இந்திய ரீடைல் சந்தையில் மகிப்பெரிய வர்த்தகமாக இருக்கும் ரிலையன்ஸ் - பியூச்சர் குரூப் டீல்க்கு அமேசான் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் நிலையில் மாத கணக்கில் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அடுத்தடுத்து வழக்கு தொடுத்து வருகிறது.
இந்நிலையில் பியூச்சர் குரூப் பெற்ற கடனுக்குத் தவணையைச் செலுத்த முடியாமல் தவித்து வருகிறது. தவணையைத் தெலுத்த முடியாத காரணத்தால் வங்கிகள் பியூச்சர் குழும நிறுவனத்தைத் திவாலாக அறிவித்து, நிறுவனம் பெற்ற கடனை வாராக் கடனாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது.
இந்நிலையில் பியூச்சர் குரூப் அமேசான் நிதியுதவியை மறுத்த நிலையில் கடன் தவணையைச் செலுத்தக் கால அவகாசம் கேட்டது. இந்த வழக்கின் விசாரணையில் வங்கிகள் ஒரு முக்கியமான ஐடியாவை கொடுத்துள்ளது.
பியூச்சர் குரூப்
பியூச்சர் குரூப் நிறுவனத்திற்குச் சுமார் 27 வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் கொடுத்துள்ளது, இந்தக் கடனை பியூச்சர் குரூப் நிறுவனம் விற்பனை செய்யப்படாமல் மட்டுமே பெற முடியும். இதனால் இந்நிறுவனத்திற்குக் கடன் கொடுத்த அனைத்து வங்கிகளும் இணைந்து போராடி வருகிறது.
ஏலம்
இந்நிலையில் இன்று நடந்த வழக்கு விசாரணையில் வங்கிகள் குழு ரிலையன்ஸ் - பியூச்சர் - அமேசான் மத்தியிலான பிரச்சனையைத் தீர்க்க ஓரே வழி அமேசான் மற்றும் ரிலையன்ஸ், பியூச்சர் குரூப்-ஐ 17000 கோடி ரூபாய் என்ற அடிப்படையான விலையை வைத்து ஏலம் மூலம் முடிவு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது.
27 வங்கிகள் குழு
27 வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் இருக்கும் இந்த வங்கி குழுவில் 10 தனியார் வங்கிகளும் 3 வெளிநாட்டு வங்கிகளும் உள்ளது. தற்போது பியூச்சர் குரூப் மற்றும் அமேசான் தொடர்ந்து வழக்குத் தொடுத்து வரும் காரணத்தால் விற்பனை செய்ய முடியாமலும், கடனை வசூலிக்க முடியாமலும் உள்ளது.
வாராக் கடன்
மேலும் பியூச்சர் குரூப் வாராக் கடனாக அறிவிக்கப்பட்டால் தற்போது வங்கி தரப்பு கோரியுள்ள 17,000 கோடி ரூபாய் கூடக் கிடைக்காது என்பது தான் வங்கிகளின் கவலை. இதனால் ரிலையன்ஸ் - பியூச்சர் - அமேசான் மத்தியிலான பிரச்சனையை வரிவாக முடிக்க இந்த ஐடியாவை முன்வைத்துள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications