இந்திய வர்த்தக சந்தையில் ஒவ்வொரு வருடமும் பெரும் திருவிழா போல் கொண்டாடப்படும் பெரிய நிறுவனங்களின் வருடாந்திர கூட்டங்களில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எப்போதுமே கொஞ்சம் ஸ்பெஷல் தான். அந்த வகையில் இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 46வது வருடாந்திர கூட்டம் நடக்க உள்ளதால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் முதல் சக போட்டி நிறுவனங்களும் எதிர்நோக்கி காத்துக்கொண்டு இருக்கிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சமீபத்தில் தனது நிதியியல் சேவை பிரிவை தனியாக பிரித்து பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. இனால் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் பெரிய அளவிலான சரிவை தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது. இதேபோல் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியாமல் முதலீட்டாளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜியோ பைனான்சியல் நிறுவனத்தின் எதிர்கால திட்டம் என்ன..? அதன் ரோடு மேப் என்ன..? ஆகியவற்றை விவரிக்கும். ஏற்கனவே மியூச்சுவல் பண்ட் துறையில் இறங்குவதற்காக அமெரிக்காவின் பிளாக்ராக் உடனான கூட்டணியும், அதன் மென்பொருள் பயன்படுத்துவதாக கூறப்பட்டாலும் எப்போதும் மியூச்சவல் பண்ட் முதலீட்டு திட்டங்களை அறிவிக்கப்போகிறது, இதன் ப்ளூபிரின்ட் என்ன என்பது குறித்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோ பைனான்சியல் நிறுவனத்தின் டிமெர்ஜர் வெற்றிகரமான திட்டமாக பார்க்கப்படும் வேளையில், இதை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடைல் ஐபிஓ வெளியிடுவது குறித்த அறிவிப்புகள் அல்லது அதுக்குறித்த திட்டம் பற்றி இன்று கட்டாயம் வெளியாக வாய்ப்பு உள்ளது. மேலும் ரிலையன்ஸ் ரீடைல் சமீபத்தில் சுமார் 8 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பீட்டை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 5ஜி சேவை நாடு முழுவதும் அளிக்க துவங்கியுள்ள நிலையில், இத்துறையில் பதிவு செய்யப்பட்டு வளர்ச்சி குறித்த விபகரங்கள் வெளியிடும். இதேபோல் 5ஜி சார்ந்த சேவைகளை அடுத்தடுத்து வெளியிட உள்ளதால் அதை சார்ந்த அறிவிப்புகள் வெளியாகலாம். குறிப்பாக பிராண்ட்பேன்ட் சேவையான ஏர்ஃபைபர், புதிய 5ஜி டெலிகாம் திட்டங்கள், 5ஜி டிஜிட்டல் சேவைகள், 5ஜி ஸ்மார்ட்போன் அல்லது பியூச்சர் போன் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

அனைத்தையும் விட முக்கியமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் அதிகாரம் யாருக்கு செல்ல உள்ளது என்பது குறித்தும், முகேஷ் அம்பானிக்கு பின்பு உயர்மட்ட அதிகாரம் யாருக்கு என்பது குறித்து அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது. இதற்கான அவசியம் என்ன..?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் பெரும் தொகையை முதலீடு செய்து கிரீன் எனர்ஜி துறையில் இயங்கி வரும் வேளையில், கடந்த 1 வருடத்தில் இத்துறையில் எந்த அளவுக்கு முன்னேறியுள்ளது..? இத்துறையில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம்..? ஆகியவற்றை இன்றைய வருடாந்திர கூட்டத்தில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications