இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ 2016ல் அறிமுகம் செய்யப்பட்ட போதே 4ஜி சேவை மட்டுமான ஸ்பெக்டரம் கொண்டு களத்தில் இறங்கியது. ஜியோ-வின் இலவச சேவைகள் மூலம் யாரும் எதிர்பாராத வளர்ச்சியை பதிவு செய்த ஜியோ தற்போது 5ஜி சேவையை அறிமுகம் செய்து இதை சார்ந்து பல சேவைகளை அறிமுகம் செய்த காரணத்தால் 2ஜி சேவைக்கு மூடுவிழா காண உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே 2ஜி சேவை வாடிக்கையாளர்களை 4ஜி மற்றும் 5ஜி-க்கு கொண்டு வருவதற்காக மிகவும் மவிவு விலையில் ஸ்மார்ட்போன், பியூச்சர் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக பிராட்பேண்ட் சேவையிலும் 5ஜி சேவை கொண்டு வர ஜியோ ஏர்ஃபைபர் சேவையை செப் 19 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.

5ஜி சேவைகளை பயன்படுத்தும் இந்திய மக்களில் சுமார் 85 சதவீதம் பேர் ஜியோ வாடிக்கையாளர்கள் தான், மேலும் ஒவ்வொரு 10 நொடிக்கு ஒரு புதிய 5ஜி வாடிக்கையாளர்களை சேர்த்து வருகிறது ஜியோ. வருகிற டிசம்பர் மாதத்திற்குள் ஜியோ 10 லட்சம் வாடிக்கையாளர்களை 5ஜி பிரிவில் மட்டுமே பெறும்.
ஜியோ 5ஜி சேவை அறிமுகம் செய்து வெறும் 9 மாதத்தில் இந்தியாவில் 96 சதவீத சென்சஸ் டவுன்களில் 5ஜி சேவை செயல்பட துவங்கியுள்ளது, டிசம்பர் 2023 க்குள் இந்தியா முழுவதும் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் யாரும் அசைக்க முடியா இடத்தை ஜியோ 5ஜி சேவையில் பெற உள்ளது.
ஜியோஃபைபர் பிராட்பேண்ட் சேவையில் தற்போது சுமார் 10 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது, இவர்கள் சராசரியாக மாதம் 280 ஜிபி-க்கு அதிகமான டேட்டா பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல் மொபைல் டேட்டா பயன்படுத்து 2016க்கு பின்பு 10 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
ஜியோ 5ஜி சேவை விவசாயம், கல்வி, ஹெல்த்கேர், MSME துறையிலும் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஜியோ ஏர்ஃபைபர் திட்டம் மூலம் அடுத்த 3 வருடத்தில் 200 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளை அடைய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இதேபோல் ஜியோ 5ஜி மற்றும் ஏர்ஃபைபர் மூலம் பொழுதுபோக்கு, டிவி, ஸ்மார்ட் ஹோம் செயலிகள், கேமிங் என பல துறையில் இறங்க உள்ளது. இந்த வேகமான வளர்ச்சி இந்தியாவின் Home Broadband சேவையை மொத்தமாக மாற்றியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் விரைவில் 2ஜி சேவைக்கு மூடுவிழா காண உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications