மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் பிரிவுக்கு தலைமை பொறுப்பு வகித்து வந்த தர்ஷன் மேத்தா அந்த பதவியில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம் ரிலையன்ஸ் பிராண்ட்ஸில் மேலாண்மை இயக்குனராக செயல்பட்டு வந்த தர்ஷன் மேத்தா அந்த பொறுப்பில் இருந்து விலகுகிறார்.
ரிலையன்ஸ் குழுமத்தின் பல்வேறு பிராண்டுகளையும் உருவாக்கி அவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் தர்ஷன் மேத்தா. தற்போது அவர் மேலாண் இயக்குனர் பதவியில் இருந்து விலகி ரிலையன்ஸ் குழுமத்தில் மென்டராக பணி செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தர்ஷன் மேத்தா அடுத்த தலைமுறை தலைவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார் என்றும் என்னென்ன தொழில் வாய்ப்புகள் எல்லாம் இருக்கிறது அவற்றை எப்படி ஆய்வு செய்ய வேண்டும் எப்படி அவற்றை செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து அவர்களை வழிநடத்துவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இருந்தாலும் தர்ஷன் மேத்தா எம்டி பதவிலிருந்து விலகுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் என்பது 2007 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி குழுமத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் ஆரம்ப கட்டத்தில் வேலைக்கு சேர்ந்தவர்களில் தர்ஷன் தர்ஷன் மேத்தாவும் ஒருவர். ரிலையன்ஸ் ரீடைல் தொழிலை விரிவாக்கம் செய்வதில் முக்கிய பங்காற்றியவர் இவர்.
குறிப்பாக ப்ரீமியம் மற்றும் லக்சூரி பிரிவுகளில் ரிலையன்ஸ்க்கு சொந்தமான பிராண்டுகளை உருவாக்கியதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இவருடைய தலைமையின் கீழ் தான் ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் பல்வேறு உலக பிராண்டுகளோடு கைகோர்த்து அவற்றின் பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்தது.
தற்போது 90 சர்வதேச நிறுவனங்கள் ரிலையன்ஸ் பிராண்ட்ஸின் கீழ் இந்தியாவில் தங்களுடைய பொருட்களை விற்பனை செய்கின்றன. இவர் இந்த பதவியில் இருந்து விலக இருப்பதாக அறிவித்ததை எடுத்து புதிதாக யார் அந்த பொறுப்பினை ஏற்பார் என்ற என்ற விவரங்கள் வெளியாகவில்லை.
தற்போதைக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளாக இருக்கும் பிரதிக் மாத்தூர் மற்றும் சுமித் யாதவ் ஆகியோர் தர்ஷன் மேத்தாவின் பணிகளை இணைந்து மேற்கொள்வார்கள் என சொல்லப்படுகிறது. ரிலையன்ஸ் ரீடைல் பிரிவுக்கு முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி தான் தலைமை வகிக்கிறார். ஆனால் இந்த நிறுவனம் நஷ்டத்தில் தான் இயங்கி வருகிறது.
ரிலையன்ஸ் ரீடைல் தொழிலை விரிவு படுத்தினாலும் 2023 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் 185 கோடி ரூபாய் நஷ்டத்தையும் நடப்பு ஆண்டில் 288 கோடி நஷ்டத்தையும் சந்தித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications