முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நவ்யான் ஷிப்யார்ட் (Nauyaan Shipyard Private) என்ற நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளை வாங்கி இருக்கிறது. 382 கோடி மதிப்பீட்டில் இந்த பரிவர்த்தனை நடைபெற்று இருப்பது தெரியவந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் தன்னுடைய துணை நிறுவனத்தின் மூலம் நவ்யான் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை முதலில் வாங்கியது. அந்த விற்பனை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நவ்யான் ஷிப்யார்ட் நிறுவனத்தின் 74 சதவீத ஈக்விட்டி பங்குகளை 382.73 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தி இருப்பதாக ரிலையன்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் தாக்கல் செய்த ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது.

இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மற்றொரு துணை நிறுவனமாக நவ்யான் ஷிப்யார்டு நிறுவனம் மாறி இருக்கிறது. இந்த நிறுவனத்தை கைப்பற்றியதன் மூலம் கிரீன் நைட்ரஜன் உற்பத்தியில் ரிலையன்ஸ் நிறுவனம் தீவிரமாக இறங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தன்னுடைய கிரீன் எரிசக்தி திட்டங்களில் கவனம் செலுத்துவதாலேயே இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கி இருக்கிறது. வெறும் கப்பல்களை கட்டுவது மட்டுமில்லாமல் இந்த நிறுவனத்தை கைப்பற்றியதன் மூலம் குஜராத்தின் தாஹேஜில் உள்ள அதன் உற்பத்தி வளாகத்திற்கு அருகிலேயே இருக்கும் 138 ஏக்கர் குத்தகை நிலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வசம் வருகிறது.
கடலையொட்டிய பகுதியில் இந்த நிலம் அமைந்துள்ளது. இந்த நிலத்தை தன்னுடைய திட்டங்களுக்கு ரிலையன்ஸ் பயன்படுத்தி கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கப்பல் கட்டுமான பணிகளுக்காகவும் ஹைட்ரஜன் எலெக்ட்ரோலைசர்கள் உற்பத்திக்காகவும் இந்த நிலத்தை பயன்படுத்தி கொள்வோம் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.
மின்சாரத்தை பயன்படுத்தி தண்ணீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரிப்பவையே எலெக்ட்ரோலைசர்கள் எனப்படுகின்றன. புதுப்பிக்கத்தக்க அல்லது அணுசக்தியிலிருந்து குறைந்த கார்பன் வெளியீட்டை கொண்ட ஹைட்ரஜன் உற்பத்தி செய்வதற்கான ஒரு முக்கியமான தொழில்நுட்பமாகும்.
இந்த பகுதியை கடல் சார்ந்த கிரீன் நைட்ரஜன் உற்பத்தி மையமாக மாற்ற ரிலையன்ஸ் திட்டமிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை பொறுத்தவரை மூன்றாவது காலாண்டில் நிகர லாபம் 18,540 கோடி ரூபாய் ஆகும். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 17,265 கோடியாக இருந்தது. தற்போது இது 7 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதேபோல நிகர வருமானம் என்பது மூன்றாவது காலாண்டில் 2.40 லட்சம் கோடிகளாக இருக்கிறது இது அதற்கு முந்தைய ஆண்டு மூன்றாவது காலாண்டில் 2.25 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 6.7 சதவீதம் என வருமானம் உயர்ந்துள்ளது.மார்ச் 21ஆம் தேதி அன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு மும்பை பங்குச்சந்தையில் 1277 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications