஜியோ தரம் வாய்ந்த பொருட்களை மலிவான விலையில் அளிக்க உள்ளது. இதன் மூலம் இந்திய மக்களின் தினசரி தேவையைப் பூர்த்திச் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்க உள்ளது ரிலையன்ஸ் ரீடைல்.
நியூ எனர்ஜி துறை
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது நியூ எனர்ஜி துறையில் அனைத்து தயாரிப்புகளையும் மலிவான விலையில் கொடுக்கும் வகையில் மொத்த நியூ எனர்ஜி வர்த்தகத்தைச் சந்தைக்குக் கொண்டு வந்து இணைக்கும் முக்கியச் சங்கிலியை புதிதாக அமைக்கப்பட உள்ள பவர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சாப்ட்வேர் சிஸ்டம்ஸ் வாயிலாகச் செய்ய உள்ளது.
பவர் எலக்ட்ரானிக்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது நியூ எனர்ஜி துறையின் கீழ் ஏற்கனவே 4 ஜிகா தொழிற்சாலைகளை அமைக்கும் பணிகளைச் செய்து வரும் நிலையில் தற்போது புதிதாக 5வது ஜிகா பேக்ட்ரியை பவர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவுக்காக உருவாக்க உள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications