இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், பல தைவான் நிறுவனங்கள் இத்துறையில் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் தற்போது இந்திய நிறுவனங்களும் களத்தில் இறங்கியுள்ளது.
ஏற்கனவே எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறை டாடா குழுமம் இறங்கியுள்ள நிலையில் தற்போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் களத்தில் இறங்கியுள்ளது. சீனாவில் இருந்து பல நிறுவனங்கள் தற்போது இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்கும் தனது உற்பத்தி தளத்தை மாற்றி வரும் நிலையில், இந்த வாய்ப்பை கைப்பற்றிட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முடிவு செய்துள்ளது.
இதற்காக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சன்மினா கார்ப்ரேஷன் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னையில் பெரும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கிளை நிறுவனமான RSBVL மற்றும் அமெரிக்காவின் சன்மினா கார்ப்ரேஷன் பல மாதங்களுக்கு முன்பே கூட்டணி நிறுவனத்தை உருவாக்குவது என முடிவு செய்யப்பட்ட நிலையில், இன்று வெற்றிகரமாக அதன் பணிகள் முடிவடைந்துள்ளது.
3300 கோடி ரூபாய்
இப்புதிய கூட்டணி நிறுவனம் சுமார் 3300 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய முதலீட்டுத் தொகையில் சென்னையில் சன்மினா கார்ப்ரேஷன் வைத்திருக்கும் 100 ஏக்கர் கேம்பஸ்-ல் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்தக் கூட்டணியில் Reliance Strategic Business Ventures Limited (RSBVL) 50.1 சதவீத பங்குகளையும், சான்மினா 49.9 சதவீத பங்குகளையும் கொண்டு உள்ளது.
4ஜி மற்றும் 5ஜி டெலிகாம்
இக்கூட்டணியில் அமைய உள்ள தொழிற்சாலையில் முதல்கட்டமாக 4ஜி மற்றும் 5ஜி டெலிகாம் சேவைக்கான டெலிகாம் வன்பொருள் மற்றும் கருவிகளை இந்திய சந்தைக்கும், வெளிநாட்டு சந்தைக்காகவும் தயாரிக்க உள்ளது.
சன்மினா கார்ப்ரேஷன்
சன்மினா கார்ப்ரேஷன் சுமார் 40 வருடமாக அட்வான்ஸ் உற்பத்தி அனுபவம் கொண்டு உள்ளது, ரிலையன்ஸ் இந்திய வர்த்தகச் சந்தையில் பெரும்பாலான துறை சார்ந்த வர்த்தக அனுபவம் கொண்டு உள்ளது. இக்கூட்டணியில் அமைய உள்ள சென்னை தொழிற்சாலையின் நிர்வாகக் குழு சென்னையிலேயே தான் இருக்கும்.
எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி
இக்கூட்டணி மூலம் இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இத்தொழிற்சாலையில் 5ஜி, கிளவுட் இன்பரா, ஹைப்பர்ஸ்கேல் டேட்டா சென்டர்-க்கு தேவையான கம்யூனிகேஷன் கருவிகளை உற்பத்தி செய்துள்ளது. இதோடு மெடிக்கல் மற்றும் ஹெல்த்கேர் சிஸ்டம்ஸ், கிளீன்டெக், டிபென்ஸ், ஏரோஸ்பேஸ் ஆகிய துறை சார்ந்த கருவிகளையும் தயாரிக்க உள்ளது.


Click it and Unblock the Notifications